சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. !!! சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்ததில் எழுதியதுதான் இந்த பதிவு.
1900 வருடம் தொடங்கப்பட்ட சர்வதேச அளவிலான இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த துறைகளுக்கு அளிக்கப்படும் மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்ததற்கு.
இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிடராமன் ராதாகிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர். மற்ற எட்டு பேர் யாரென்றும் பார்த்து விடுவோம்...
1. Rabindranath Tagore (1861 - 1941) Nobel Prize for Literature (1913)
2. Sir C.V. Raman (Chandrasekhara Venkata Raman)(1888 - 1970)Nobel Prize for Physics (1930)
3. Dr. Hargobind KhoranaNobel Prize for Medicine and Physiology (1968)
4. Dr. Subramaniam ChandrasekarNobel Prize for physics (1983)
5. Mother Teresa (1910 - 1997)Nobel Prize for peace (1979)
6. Dr. Amartya SenNobel Prize for Economics (1998)
7. Other Nobel Prize Laureates related to IndiaRudyard Kipling (1865-1936)
8. V.S. Naipaul (1932- )
6. Dr. Amartya SenNobel Prize for Economics (1998)
7. Other Nobel Prize Laureates related to IndiaRudyard Kipling (1865-1936)
8. V.S. Naipaul (1932- )
ரிபோசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிபோசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டிபயாடிக் எப்படி இதனுடன் ஒட்டிக்கொள்கிறது, உறவாடுகிறது என்பதை விளக்கும் மூலக்கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.
இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு ரூ.7.3 கோடி (இது நம்ம வைகைப்புயல் வடிவேலு சம்பாதிப்பதை விட குறைவுங்கோ...).
இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.
சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள். இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.
இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.
இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கர் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கர் என்று தானே கொண்டாடுகிறது.
சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே. சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!
1979ல் அன்னை தெரசாவின் நோபல் பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்ததே.
அன்று பார்த்தது மனிதத்தை தானே. மனித நேயம் தானே.
பின்குறிப்பு : ஒண்ணுக்கும் உதவாத "அந்த விஷயங்களுக்கான மெனு கார்ட்" போன்ற ரேட் மேட்டர வரிஞ்சு கட்டிக்கொண்டு எழுதும் பல, சில ஊடகங்கள், வலைப்பதிவர்கள் "வெங்கி"யின் இந்த "நோபல்" சாதனை விஷயத்தை மறந்துவிட்டதே என்பது தான் ஆற்றாமை.
12 comments:
//பிரிதுவக்கும்// எழுத்துப் பிழை தட்டச்சில் என்று நினைக்கிறேன்
பெரிதுவப்பத் தன் மகனை ...
ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்ததற்கு.
//ரிபோசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிபோசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டிபயாடிக் எப்படி இதனுடன் ஒட்டிக்கொள்கிறது, உறவாடுகிறது என்பதை விளக்கும் மூலக்கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.//
மிக எளிதில் புரியும்படி விளக்கிறீர்கள்... நன்றி
//இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கர் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கர் என்று தானே கொண்டாடுகிறது.//
வேறு வழி..?? ஆராய்ச்சி வாய்ப்புக்களும், படிப்புக்களும் வேலைவாய்ப்புக்களும் நமது மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இல்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது ?
பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி ஈ.ரா... திருத்தி விட்டேன்...
//வேறு வழி..?? ஆராய்ச்சி வாய்ப்புக்களும், படிப்புக்களும் வேலைவாய்ப்புக்களும் நமது மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இல்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது ?//
இது தானே நம் அனைவரின் ஏக்கமும் ஈ..ரா..
வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி... என் தீபாவளி வாழ்த்து பதிவை இங்கு சென்று பார்க்கவும்...
http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
romba informative.. very good..! well done gopi..!
//கலகலப்ரியா said...
romba informative.. very good..! well done gopi..!//
Thanks for your visit and encouraging comments....
நன்றாக தொகுத்து எழுதிருக்கிங்க கோபி!!வெல் டன்!!
//Mrs.Menagasathia said...
நன்றாக தொகுத்து எழுதிருக்கிங்க கோபி!!வெல் டன்!!//
**********
வாங்க மேனகா...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
நல்ல பதிவு கோபி.
//விக்னேஷ்வரி said...
நல்ல பதிவு கோபி.//
வாங்க விக்னேஷ்வரி...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...
//பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி ஈ.ரா... திருத்தி விட்டேன்..//
பிரிதுவக்கும் அல்ல, பெரிதுவக்கும் (பெரிதும் மகிழும் என்று பொருள்)
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பெரிதுவப்பாள் என்று எழுதி இருக்கலாம். இருந்தாலும் ஏன் அஹ்றினையில் குறிப்பிடுகிறார் என்றால் இந்த உவத்தல் சமாசாரம் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பதால் தான். உதாரணமாக, ஒரு நாய் முன்பாக, அதன் குட்டியை கொஞ்சிப் பாருங்கள், அந்த நாய் உங்களை சந்தோஷத்துடன் பார்த்து வாலாட்டும்.
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி ஈ.ரா... திருத்தி விட்டேன்..//
பிரிதுவக்கும் அல்ல, பெரிதுவக்கும் (பெரிதும் மகிழும் என்று பொருள்)
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பெரிதுவப்பாள் என்று எழுதி இருக்கலாம். இருந்தாலும் ஏன் அஹ்றினையில் குறிப்பிடுகிறார் என்றால் இந்த உவத்தல் சமாசாரம் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பதால் தான். உதாரணமாக, ஒரு நாய் முன்பாக, அதன் குட்டியை கொஞ்சிப் பாருங்கள், அந்த நாய் உங்களை சந்தோஷத்துடன் பார்த்து வாலாட்டும்.//
வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை...
இப்படியும் இருக்குமோ என்று எண்ண வைத்தது உங்கள் விளக்கம்...
நன்றி... (கூடிய சீக்கிரம் பெயர் சொல்லலாமே...)
இது என் இரண்டாம் பதிவு.
http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.ஹ்த்ம்ல்
படித்துக் கருத்து கூறுங்கள்.
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இது என் இரண்டாம் பதிவு.
http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.html
படித்துக் கருத்து கூறுங்கள்.//
இதோ வருகிறேன்...
Post a Comment