Showing posts with label சின்னதா.... கதை மாதிரி..... Show all posts
Showing posts with label சின்னதா.... கதை மாதிரி..... Show all posts

Thursday, July 14, 2011

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்...

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

(எப்போதோ எழுதியது......)

Friday, September 25, 2009

ப‌த்தினி....


மாலினி, நீ எனக்கு துரோகம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாத்ததில்ல......என்று ஆவேசமாய் பாய்ந்து அவள் கழுத்தை பிடித்தான் வினோத்....

ஹக்..ஹ்ம்ம்..திக்கி திணறி..... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க வினோத்.... நீங்க நெனைக்கற மாதிரி எதுவும் நடக்கல என்றாள் மாலினி.
இன்னும் என்ன நடக்கணும்.... அதான் இப்போ நானே நேர்ல பாத்துட்டேனே... இனிமேலும் நீ சொல்றத நம்பறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.... நீயும் ஒன்னோட பாஸும் ஆபீசில தான் ஒண்ணா கூத்து அடிச்சீங்க....ஆனா, இப்போ நான் ஊருக்கு போயிருக்கேன்ற தைரியத்துல நம்ம பெட்ரூம்லையே நடக்குதே?

நான் டூர் போயிட்டு ஒரு நாள் முன்னாடியே வரலேன்னா, நீங்க பண்ற இந்த அராஜகம் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்...என்றான் வினோத்....

சீ... உங்க விபரீத கற்பனையை கொஞ்சம் நிறுத்தறீங்களா?? என்னோட பாஸ் அஷோக் ஈஸ் ஜெம் ஆப் எ பர்சன். நான் உங்களோட காதல் மனைவி.... எங்க மேல இப்படி அபாண்டமா பழிபோடறதுக்கு ஒங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்று கண்ணீரோடு மாலினி சொன்னாள்.

சாயங்காலம் என்ன நடந்துதுன்னா, இன்னிக்கி ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போது என்னோட வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு..... நம்ம முருகன் மெக்கானிக் ஷெட்டுக்கு ஃபோன் பண்ணி, வண்டிய சர்வீஸீக்கு குடுத்துட்டு ஆட்டோல வீட்டுக்கு வர்றதா தான் ப்ளான்... அப்போதான், நான் ஆட்டோக்கு வெயிட் பண்றத பாத்துட்டு, அசோக் என்ன வீட்டுல டிராப் பண்றேன்ன்னு சொன்னார்.

சரி, இவ்ளோ தூரம் வந்தாரே, ஒரு காபி சாப்பிட்டு போங்கன்னு சொல்லி, நான்தான் அவர உள்ள கூட்டிட்டு வந்தேன்.... மொத மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்தவர், நம்ம கல்யாண ஆல்பம் பாக்கணும்னு சொன்னார்....

உடனே, பெட்ரூம் அலமாரில ஆல்பம் இருக்கறத காட்டறதுக்கு பெட்ரூம் வரைக்கும் வந்தேன்.....அவர் ஆல்பம் எடுத்தார்.... அத எடுத்துட்டு வெளில வரும்போது தான், நீங்க கரெக்டா வீட்டுக்குள்ள வந்தீங்க..... போதுமா, இதுதான் நடந்தது என்றாள் மாலினி.

சரிதான் நிறுத்துடி .... அழுதோ, சத்தம் போட்டோ ஒரு விஷயத்த சொன்னா நீ "பத்தினி" ஆயிடுவியா? உன்மேல எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது....

நெறைய பேரு என்கிட்டே கூட அரசால் புரசலா சொல்லி இருந்தாங்க. அப்போல்லாம் நான் நம்பல, இன்னிக்கு நானே நேர்ல பார்த்தப்போ, அது சரிதான்னு ஆயிடுச்சு......

இனிமே, இந்த வீட்டுல இல்ல, இந்த உலகத்துல இருக்கறதுக்கு கூட உனக்கு தகுதி இல்ல.... உன்ன போல பொண்ணுங்களுக்கு எல்லாம், இந்த தண்டனைதான் சரி, இன்னிக்கோட உன் கதைய முடிச்சுடறேன் என்றபடி பாய்ந்து அவள் கழுத்தை இறுக்கினான்.....

இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடந்தவற்றை அமைதியாக பார்த்து கொண்டிருந்த அசோக், பாய்ந்து வந்து, சார்... நான் சொல்றத கேளுங்க என்றவாறு வினோத்தின் கையை விலக்க முயற்சித்தான்.....

***********

"பத்தினி" - ஸ்பான்ஸர்ட் பை........... என்று விளம்பரதார்களின் பெயர்களை தொலைக்காட்சி கூவி கொண்டிருந்தது....