ஐஸ்கிரீம் என்பது ஒரு மந்திர வார்த்தை... இந்த மந்திர வார்த்தையை கேட்ட மாத்திரத்தில், பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் ஆவர்... குழந்தைகளோ, துள்ளி குதிப்பர்... அதுவும், சில குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை இன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...
சரி... இப்போது நாம் ஐஸ்கிரீம் பற்றிய சில விபரங்களை பார்ப்போம்... கட்டுரையின் சுவை கெடாமல் இருக்க, ஆங்காங்கே ஆங்கிலமும் கலந்து வரும்....
முதன் முதலில் ஐஸ்....
ஆரம்பித்தது நம்ம பக்கத்து நாட்டு அண்ணாச்(சினா) தான். சீனாவில் மலை உச்சிக்கு போன அதிபர், ஐஸ்யை பார்த்து நைஸ் என்றார். வரலாறு சொல்லும் கதை இது. பணியாளை கூப்பிட்டு, பனிக்கட்டி கூட பழத்தையும், சரக்கையும், தேனையும் கலக்கி ஒய்வெடுக்கும் போது நைஸா கொண்டு தா என்றாராம். முதலில் ஐஸ் சாப்பிட்டது இப்படித்தான்.
இதற்கு பின், கி.பி. 62ல் அப்போதைய தாதா நாடு ரோமாபுரி மன்னர், நீரோ அவர் தான்யா ஊரே எரிஞ்சப்போ ஓரமா உக்கார்ந்து பிடில் வாசிச்சாரே அவரேதான். அடிமைகளை மலை ஏறச் சொல்லி பனிக் கட்டி எடுத்து வர இவர் மலையேறினார். .
1295 வரை பால் குடி மறந்த பிள்ளையாய் இருந்த நம் ஐஸ், சீனா இத்தாலி எல்லாம் சுற்றி வந்த நமது மார்கோ போலோ புண்ணியத்தில் பால் கலக்க ஆரம்பித்தது. அதன் பின் இன்று வரை பால் இல்லாமல் ஐஸ் இல்லை. இதை சொல்வது சர்வதேச ஐஸ் அசோசியேசன்.
இப்படியாக, ஐஸ் கிரீமின் அறிமுகத்தை தெரிந்து கொண்ட நாம், எந்தெந்த நாடுகள் மற்றும் நாட்டு மக்கள், நிறைய ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்...
இப்படியாக, ஐஸ் கிரீமின் அறிமுகத்தை தெரிந்து கொண்ட நாம், எந்தெந்த நாடுகள் மற்றும் நாட்டு மக்கள், நிறைய ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்...
அதாவது, டாப் 10 ஐஸ் கிரீம் சாப்பிடும் உலக நாடுகள் எவை என்பதை....
1. United States
1. United States
2. New Zealand
3. Denmark
4. Australia
5. Belgium / Luxembourg
6. Sweden
7. Canada
8. Norway
9. Ireland
10.Switzerland
இதே போன்று, பல நூறுவகைப்பட்ட ஐஸ்கிரீம் இருந்தாலும், ஐஸ்கிரீம்களின் "ரஜினி" (சூப்பர் ஸ்டார்) என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா??!! அதை பற்றியும் பார்ப்போம்...
அதேபோல், எந்தெந்த ஐஸ்கிரீம்கள், மக்களின் ஃபேவரிட் ஆக உள்ளது, தொடர்ச்சியாக வரும் மற்ற ஐஸ்கிரீம்களின் சதவீதம் எவ்வளவு என்பதையும் பார்ப்போம்....
உலகின் டாப் 15, அதாவது, மிகவும் விரும்பத்தக்க ஐஸ்கிரீம்களின் பட்டியல் மற்றும் அதன் சதவீதத்துடன், இதோ...
உலகின் டாப் 15, அதாவது, மிகவும் விரும்பத்தக்க ஐஸ்கிரீம்களின் பட்டியல் மற்றும் அதன் சதவீதத்துடன், இதோ...
1. Vanilla 29%
2. Chocolate 8.9%
3. Butter Pecan 5.3%
4. Strawberry 5.3%
5. Neapolitan 4.2%
6. Chocolate Chip 3.9%
7. French Vanilla 3.8%
8. Cookies and Cream 3.6%
9. Vanilla Fudge Ripple 2.6%
10.Praline Pecan 1.7%
11.Cherry 1.6%
12.Chocolate Almond 1.6%
13.Coffee 1.6%
14.Rocky Road 1.5%
15.Chocolate Marshmallow 1.3%
All others, 23.7%
ஐஸ்கிரீம் பற்றிய மேலும் சில சுவையான தகவல்கள் :
Each American consumes a yearly average of 21.9 litres of Ice Cream, Ice Milk, Sherbet, Ices and other commercially produced frozen dairy products.
In Europe, more ice cream is sold on Sunday than any other day of the week.
Children from 2 to 12 and adults aged 45+ eat the most ice cream per person.
The average number of licks to polish off a single scoop ice cream cone is approximately 50.
The favourite international topping is chocolate syrup.
The biggest ice cream made was 365.7 centimetres high and made with 17,666 litres of ice cream in Anaheim, California in 1985.
படிச்சு முடிச்ச உடனே எனக்கு ஒரு கிலோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி ஜில்லுனு இருக்கு... உங்களுக்கு??!!....
(Source : All Ice Creams from the Internaltional Ice Cream Association)
பின்குறிப்பு : எங்கோ, எப்போதோ படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்... அவ்வளவுதான்... இந்த பதிவு பிடிக்கிறதோ இல்லையோ, அதில் உள்ள ஐஸ்கிரீம் வகையறாக்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்... நிறை, குறைகளை தெரிவிக்க விரும்புவர்கள், தங்கள் கடிதத்துடன், கண்டிப்பாக எனக்கு பிடித்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் குறைந்தபட்சம் ஒரு கிலோ இணைத்து அனுப்பவும்... உடன் பதில் கிடைக்கும்...
12 comments:
எனக்கு பிடித்த butterscotch லிஸ்ட்டில காணோமே!!
:(
தகவலுக்கு நன்றி கோபி!!
ஏதாவது நகைச்சுவை பதிவு எழுதுங்க கோபி..
ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி போட்டிருந்தீங்கன்னா - நல்லா இருந்திருக்கும். மழையும் குளிரும் வர ஆரம்பிச்சுடுச்சு - இப்போ இதைப் போட்டு . உள்ளேயும் உதறல் எடுக்க வச்சிட்டீங்களே கோபி!
//Vidhoosh/விதூஷ் said...
எனக்கு பிடித்த butterscotch லிஸ்ட்டில காணோமே!!
:(//
வாங்க விதூஷ்... உங்களுக்கும் பிடிச்சதா பட்டர்ஸ்காட்ச்? லிஸ்ட்ல இல்லாதது, எனக்கே ஆச்சரியமா இருக்கு...
//Mrs.Menagasathia said...
தகவலுக்கு நன்றி கோபி!!
ஏதாவது நகைச்சுவை பதிவு எழுதுங்க கோபி..//
வாங்க மேனகாசத்யா... இதற்கு முந்தைய பதிவு படிக்கலியா?? அது நகைச்சுவைதானே. இன்னும், நிறைய பதிவு இருக்கு... கேப்டன், சூப்பர் ஸ்டார் எல்லாம் வரிசையாய் வந்து நகைச்சுவை விருந்து படைக்க இருக்கிறார்கள்...
// kggouthaman said...
ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி போட்டிருந்தீங்கன்னா - நல்லா இருந்திருக்கும். மழையும் குளிரும் வர ஆரம்பிச்சுடுச்சு - இப்போ இதைப் போட்டு . உள்ளேயும் உதறல் எடுக்க வச்சிட்டீங்களே கோபி!//
வாங்க கௌதமன் சார்... கொட்டும் மழையில், ஒரு கையில் கோன் ஐஸூம், மற்றொரு கையில் கப் ஐஸூம் வச்ச்க்கறதுதான் இப்போ ஃபேஷன்... ஜமாய்ங்கோ சார்.
இதுல கூட இந்தியாவுக்கு இடம் இல்லையா..?
என்ன கொடுமை சார் இது...?
:-)
//ராஜு.. said...
இதுல கூட இந்தியாவுக்கு இடம் இல்லையா..?
என்ன கொடுமை சார் இது...?
:-)//
வாங்க ராஜீ...
உண்மையை சொல்லணும்னா, நமக்கு "டாஸ்மாக்"ல மட்டும்தான் முதல் இடம்னு நெனக்கறேன்...
ஐஸ்கிரீம் பதிவு கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையா இருக்கு!
//SUMAZLA/சுமஜ்லா said...
ஐஸ்கிரீம் பதிவு கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையா இருக்கு!//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி... ஐஸ்கிரீமை சுவைத்ததற்கு நன்றி... தொடர் வருகை தாருங்கள்...
Jilllunnu irukku pa....
//கயல்விழி நடனம் said...
Jilllunnu irukku pa....//
Danksungo....
கோபி எனக்கு ஒரு கிலோ ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணுங்க...
Super pa. But ippo enakku thiramasu ice cream en all time favorite....
Post a Comment