Sunday, April 12, 2009

ரீவைன்ட் : சிவாஜி தி பாஸ் (2007)ஏ.வி.எம் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில், நட்சத்திர டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்ய, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த, மிக பெரிய வெற்றி படம் "சிவாஜி தி பாஸ்" படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல்கள் வருமாறு :

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் (வாஜி வாஜி பாடல்)
சஹானா சாரல் தூவுதோ, சஹாரா பூக்கள் பூத்ததோ

இந்த இரு பாடல்களுக்காக வைரமுத்து அவர்கள் பல பாடல்கள் எழுதினர். எப்படி என்றால், இந்த இரு பாடல்களை டைரக்டர் ஷங்கர் முடிவு செய்து, பதிவு செய்வதற்கு, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல பாடல்கள் அளவு சரணம் எழுதி உள்ளார்.
படத்தில் இடம் பெற்ற அந்த இரு பாடல்கள் போக, டைரக்டர் ஷங்கர் அவர்களால், நிராகரிக்கப்பட்ட சில பாடல் வரிகள், இதோ உங்கள் பார்வைக்கு.
பாடல் 1 :
ரஜினி : அழகே அழகே நீ ஆறடி பனித்துளியா?
வைரத்தூளை உரமாய் தூவி, வளர்த்த புஷ்பம் நீ
என் தேகம் எங்கும் சுற்றி திரியும் ரெண்டாம் ஜீவன் நீ
ஷ்ரேயா : என் கற்பு பாறை உருக செய்யும் கறுப்பு வெய்யிலும் நீ
என் தாவணி ஓரம் ஈரம் செய்யும் தனியார் மழையும் நீ
ரஜினி : என் ஆன்மா என்னும் பள்ளத்தாக்கில் அலையும் மேகம் நீ
என் அடிவானத்தை இரண்டு செய்ய அடித்த மின்னல் நீ
ஷ்ரேயா : உள்ளக்காட்டில் மையம் தேடி, நகரும் நதியும் நீ
என் உள்ளே புகுந்து உயிரில் மிதந்து உடையும் முத்தம் நீ
******************
பாடல் 2 :
ஷ்ரேயா : ஒரு பார்வையில் உறைந்து விட்டேன்
உங்கள் கண்ணடியில் உள்ள கதகதப்பில்
வெயில் காய்வதற்கே இதோ இதோ வந்தேன்.
ரஜினி : மன்மத பூக்கிடங்கே, உன்னை எந்தன் மார்புக்குள் அடைகாப்பேன்
உனது உயிர் அடிக்கடி சரிபார்ப்பேன்
உனது நகம் வளர்கிற இசை கேட்பேன்
ஷ்ரேயா : உம்முடைய வார்த்தையில் வடியும்
வாஞ்சையின் கசிவில் நடுநெஞ்சு நனைகின்றேன்.
(நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன).

10 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

R.Gopi said...

வருகைக்கு நன்றி உலவு.காம

விரைவில் இணைவோம்.

m bala said...

thalaaiva intha song naal irukupa.

m bala said...

sivaji his victory film!

Anonymous said...

ஷ்ரேயா : என் கற்பு பாறை உருக செய்யும் கறுப்பு வெய்யிலும் நீ
என் தாவணி ஓரம் ஈரம் செய்யும் தனியார் மழையும் நீ==>
செக்ஸ்சின் உச்சக்கட்டத்தை Encrypt பண்ணி இந்த அளவிற்கு பதிவு செய்ய வைரமுத்துவினால் மட்டும் தான் முடியும்

R.Gopi said...

பாலா

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. நிறைய எழுதியுள்ளேன். அனைத்தையும் படித்து தங்கள் கருத்தை சொல்லவும். இந்த வரிகள் நல்லாத்தான் இருக்கு. ஆனால், ஷங்கருக்கு ஏனோ பிடிக்கவில்லை..........

**********

வாங்க அனானி

நிஜமாவே வைரமுத்து கவிதையா வடிச்சு கொட்டி இருக்காரு.

Onlysuperstar.com said...

அட்டகாசம். (சரி, எங்கே பிடிச்சீங்க இந்த வரிகளை? உண்மையானது தானா? இல்லை ஏப்ரல் ஃபூலா?)

இரண்டாவது அடி ஓகே.

முதாலவது கொஞ்சம் ஓவர். ஐ மீன் ரஜினி படத்துக்கு...

"மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே..." மாதிரி இல்லை மறைவு காய் மறைவா இருந்தா நன்னாயிருக்கும்.


- சுந்தர்

R.Gopi said...

//Onlysuperstar.com said...

அட்டகாசம். (சரி, எங்கே பிடிச்சீங்க இந்த வரிகளை? உண்மையானது தானா? இல்லை ஏப்ரல் ஃபூலா?) //

*********

வருகைக்கு நன்றி ஒன்லிரஜினி

இது உள்குத்தோ, ஏப்ரல் ஃபூலோ இல்லங்க, சத்தியமான அக்மார்க் "அசல்", நேராக வைரமுத்துவின் பேனாவிலிருந்து.

இந்த வைர வரிகள், கவிப்பேரரசு அவர்களால் உண்மையாக எழுதப்பட்டது (சிவாஜி படத்திற்காக).

பின், பாடலின் நீளம் கருதி, ஷங்கர் வெட்டி குறைத்ததில், வைரமுத்துவுக்கு பிடித்த இந்த வரிகளை தன் கேள்வி பதில்களில் குறிப்பிட்டு இருந்தார் (குமுதம் கேள்வி பதில்கள்).

அப்போது படித்து, பின் அது பிடித்து, அதை எடுத்து

இப்போது தங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

கயல்விழி நடனம் said...

//வைரத்தூளை உரமாய் தூவி, வளர்த்த புஷ்பம் நீ
என் தேகம் எங்கும் சுற்றி திரியும் ரெண்டாம் ஜீவன் நீ

ஆயிரம் சொல்லுங்க...வைரமுத்து வைரமுத்து தான்....

ஆயிரம் சொல்லுங்க...வைரமுத்து வைரமுத்து தான்....

இதே போல முதல்வன் படத்தின் "உப்பு கருவாடு .." பாட்டிற்கு முதலில் எழுதப்பட்ட வரிகள்...
"ஓலை குடிசை...ஒற்றை ஜன்னல்.. துண்டு வானம் தூரத்து மேகம்..கொஞ்சம் வெற்றிலை .......கிழிந்த பாயில் கிளியோபாட்ரா...."

ஒரு விழாவில் வைரமுத்து சொன்னதாக ஞாபகம்...

R.Gopi said...

//இதே போல முதல்வன் படத்தின் "உப்பு கருவாடு .." பாட்டிற்கு முதலில் எழுதப்பட்ட வரிகள்...
"ஓலை குடிசை...ஒற்றை ஜன்னல்.. துண்டு வானம் தூரத்து மேகம்..கொஞ்சம் வெற்றிலை .......கிழிந்த பாயில் கிளியோபாட்ரா...."//

************

தகவலுக்கு நன்றி ...... ஆஹா, இது கூட நல்லா இருக்கே...........

இந்த பாட்ட பத்தி இன்னொரு விஷயமும் இருக்கு. மொதல்ல இந்த பாட்ட மேலோடியாத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டாராம். ஷங்கர் தான் அதிரடியா குத்து பாட்டு ரேஞ்சுக்கு மாத்த சொன்னாராம்..........