Saturday, April 4, 2009

"கேப்டன் தேர்தல் பிரச்சாரம்" - முறியடிக்க டெர்ரர் கூட்டணி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் "தே.மு.தி.க." தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" அறிவித்துள்ளதை தொடர்ந்து, அவரை வீழ்த்த பலவித வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக பலதரப்பு நம்பத்தகாத வட்டாரத்தில் இருந்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதில் பிரதானமாக :
மதுரைக்கார காமெடி புயல் வடிவேலு
"தமிழ் கரடி" விஜய டி.ராஜேந்தர்
இந்த இருவரும் கேப்டனை வீழ்த்த பலவேறு முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில், விஜயகாந்த் தன்னை பெரிய தியாகியாக முன்னிறுத்தி ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேச முயற்சித்ததை கண்டித்த விஜய டி.ராஜேந்தர், ஒரு மேடையில் விஜயகாந்தை புகழ்ந்து பாடிய கவிதை இதோ, உங்கள் பார்வைக்கு........

"இரவினில் பிராந்தி
கரங்களில் ஏந்தி
சுவைக்கவோ பூந்தி
தேடுவது சாந்தி
காலையில் வாந்தி
ஆக முடியுமா காந்தி"

வடிவேலு தன் பங்குக்கு சொன்னது :

"டேய், நான் மதுரக்காரன், அதுலயும் பெரிய ரோசக்காரன். எண்ணிய அடிச்சு அழவிட்ட ஒன்ன, இந்த தேர்தல்ல அழவைக்காம விடமாட்டேண்டா. ஒனக்கு ஒரு சீட்டு கூட கெடைக்காம பண்றேண்டா"

இதுபோன்ற பெரிய சிக்கலான சூழ்நிலையில், இப்போது இந்த இருவரும் (கரடியும் குடிவேலுவும்) விஜயகாந்த் அவர்களை எதிர்த்து பொதுகூட்டங்களிலும், மேடையிலும் பேசப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே, தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க. , பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற பெரிய கட்சிகளை எதிர்த்து தனியாக போட்டியிடும் விஜயகாந்த், இந்த இருவர்களின் இம்சையையும் தாங்க வேண்டும். போட்டியிட வேண்டும். இதன் முடிவு, கண்டிப்பாக அவருக்கு சாதகமாக இருக்காது என்பது "டகால்டி கருத்து கணிப்பு" ஒன்று வெளிவந்துள்ளது.

எது எப்படியோ, விஜயகாந்த் இந்த தேர்தலில் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளார் என்பது தெளிவாகிறது.

(இந்த செய்தி காக்கையார், பருந்தார், கழுகார், குருவியார் வரிசையில் ஒரு "டாஸ்மாக்கார்" சொன்னது...... ஏன்னா, கேப்டன் சம்பந்தப்பட்ட விஷயத்த ஒரு "டாஸ்மாக்கார்" சொல்றது தான பொருத்தமா இருக்கும்.....).

4 comments:

Abu said...

தலைவா , சூப்பர் ஆர்டிகிள் !

வடிவேலு , விஜயகாந்த பார்த்து சொல்ற இன்னும் சில தேர்தல் பேச்சக்கள்

வச்சிக்காத என்கிட்ட உன் கில்மா ...வச்சிகிட்டா நாரிபோகும் உன் குருமா !

குடும்ப அரசியல் கூடாதுன்னு சொல்லும் இந்த டகால்டி ........
பொண்டாட்டி ,மச்சான்க்கு சீட் கொடுத்து இருக்கும் இதுஅல்லவா உலக மகா டகால்டி !

அன்புடன்
அபு

R.Gopi said...

வருகைக்கு நன்றி அபு,

நீங்க எழுதுனது கூட நல்லாத்தான் இருக்கு..........

சூப்பரப்பு .............

விஷ்ணு. said...

//(இந்த செய்தி காக்கையார், பருந்தார், கழுகார், குருவியார் வரிசையில் ஒரு "டாஸ்மாக்கார்" சொன்னது...... ஏன்னா, கேப்டன் சம்பந்தப்பட்ட விஷயத்த ஒரு "டாஸ்மாக்கார்" சொல்றது தான பொருத்தமா இருக்கும்.....).//

கண்டிப்பாக உண்மை. நாட்டை பாத்திங்களா, யார் யாரோ ஆட்சி செய்யனும்னு பாக்குறாங்க! பாவம் ஜனநாயகம்.

R.Gopi said...

அடடே வாங்க விஷ்ணு

தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

ஜெ.கே.ரிதீஷுக்கும், அழகிரிக்கும் சீட்டு குடுத்தா, இதுமாதிரிதான் எல்லாம் ஏடாகூடமா நடக்கும்.

கேப்டன் ஆல் டைம் டாஸ்மாக்தான்.