Tuesday, April 28, 2009

மெகா காமெடி (பகுதி 1)


இன்றைய மொக்கை நிகழ்ச்சி - ஜோக்கிரிஸ் @ பக்கிரிஸ் டாட் காம்.
இன்றைய நிகழ்ச்சிக்கு வந்து இருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

1. தவளை வாய் பேரரசு
2. கில்மா எஸ்.ஜே.சூர்யா
3. விரல் வித்தை சிம்பு
4. கரடி ராஜேந்தர்
5. கேப்டன் விஜயகாந்த்
6. டமில் குடிதாங்கி

பேரரசு : எல்லாருக்கும் வணக்கம். கேப்டன், நம்ம "தர்மபுரி" படம்தான் படுத்துடிச்சி. வேணும்னா, மறுபடியும், "மர்மபுரி"ந்னு பேரு வச்சு ஒரு புது ரூட்டுல கதை ரெடி பண்ணுவோம். ஒப்பனின் சீன்ல, உங்கள் ஒரு பீரங்கியால சுடராங்க. உங்கள அடிச்ச அந்த பீரங்கி குண்டு, வில்லன் இருக்கற ஊர்ல போயி விழுது. அத பாத்து வில்லன் எல்லாம் அலறராங்க.

கேப்டன் : டேய், நீ இன்னும் ரிடர்ட் ஆகலியாடா....... 1992-ல ஊர்ல இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த. 1993-ல டீ கடையில இருந்து பன் திருடி, அடி வாங்கின... 1994-ல போஸ்டர் ஒட்டுன, அப்புறம் அந்த பிரஸ் ஒனரோட பொண்ண கசமுசா பண்ணினதால அங்கேயும் அடிச்சு தொரத்துனாங்க...... அப்புறம் பத்து வருசம் எங்கேயோ போயி, என்னவோ பண்ணி, 2003-ல சினிமா உள்ள வந்த.. ரெண்டு, மூணு படம் பண்ணின, மறுபடியும் காணாம போயிட்ட..........

பேரரசு : போதும் தலைவா, போதும்..இந்தாங்க சோடா குடிங்க..... இப்படி பேசி பேசியே, எல்லா படத்தோட ரீலும் அறுந்து தொங்கினது ஞாபகம் வரலியா?? இந்த பழக்கத்த நீங்க இன்னும் விடலியா?? நாடு தாங்குமா, மக்கள் தாங்குவாங்களா, யோசிங்க கேப்டன்.

கேப்டன் : டேய் பரதேசி, பேசினாதாண்டா தமிழன்.... என் கல்யாண மண்டபத்த இடிச்சுட்ட இல்ல... அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.. மௌண்ட் ரோட்ல நீச்சல் குளம் கட்டுவேன்....

பேரரசு : என்னது, மண்டபமா, நான் இடிச்சேனா?? அய்யோ அய்யோ, ஒரு எழவும் புரியலியே...... "மரியாதை" படத்தோட பாக்ஸ் ஆஃபீஸ் எஃபக்டா?? மௌண்ட் ரோடு நடுவுல நீச்சல் குளமா, அம்மா சொன்னது சரியாத்தான் இருக்கு.... நேத்து நைட்டு அடிச்சது இன்னும் தெளியல போல இருக்கு.......

எஸ்.ஜே. சூர்யா : ஹலோ, அத விடுங்க...... நான் இப்போ ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் திருமகன் பண்ணியாச்சு, என்னது .......போணி ஆகலியா... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்... அடுத்து இப்போ "மருமகன்" மாடர்ன் சிட்டி ஸ்டோரி......ஐஷ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், ஷ்ரெயா சரண்னு மூணு ஹீரோயின். ஒப்பனிங்க் சீன்ல அமெரிக்கால இருந்து வரேன். கம்ப்யூட்டர் எஞ்சினியர் ரோல் எனக்கு.

சிம்பு : மாப்ஸ், நிறுத்து... நிறுத்து........ ரொம்ப சுத்தாத....... யாரு காதுலயாவது விழுந்தா அப்புறம் ஆட்டோல ஏத்தி நேரா கீழ்ப்பாக்கம் கொண்டு போயிட போறாங்க.......ஒன்ன, உள்ளூர்ல பாக்கரவனே பயந்து செதர்ராங்க..... இதுல பாலிவுட் டகால்டி எல்லாம் எதுக்கு..... அதெல்லாம், என்ன போல ரொமாண்டிக் ஹீரோ பண்ண் வேண்டியது மாப்ஸ்...........

டி.ஆர்.: கொலைவெறி பாய்ச்சலில் உள்ளே பாய்கிறார்....... ஏ, நகரு நகரு, விலகு விலகு, வரது யாரு டி.ஆரு. டேய், நான் ப்ண்ணுவேன் ரகள..... வேணாம்னா கொடு ஒன் மகள.......
பேரரசு : அய்யோ, கரடியும் அவன் பையனும் பண்ற இம்சை தாங்க முடியலியே .... பேசாம ரெண்டு பேரையும் போட்டு ஒரு படம் எடுத்து கதைய முடிச்சுடுவோமா? அதுதான் நமக்கு கை வந்த கலை ஆச்சே......
மனுசங்கள போட்டு படம் எடுக்கற டைரக்டர் யாருமே இந்த கரடிய வச்சு படம் எடுக்க போறதுல்ல..அதனால நானே ஒங்கள போட்டு "பீராச்சாமி"ன்னு படம் எடுக்கலாம்னு இருக்கேன்......
ஓப்பனிங் சீன்ல, நீங்க நேரா ஒரு டாஸ்மாக் கடைக்கு போய், வில்லன எல்லாம் அடிச்சுட்டு சொல்ரீங்க......பீருல மோரு ஊத்தி அடிச்சா அவன் வீராச்சாமி, ஆனா பீரையே மோரா அடிச்சா அவந்தான் இந்த பீராச்சாமி.............

டி.ஆர் : நான் கொஞ்ச நாளா எடுத்தேன் ரெஸ்டு.... நான் அடுத்து தரப்போற படம் பெஸ்டு.. கிழக்குன்னா ஈஸ்டு....... மேற்குன்னா வெஸ்டு... என்ன தவிர எல்லாரும் வேஸ்டு.

டமில் குடிதாங்கி : யாரங்கே... எங்கும் தமிழ், எதிலும் தமிழ். தமிழன்றி ஒரு வார்த்தை கூட என் காதில் விழலாகாது.... மரம் வெட்டுவோம், ரோடு வெட்டுவோம்....மக்களை அல்லல்படுத்துவோம்.... இதுவே எங்கள் கொள்கை.........

டி.ஆர் : வாழ்வே மாயம். டப்பால பெருங்காயம்....சாம்பார்ல வெங்காயாம்.. கடல்ல அலை எப்போ ஒயும்.

எஸ்.ஜே.சூர்யா: டப்பால பெருங்காயம்...சாம்பார்ல வெங்காயம்..லேசா அடிபட்டா வெறுங்காயம். இவரோட வீராசாமி படம் பார்த்து விட்டு, எனக்கு கூட கழண்டுடுச்சு நட்டு.

டி.ஆர் : டேய். இவன் என்ன பண்றான் இமிடேட்டு.....இவன கிட்ட கூப்பிட்டு, நாலு தட்டு தட்டு... திருப்பி சொன்னா ரிபீட்டு.. சொல்லலேன்னா அபீட்டு.......ஏ, டண்டணக்கா, டனக்கு டக்கா........

சிம்பு : யப்பா, நீ இந்த டகால்டிய நிறுத்தவே மாட்டியா... மானம் போகுதப்பா.........
டி.ஆர். : கண்ணீருடன்....... நிறுத்திட்டேன் தம்பி, நிறுத்திட்டேன்.......

கேப்டன் : தம்பி சிம்பு, நாம ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்..... படம் பேரு "பப்படம்"...சூட்டிங்க் ஃபுல்லா உக்கடம்......சே .... இந்த கருமாந்திரம் புடிச்ச கரடிய பாத்து பாத்து நமக்கும் அப்படியே பேச்சு வருது..... பப்படம், உக்கடம்னு.....

படத்தோட கதை கேளு தம்பி சிம்பு.... நீயும் நானும் "கொட்டாச்சி" கிராமத்துல இருந்து கட்ட வண்டி ஏறி, மெட்ராசுக்கு வரோம்...கொட்டாச்சில நம்ம குடும்பத்த அழிச்ச வில்லனுங்கள தேடிட்டு.......எனக்கு ஒரு 15 ஃபைட்டு.... ஒனக்கு ஒரு 5 ஃபைட்டு..... 15 ரீலு படத்துல மொத்தம் 20 ஃபைட்டு.... ரயில்ல, மலை மேல....கடல்ல...மேட்டுல...பள்ளத்துல... இப்படி பாக்கற எடத்துல எல்லாம் ஃபைட்டு வச்சு பட்டைய கெளப்புவோம் ..... மொத்தம் 10 ஃபைட்டு மாஸ்டருங்க இந்த படத்துல நம்மளோட வேல செய்வாங்க..........

சிம்பு : அண்ணே, சொல்லுறேன்னு தப்பா நெனக்காதீங்க... இப்போத்தான் உங்களோட "மரியாதை" படம் ரிலீஸ் ஆகி, ரெண்டு ஷோ முடிஞ்சு, பொட்டி எல்லாம் திரும்பி வந்துட்டு இருக்காம்.. ப்ரொட்யுசர் சட்டைய கிழிச்சுட்டு ரோட்டுல திரியராறாம்.....எதுக்கும், நீங்க கொஞ்ச நாளு அந்த ஆளோட கண்ணுல படாம விருத்தாசலம் போயிடுங்க.... தப்பிச்ச மாதிரியும் இருக்கும், தொகுதிய பாத்த மாதிரியும் இருக்கும்.....

கேப்டன் : யேய்..... நான் பச்சை தமிழன்....நீல தமிழன்.... மஞ்சல் தமிழன்.... சிவப்பு தமிழன்..........சூட்டிங்க் போனா கூட எம்.ஜி.யார் வண்டிய தான் எடுத்துட்டு போறேன்....நான் எது பண்ணினாலும் ஒரு அர்த்தம் இருக்கும்......நாளைய தமிழ்நாடு என் கையிலதான்.... அப்போ வருசத்துக்கு 10 படம் நடிப்பேன்....எல்லாருக்கும் ஃப்ரீ ரேசன் குடுப்பேன்....ஃப்ரீ ரேடியோ....

தமிழ்குடிதாங்கி : அய்யகோ...இவன் தொல்லை தாங்க முடியவில்லையே..... சரி இந்த வசனம் எடுத்து விடுவோம்.....அப்பவாவது நிறுத்துகிறானா என்று பார்ப்போம்... தம்பி, யாரோ ராமாவரம் தோட்டத்தில் இருந்து, ஒரு வண்டி காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்களாம்.... கேள்விப்பட்டீர்களா??

கேப்டன் : இந்த நீல, சிகப்பு, பச்சை எம்.ஜி.ஆர் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டான்...ஏன்னா, என்னோட கூட்டணி இப்போ மக்களோட......இந்த அரசாங்கம், என் தொகுதிக்கு எதுவுமே பண்ணல.....
நான் கூட பரிதாபப்பட்டு இவங்கள காப்பாத்த நெனச்சுத்தான், என்னோட "மரியாதை" படத்துல இங்க ரிலீஸ் பண்ணல....எங்க ஊர் ரேசன் கடையில மக்களுக்கு அஸ்கான்னு சொல்லி, உப்ப போட்டாங்களாம்..... இதுக்கு இவிங்க பதில் சொல்லியே ஆகணும்.

எஸ்.ஜெ.சூர்யா : இந்த பில்ட்-அப் சூப்பரா இருக்கே... பேசாம நாம கூட ஒரு கட்சி ஆரம்பிக்கரோம்னு சொல்லி பாக்கலாமா?? இலவசமா பப்ளிசிட்டி ஆச்சே....நமீதா கிட்ட எப்படியாவது பேசி, கட்சியோட கொ.ப.செ. ஆக்கிருவோம்.....அப்படியே ஏ.ஆர்.ரகுமானுக்கு போன் போட்டு, "எந்திரன்" படத்துல ரஜினி ரிஜக்ட் பண்ணின பாட்டு இருந்தா, அதை ஆட்டை போட்டு, கட்சியோட கொள்கை பாட்டா மாத்திடுவோம்......

பேரரசு : தம்பி சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து, சிம்புவ செகண்ட் ஹீரோவா போட்டு, ஒரு படம் பண்ணுவோமா?? அந்த படம், என் "தர்மபுரி'ய விட பெட்டரா இருக்கும்....... உங்க முடிவு சொல்லுங்க....

கேப்டன் : டேய் பரதேசி, ஒனக்கு இன்னும் சரியா ஒரு நிமிஷம் டைம் தரேன்...அதுக்குள்ள, இந்த தமிழ்நாட்ட விட்டு ஓடி போயிடு.......ஏற்கனவே, "தர்மபுரி" ஊர் பக்கம் கூட போக முடியல..... நீ என்னிய வச்சு அந்த பேருல படம் எடுத்ததுல இருந்து..... இப்போ, அந்த தம்பி சூர்யாவ, காலி பண்ண ப்ளான் பண்றியா??

பேரரசு : இவன் கொடுமைய தாங்கலியே..... கேப்டன், நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் நடிப்போம்..... நீங்க ஹீரோ....நான் ஒங்க தம்பி... கதைப்படி, நீங்க என் அண்ணன், லாரி ட்ரைவர், நான் ஆட்டோ ட்ரைவர்.. நான் "பாட்சா" ஸ்டைலில விரல் எல்லாம் சுத்தி, சுத்தி டயலாக் பேசுவேன்.....

டி.ஆர் : என் பையன் சிம்பு, அவன் கிட்ட இருக்குது பண்பு, எப்போவுமே இல்ல வம்பு, என்னை நீ நம்பு....

எஸ்.ஜெ.சூர்யா : இந்த ஆளு கொடச்சல் தாங்க முடியலியே .... தப்பி தவறி கூட, இவங்ககிட்ட நயன்தாரா பேர சொல்ல கூடாது. சொன்னாக்க தொலைஞ்சோம்.... பழத்த நசுக்கி, கொட்டைய எடுத்துடுவானுங்க....

தமிழ்குடிதாங்கி : இந்த சினிமாவ ஒழிச்சாதான், நாடு உருப்படும்... இல்லேன்னா, இந்த டி.ஆர்.மாதிரி கரடி எல்லாம் ஹீரோ வேஷம் போட்டு மக்கள எல்லாம் பயமுறுத்தும்....சொல்ல வேண்டிய எடத்துல சொல்லி, இனிமே நைட் ஷோ மட்டும்தான் தியேட்டர்ல காட்டணும்னு சட்டம் போட சொல்லணும்...........

தமிழ்குடிதாங்கி பேச்சை கேட்டு எல்லாரும் தலைதெரிக்க ஓடுகிறார்கள்........... டி.ராஜேந்தர், ஜன்னல் வழியே வெளியே தாவுகிறார்............

18 comments:

தண்டோரா said...

ஜோக்குரி..போட்டு தாக்குரி...சிரிப்பு ஜாங்கிரி

R.Gopi said...

வாங்க "தல" தண்டோரா

தங்களின் அதிரடி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.......

இன்னும் நெறைய இருக்கு. அப்பப்ப வாங்க....... அப்படியே நம்மளோட இன்னொரு BLOGSPOT இருக்கு. அதையும் பாருங்க.

www.edakumadaku.blogspot.com

Subbu said...

நம்ம மருத்துவர் அய்யாவ கிண்டல் செய்தால் உங்கலை ஜாங்கிரி ஆக்கிவிடுவேன் என்பதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன் :))))))))))))

R.Gopi said...

//Subbu said...
நம்ம மருத்துவர் அய்யாவ கிண்டல் செய்தால் உங்கலை ஜாங்கிரி ஆக்கிவிடுவேன் என்பதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன் :))))))))))))//

***********

சுப்பு அண்ணா வாங்கோ.....

அரசியல்-ல இதெல்லாம் சாதாரணம் அண்ணா...........

விஷ்ணு. said...

கலக்கல் போங்க.


// டி.ஆர் : என் பையன் சிம்பு, அவன் கிட்ட இருக்குது பண்பு, எப்போவுமே இல்ல வம்பு, என்னை நீ நம்பு.... //

டி.ஆர் : டேய், என் மகன் சிம்பு, அவன் கிட்ட வைக்காத வம்பு, வச்சுகிட்ட ஆகிடுவ காம்பு,
வெளியில போக செம்பு, வீட்டுகுள்ள எப்பவுமே வம்பு.


// டி.ஆர். : கண்ணீருடன்....... நிறுத்திட்டேன் தம்பி, நிறுத்திட்டேன்....... //


டி.ஆர். : கண்ணீருடன்....... யப்பா பத்து வயசுல கெளதமி இடுப்புல கைய வச்ச அறியாத வயசுன்னு விட்டுடேன், பன்னி வயசுல அந்த பிள்ள நாயந்தாரவ கைமா பண்ணின வளருர வயசுன்னு விட்டுட்டேன், இப்படி சிட்டுகலெல்லாம் சீரழுச்ச போதெல்லாம், இந்த அப்பன் மானம் கப்பல் ஏறுமே நீ நினைக்கல, ஆனா இந்த அப்பன் பேசுறது மட்டும் உனக்கு மானம் போகுதா. ஏய் இப்ப கூட என்னால இந்த சிம்பு விட நல்ல டூயட்டு பாட முடியும் டா. நான் யாரு விஜய டி.ஆரு.

Anonymous said...

சூப்பர் :-)

R.Gopi said...

வாங்க விஷ்ணு

நீங்க எழுதினது படத்துல வச்ச, பட்டைய கெளப்பும்........ அதுவும் அந்த கரடி டயலாக்ஸ்........ யப்பா........

ஆஹா........ ஓஹோ.......

cdhurai said...

கோபி...

என்னால முடியலமா... வயிறு வலிக்குது...

ப்ளீஸ் அந்த விஜயகாந்த எப்படியாவது முதல்லவர் ஆகிடுங்க.... முடியல்ல ...அந்த அழு லொள்ளு... ம்ற்றும் ஜொள்ளு.

செல்லதுரை

R.Gopi said...

//cdhurai said...
கோபி...

என்னால முடியலமா... வயிறு வலிக்குது...

ப்ளீஸ் அந்த விஜயகாந்த எப்படியாவது முதல்லவர் ஆகிடுங்க.... முடியல்ல ...அந்த அழு லொள்ளு... ம்ற்றும் ஜொள்ளு.

செல்லதுரை//

****************

வாங்க "தல" செல்லதுரை

ஒங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?? என்னதான் நீங்க மதுரைகாரராக இருந்தாலும், கேப்டனை முதல்வராக்க சொல்வது ரெம்ப ஓவரு..........

டாஸ்மாக் கபாலி said...

அரும..,அரும..சிறந்த காமெடி டயலாக்ஸ். தமிழ்சினிமாவுக்கு டிஆரும்,அவரது மகனும் தான் சிறந்த காமெடியன்கள்,,தொடரட்டும் தங்கள் பணி..

ஞாயித்துகெழமக்கி முன்னாடி வர்றது சனி..

R.Gopi said...

//டாஸ்மாக் கபாலி said...
அரும..,அரும..சிறந்த காமெடி டயலாக்ஸ். தமிழ்சினிமாவுக்கு டிஆரும்,அவரது மகனும் தான் சிறந்த காமெடியன்கள்,,தொடரட்டும் தங்கள் பணி..

ஞாயித்துகெழமக்கி முன்னாடி வர்றது சனி..//

***********

டாஸ்மாக் கடைய வுட்டு நேர நம்ம பேட்டைக்கு வந்து குந்திகின கபாலி அண்ணன் வாழ்க..............

கபாலி அண்ணன் சொன்ன ரவுசு தத்துவம் சூப்பர் தல - அதான் அந்த "ஞாயித்துகெழமக்கி முன்னாடி வர்றது சனி" மேட்டர்............

ஜுர்கேன் க்ருகேர்..... said...

சிரிப்பு காட்டலாம் சரி...அதுக்குன்னு ஒரேடியாவா....
என்னா காமெடி ....... டி ஆரை தள்ளு தள்ளுன்னு தள்ளி ....தட்டி தரமட்டமாக்கீட்டிங்க!....அஹ்ஹ்க!!

R.Gopi said...

//ஜுர்கேன் க்ருகேர்..... said...
சிரிப்பு காட்டலாம் சரி...அதுக்குன்னு ஒரேடியாவா....
என்னா காமெடி ....... டி ஆரை தள்ளு தள்ளுன்னு தள்ளி ....தட்டி தரமட்டமாக்கீட்டிங்க!....அஹ்ஹ்க!!//

**********

வாங்க ஜூர்கேன் கருக் (இந்த பேரே சூப்பரா இருக்கே!!)

டி.ஆர். அவர்கள் காமெடி நடிப்பிற்காகவே பிறந்தவர்.......... அதை அவர் எல்லா படங்களிலும், மற்றும் இடங்களிலும் நிரூபிப்பவர்............

Anonymous said...

SUPER COMEDY ... EXCELLENT WORK ....KEEP IT UP ...AND POST REGULARLYYYYYYYYYYY

Abu said...

Dear Mr.Gopi,

Good Imagine & Good write up !

We are eagar to see such nakkal & comedy scripts from different cine & Political personalties.Espeically MGR & JJ & KK & Vaiko. Try your best to make good comedy script.

Wishes
ABU - Dubai.

கயல்விழி நடனம் said...

//நீங்க கொஞ்ச நாளு அந்த ஆளோட கண்ணுல படாம விருத்தாசலம் போயிடுங்க....

தப்பித்தவறி கூட தொகுதிக்குள்ள அவர் வந்துடப்போறாரு..நீங்க வேற..

கீழை ராஸா said...

தல..ஏன் இந்த கொலை வெறி...

R.Gopi said...

Thanks for your visit and encouraging comments :

Anony
Abu
Kayal Vizhi Nadanam
keezhai Raasa

Innum niraiya irukku. Ippothaan thirumbi vandhu irukken Indiala irundhu......