க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது அருணா மேடம்.....
காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................அவசியம்தான்... காதல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத பண்டம் போல... வாழ்க்கை நம் முன் இருக்கும்...ஆனால், ருசிக்காது...
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
உலகினில் எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்ந்தவர்கள், அழகும் நிரந்தரமில்லை என்பார்கள்...
பணம் அவசியமா?
பணம்... கண்டிப்பாக ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியமான ஒன்று... ஆனால், அதை தேடும் முயற்சியில் வாழ்வை தொலைத்து விடக்கூடாது...அருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை... பொருள் இல்லாதார்க்கு எவ்வுலகும் இல்லை என்பது வள்ளுவன் வாக்கு...
கடவுள் உண்டா?
கடவுள் உண்டு என்பதே கண்டறிந்த பெரிய, பெரிய ஞானிகளின் கூற்று.. நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அதனூடே சிறிது இறையையும் தேடுவோம்... ஒரு நாள் கண்டிப்பாக அவன் இருப்பதை உணருவோம்... இதைப்பற்றி நான் "வாழ்க்கை" என்ற ஒரு தொடரில் விரிவாக அலச இருக்கிறேன்..
அழகு,காதல்,பணம், கடவுள்?
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
அருண் (குறட்டை அரங்கம்)
லாரன்ஸ் (படுக்காளி)
பாசகி
அருண் (வால்பையன்)
செல்லதுரை (இதயமே)
"தலை"வர்களே... ரவுண்டு கட்டி அடிக்க தயாராகுங்கள்...
24 comments:
எழுதறேன்-ஜி, ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க :)
Simply Super..!
//பாசகி said...
எழுதறேன்-ஜி, ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க :)//
வாங்க பாசகி... அழைப்பை ஏற்று எழுதுகிறேன் என்று சொன்னதற்கு மகிழ்ச்சி..
காணாமல் போயிருந்த உங்களை மீண்டும் வலைக்கு வரவழைத்ததே ஒரு சாதனைதான்...
// ♠ ராஜு ♠ said...
Simply Super..!//
Thanks for your visit and comment RAJU....
அருணாவுக்கு சபாஷ் !!!!
கோபிக்கு தேங்க்ஸ் !!!!
நீங்க சொல்லி தட்ட முடியுமா தலைவா....
சங்கிலி தொடர்.
நீங்கள் மின் அஞ்சல் உபயோகிப்பவரா, ஆம் என்றால் இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை.
நம் கணிணியில் வந்து குந்தும் இது. இந்த மெஸ்சஜை நீங்கள் 5 பேருக்கு, 10 பேருக்கு அனுப்பவும். அனுப்பினால் வானம் பொத்துக் கொண்டு அதிர்ஷ்டம் அனுப்பும். இல்லை என்றால் உங்கள் கண் நொள்ளை ஆகும் என்பதே இந்த மின் அஞ்சல்.
பாவம் பரிதாபத்துக்குறிய சில நல்ல ஆத்மாக்கள், இதை நம்பி அல்லது பயந்து சிரமேற் கொண்டு காரியம் ஆற்றும்.
ஆனால் அருணா தொடங்கிய இந்த சங்கிலி அந்த வடிவம் கொண்டாலும், சத்தானது, முத்தானது, நல்லது.
தயக்கம் எதுவும் இன்றி கடாசும்/ டிராஷும் மெயில் போல் இதை பாவிக்க முடியாத பாவி யாகி விட்டேன். இதில் சங்கடம் இரண்டு.
ஒன்று : கேள்வி பதில் எழுதுவது. அது கூட ஒ.கே. எழுதிப் புடலாம்.
இரண்டு: ஐவர் தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களையும் எழுத வைப்பது. இது கொஞ்சம் சிரமம்.
முயற்சிக்கிறேன்.
// ppage said...
அருணாவுக்கு சபாஷ் !!!!
கோபிக்கு தேங்க்ஸ் !!!!
நீங்க சொல்லி தட்ட முடியுமா தலைவா....
சங்கிலி தொடர்.
நீங்கள் மின் அஞ்சல் உபயோகிப்பவரா, ஆம் என்றால் இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை.
நம் கணிணியில் வந்து குந்தும் இது. இந்த மெஸ்சஜை நீங்கள் 5 பேருக்கு, 10 பேருக்கு அனுப்பவும். அனுப்பினால் வானம் பொத்துக் கொண்டு அதிர்ஷ்டம் அனுப்பும். இல்லை என்றால் உங்கள் கண் நொள்ளை ஆகும் என்பதே இந்த மின் அஞ்சல்.
பாவம் பரிதாபத்துக்குறிய சில நல்ல ஆத்மாக்கள், இதை நம்பி அல்லது பயந்து சிரமேற் கொண்டு காரியம் ஆற்றும்.
ஆனால் அருணா தொடங்கிய இந்த சங்கிலி அந்த வடிவம் கொண்டாலும், சத்தானது, முத்தானது, நல்லது.
தயக்கம் எதுவும் இன்றி கடாசும்/ டிராஷும் மெயில் போல் இதை பாவிக்க முடியாத பாவி யாகி விட்டேன். இதில் சங்கடம் இரண்டு.
ஒன்று : கேள்வி பதில் எழுதுவது. அது கூட ஒ.கே. எழுதிப் புடலாம்.
இரண்டு: ஐவர் தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களையும் எழுத வைப்பது. இது கொஞ்சம் சிரமம்.
முயற்சிக்கிறேன்.//
அடடா... வாங்க படுக்காளி....
படபடவென்று வெடிக்கும் பட்டாசு இப்போ தீபாவளிக்கு முன்னாடியே வெடிச்ச மாதிரி எழுதி இருக்கீங்க...
உங்கள் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்....
என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுத முன்வந்தமைக்கு நன்றி...
அருணாவுக்கு சபாஷ் !!!! கோபிக்கு தேங்க்ஸ் !!!!
நீங்க சொல்லி தட்ட முடியுமா தலைவா....
சங்கிலித் தொடர்
நீங்கள் மின் அஞ்சல் உபயோகிப்பவரா, ஆம் என்றால், இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை.
உங்கள் கணிணியில் வந்து இது குந்தும். உடனே இதை 5/10 பேருக்கு அனுப்பு. அனுப்பினால் வானம் பொத்துக் கொண்டு கரன்ஸி ஊத்தும், இல்லை என்றால் உன் கண் நொள்ளை ஆகும்.
பாவம் சில அப்புராணி ஆத்மாக்கள், இதை நம்பி அல்லது பயந்து சிரமேற் கொண்டு காரியம் ஆற்றும்.
எம்.எல்,எம். எனும் வர்த்தக டகால்டி கூட இது போல் உண்டு.
அருணா தொடங்கிய க....கா....பா.... அ..... கூட அந்த வடிவம் என்றாலும் சத்தானது, முத்தானது, நல்லது. வாழ்த்துக்கள்.
இதில் சங்கடம் இரண்டு.
ஒன்று : பதில் எழுதுவது. இது கூட ஒ.கே. எழுதிப் புடலாம்.
இரண்டு : ஐந்து பதிவர்களை தெர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து அவர்களையும் எழுத வைப்பது. இது தான் கொஞ்சம் உட்டாலக்கடி போல தோணுது.
முயற்சிக்கிறேன்.
படுக்காளி
Gopi Ji,
Pl see my post on this in my blog.
http://hereisarun.blogspot.com/2009/09/blog-post_16.html
//M Arunachalam said...
Gopi Ji,
Pl see my post on this in my blog.
http://hereisarun.blogspot.com/2009/09/blog-post_16.html//
Oh... Thanks Arunji... for your comment and the participation in the THODAR....
நல்ல பதில்கள்...
" வாழ்க்கை தொடர் " எப்போ ஆரம்பம் ஜி
காதல் - அழகு-பணம் -கட்வுளின் ஆசி..!
காதல் :
காதல் என்ற புனிதமான ஒன்று எதன்மேல் நமக்கு அதிகம் பற்று உள்ளதை பொருத்தது... கட்வுள் மேல் வைக்கும் காதல்லில் இருந்து...அம்மா..இயற்கை...நமது உடல்...அப்புறம் பெண் ! ! ! ! !. இதில் நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.. காதலி தவிர்த்து... ஆனால் அழகு, பணத்தின் மீது ஆசை வைத்தால்..... அது காதல் இல்லை மோகம்....மோகம்...அப்புறம் உனக்கு வரும் மோசம்...
அழகு :
நான் அழகா இருக்கேனே... நீயும் அழகா இருகிறாய்.... இது அழகானது..இல்லை எனில் வருமே மனிதனிடம் ஒரு பிரிவினைவாதம்....வன்முறை...தாழ்வு மனப்பான்மை.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.! ! ! ! உனக்கு எல்லாம் அழகாக தெரியும் வரை...நீ நல்லவன்..மகிழ்ச்சியாக இருப்பாய்... அழகு நிரந்தமானது உன் மனம் அழகாக இருக்கும் வரை.....
பணம் :
பணம் பத்தும் செய்யும்.... முடிந்தால் அதைவிட அதிகமாகவும் செய்யும்... எச்சரிக்கை... உன்னையும் கொள்ளும்.. பணத்தின் அவசியம் பட்டினி உணர்த்தும்....உன் மரணத்தின் இறுதி நாள் சொல்லும்...நீ இழந்து விட்டே உனோட வாழ்கைய பணத்த தேடி...
கடவுள் உண்டா ?
இது என்ன கேள்வி ... நிச்சயமாக கடவுள் இல்லை...அதாவது வெளிப்புறத்தில்... கட்வுள் உன்னுள் இருக்கிறான்.. அது உன் மனசாட்சி... அன்பே கடவுள்....மற்றவர்களிடம் நீ அன்பு பாராட்டும் போது நீ உணரலாம்...அவன் உன்னிள் சிரிப்பதை...
குறிப்பு :
இது என்ன விவாதம்... கல்வியா? செல்வமா? வீரமா? மாதிரி... அழகு + பணம் இல்லையேல் காதல் இல்லை; காதல் + பணம் இல்லையேல் அழகு இல்லை ;காதல் + பணம் + அழகு இல்லையேல் கடவுள் இல்லை.. எப்படி...நாங்கல்லாம்...
உங்கள் விமர்சனம் வரவேற்க படுகிறது
செல்லத்துரை, துபாய்
cdhurai@gmail.com
visit : www.idhayame.blogspot.com
'நச்' என்று விடயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.கோபி.நன்றாக இருக்கிறது.
பதில்கள் அருமை கோபி!!
அச்சோ இது நான் ஆரம்பிச்ச தொடர் இலலைங்கோ!!!நனும் உஙகளை மாதிரி மாட்டிக்கிட்டவங்கதான்!
// ஈ ரா said...
நல்ல பதில்கள்...
" வாழ்க்கை தொடர் " எப்போ ஆரம்பம் ஜி//
வாங்க ஈ.ரா... வாழ்க்கை தொடர் மிக மிக விரைவில் ஜோக்கிரி அல்லது எடக்குமடக்கு வலையில் வரும்...
செல்லதுரை
மிக மிக நன்றாகவும், விரிவாகவும் எழுதி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... உங்கள் வலையின் பக்கம் வந்து நிறைய சொல்கிறேன்..
//ஜெஸ்வந்தி said...
'நச்' என்று விடயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.கோபி.நன்றாக இருக்கிறது.//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி...
//Mrs.Menagasathia said...
பதில்கள் அருமை கோபி!!//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மிஸஸ்.மேனகாசத்யா...
//அன்புடன் அருணா said...
அச்சோ இது நான் ஆரம்பிச்ச தொடர் இலலைங்கோ!!!நனும் உஙகளை மாதிரி மாட்டிக்கிட்டவங்கதான்!//
வாங்க அருணா மேடம்.. அதனால என்ன... ஒரு நாலு விஷயத்தை பற்றி நம் அனைவரின் கருத்துக்களும் எப்படி எப்படி வெளியாகிறது... இதை பார்க்க வைத்தது நீங்கள்தானே...
Thanks for your compliments at my blog. Sure it means so much to me.
Though Tamil is my mother tongue, I can only talk and read to some extend...so can't think about writing!:(
Actually I gave up posting 'kavithai' long before(its dormant)...switched to 'food blog', thats were I get to meet more friends! I am happy about it. If possible will resume back to blog about 'kavithai' in future.
You keep rocking, you have a wonderful space here...happy blogging.
கோபி,
நான் திரு.கிருபானந்தவாரியாரிடம்
கையெழுத்து வாங்கிய போது அவர்
”இரை தேடுவதோடு இறையும் தேடு’’
என்று எழுதி கைஎழுத்துப் போட்டுக்
கொடுத்தார். அது நினைவுக்கு வந்து
விட்டது.நீங்கள் எழுதியதைப் பார்த்து.
நன்றி.
short & sweet..nga...
// Malar Gandhi said...
Thanks for your compliments at my blog. Sure it means so much to me.
Though Tamil is my mother tongue, I can only talk and read to some extend...so can't think about writing!:(
Actually I gave up posting 'kavithai' long before(its dormant)...switched to 'food blog', thats were I get to meet more friends! I am happy about it. If possible will resume back to blog about 'kavithai' in future.
You keep rocking, you have a wonderful space here...happy blogging.//
Welcome Malar...
Thanks for your visit and comment... Keep visiting and commenting...
//கோமதி அரசு said...
கோபி,
நான் திரு.கிருபானந்தவாரியாரிடம்
கையெழுத்து வாங்கிய போது அவர்
”இரை தேடுவதோடு இறையும் தேடு’’
என்று எழுதி கைஎழுத்துப் போட்டுக்
கொடுத்தார். அது நினைவுக்கு வந்து
விட்டது.நீங்கள் எழுதியதைப் பார்த்து.
நன்றி.//
************
கோமதி மேடம்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
அப்படியா?? தன்யனானேன்....
எந்நேரமும் இறை சிந்தனையோடு உள்ள ஒருவர் சொன்னது, நான் சொன்னதை போல் இருந்தது என்று கேட்டபோது எனக்கு சிலிர்த்தது...
//கலகலப்ரியா said...
short & sweet..nga...//
Helloo.... Thanks..nga
மன்னிக்கவும் கோமதி மேடம்... மாற்றி சொல்லி விட்டேன்..
எந்நேரமும் இறை சிந்தனையோடு உள்ள ஒருவர் சொன்னதை போன்ற ஒரு கருத்தை நானும் சொன்னேன் என்று உங்களிடம் இருந்து கேட்டபோது எனக்கு சிலிர்த்தது...
//நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அதனூடே சிறிது இறையையும் தேடுவோம்... //
ரசித்தேன் கோபி :) அழகான பதில்கள்.
ஜி, என் சிற்றறிவுக்கு எட்டுன வரைக்கும் எழுதிருக்கேன் :)
http://mudhalezhuthu.blogspot.com/2009/09/blog-post.html
//கவிநயா said...
//நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அதனூடே சிறிது இறையையும் தேடுவோம்... //
ரசித்தேன் கோபி :) அழகான பதில்கள்.//
வருமைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கவிநயா
//பாசகி said...
ஜி, என் சிற்றறிவுக்கு எட்டுன வரைக்கும் எழுதிருக்கேன் :)
http://mudhalezhuthu.blogspot.com/2009/09/blog-post.html//
தல... உங்கள் சிற்றறிவுன்னா, சூப்பராதான் இருக்கும்.... படிக்கறேன்... என் சிற்றறிவுக்கு எந்தளவு எட்டுதுன்னு...
நன்றி பாசகி...
Post a Comment