Monday, October 19, 2009

உயிரின் உயிரே...உயிரின் உயிரே


ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..... இன்னிக்கும் அந்த உபன்யாசம்தான் போயிட்டு வரீங்களா? உங்களுக்கு இது எப்படித்தான் அலுக்காம இருக்கோ? என்றாள் கோமதி.......தன் மூக்கு கண்ணாடியை கழற்றிக்கொண்டே....

கோமதி... இப்படி இந்த அழுகாச்சி சீரியல நாள் முழுக்க உட்கார்ந்து பாக்கறத விட, நான் இப்போ கேட்டுட்டு வந்த உபன்யாசம் எவ்வளவோ மேல்.... சின்ன வயசுல இதெல்லாம் கேட்டு இருந்தா, நான் வாழ்க்கைல இன்னும் கூட கொஞ்சம் நல்லவனா இருந்திருப்பேனோ என்னவோ என்றார் ராகவன்...
இப்போ மட்டும் என்னங்க, நீங்க எங்க மேல காட்டுற அன்பு மாதிரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்து மேல காட்ட ஆரம்பிச்சாங்கன்னா, இந்த உலகத்துல, சண்டை, சச்சரவு எதுவுமே வராதுங்க....

அதுவும், உங்க செல்ல மகளுக்கு ரெட்டை குழந்தை பொறந்து இருக்குன்னு கேள்விப்பட்டதில் இருந்து, அவங்கள பார்க்க கனடாவுக்கு எப்போ போறோம், எப்போ போறோம்னு நீங்க ஒரு நாளைக்கு பத்து, இருபது தடவையாவது கேட்டுட்டே இருக்கீங்க...
நான் கூட அப்படியே, நியூ யார்க்-ல இருக்கற நம்ம பையனையும் பாத்துட்டு வந்துடலாம்னு ஒரு ப்ளான் போட சொன்னேன். ரெண்டு ஊரையும் பார்த்துடலாம், ரெண்டு பசங்களையும் பாத்தா மாதிரி ஆச்சு... அப்படியே, பேர குழந்தைகளையும் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வரலாம், என்ன சொல்றீங்க என்றாள்.
அது வந்து கோமதி, நம்ம பொண்ணு, மாப்பிள்ளை சொக்க தங்கம்.... அவங்கள பாக்கற சாக்குல அப்படியே பேர பசங்களையும் பாத்துடலாம். ஆனா, நம்ம மருமகளுக்கு அவ்வளவு ஒண்ணும், நம்ம பேர்ல ஒரு மரியாதையோ, பாசமோ இல்லையே, போன தடவ இங்க வந்தப்போ, நம்ம கூட எவ்ளோ சண்டை போட்டா?, அதனாலதான் அங்க ஏன் போகணும்னு யோசிக்கறேன் என்றார் ராகவன்...

இத பாருங்க... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க..... நாம ஒண்ணும் அவங்கள பாக்கறதுக்காக அவ்ளோ தூரம் போகல.... கனடா வரைக்கும் போறோமே, இன்னொரு 550 கிலோமீட்டர் போனா, அப்படியே பையன், மருமகள், பேர பசங்கள பாத்துட்டு வருவோமேன்னு சொல்றேன்.... நல்லா, யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க... நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகேதான் என்றாள் கோமதி...
நான் எவ்ளோ சொன்னாலும், நீ கேக்க போறது இல்ல கோமதி... அதுவும் இல்லாம எனக்கு நீ, உனக்கு நான்னு ஆனதுக்கப்புறம், உன்னோட சந்தோஷம்தான் என் சந்தோஷம்... சரி, நீ சொல்ற மாதிரியே ஒரு டூர் போடுவோம், பையன், பொண்ணு, பேர பசங்க எல்லாரையும் பாத்துட்டு வந்துடுவோம்...ஓகேவா என்றார் ராகவன்..... கோமதி முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரசித்தவாறு.....

பிரமாதம், வெல்டன் என்ற குரலுடன், கை தட்டிக்கொண்டே கோல்டு ஃப்ரேம் போட்ட தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடி, மேகா.... வயது 55, அந்த பள்ளியின் பிரின்சிபால்...
மேடையேறி வந்து, மைக் பிடித்து சொன்னார்......
இந்த வருட பள்ளி ஆண்டுவிழாவின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"யில் 8-வது வகுப்பில் படிக்கும் ராகேஷ் மற்றும் ஷீதல் ஆகிய இருவரும் ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது.
அவர்களை போலவே உலகில் உள்ள எல்லா தம்பதியரும் ஒற்றுமையுடனும், அன்னியோன்யமாக வாழ்ந்து விட்டால், வாழ்க்கையில் சண்டை, சச்சரவு என்பதற்கான பேச்சே இல்லை, மற்ற பல குடும்ப பிரச்சனைகளுக்கும் வழியே இல்லை என்றார் பிரின்ஸிபால் மேகா.
ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....

58 comments:

ஷைலஜா said...

கோபி! அதுங்க ரெண்டும் குழந்தைகள்னு கடசில தான் தெரியுது கூடவே ஒரு நல்ல கருத்தையும் சொல்லிட்டீங்க! பரிசுபெற வாழ்த்துகள்!

R.Gopi said...

//ஷைலஜா said...
கோபி! அதுங்க ரெண்டும் குழந்தைகள்னு கடசில தான் தெரியுது கூடவே ஒரு நல்ல கருத்தையும் சொல்லிட்டீங்க! பரிசுபெற வாழ்த்துகள்!//

வ‌சிஷ்ட‌ர் வாயால் பிர‌ம்ம‌ரிஷி...பெரிய எழுத்தாளரின் பாராட்டு ஒண்ணே போதும்... ப‌ரிசு எல்லாம் அப்புற‌ம் தான்...

ந‌ன்றி ஷைல‌ஜா மேட‌ம்...

உங்கள் தோழி கிருத்திகா said...

அருமையான கருத்து...நல்லா இருக்கு கோபி...
நிஜத்துலயும் அப்படியே எல்லாரும் இருந்தா ரொம்ப நல்லாருக்கும் :)
கண்டிப்பா உங்களுக்கு பரிசு இருக்கு :)

R.Gopi said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
அருமையான கருத்து...நல்லா இருக்கு கோபி...
நிஜத்துலயும் அப்படியே எல்லாரும் இருந்தா ரொம்ப நல்லாருக்கும் :)
கண்டிப்பா உங்களுக்கு பரிசு இருக்கு :)//

**********

தோழமை கிருத்திகாவிற்கு

வலைப்பக்கத்திற்கு வருகை தந்து, பதிவை படித்து, உற்சாகம் ஊட்டியதற்கு நன்றி...

பரிசு ஒரு பொருட்டே அல்ல... கலந்து கொள்ளலே முக்கியம்...

நல்ல நண்பர்களின் தொடர்பு கிடைக்கும் போது, பரிசு என்ற ஒன்று மறந்தே போகும்...

ஈ ரா said...

நல்ல கதை...

கதையிலேயே ஒரு கதைக்களம்..

கதையில் கனடாவில் இருந்து இத்தனை கிலோமீடர் என்று சொல்வதற்கு பதில் ஒரு மணி நேரம் ரெண்டு மணிநேரம் என்று மாற்றினால் இன்னும் கொஞ்சம் மெருகேரும் என்று நினைக்கிறேன்..

நல்ல மெஸ்சேஜ்


வெற்றி பெற வாழ்த்துக்கள்..

(அப்புறம் அது என்ன போட்டி ? )

Anonymous said...

கருத்துள்ள கதை..

இந்த அன்னியோன்னியம் விட்டுக் கொடுத்தல் இருந்தால் பெரும்பாலும் பிரட்சனைகள் இல்லை என்பதை சின்ன கதையில் குழந்தைகள் வாயிலாக சொல்லிடீங்க..கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கோபி...

R.Gopi said...

//ஈ ரா said...
நல்ல கதை...

கதையிலேயே ஒரு கதைக்களம்..

கதையில் கனடாவில் இருந்து இத்தனை கிலோமீடர் என்று சொல்வதற்கு பதில் ஒரு மணி நேரம் ரெண்டு மணிநேரம் என்று மாற்றினால் இன்னும் கொஞ்சம் மெருகேரும் என்று நினைக்கிறேன்..

நல்ல மெஸ்சேஜ்


வெற்றி பெற வாழ்த்துக்கள்..

(அப்புறம் அது என்ன போட்டி ? )//

வாங்க‌ ஈ.ரா..

வருகை தந்து, க‌ருத்தும், வாழ்த்தும் சொன்ன‌த‌ற்கு ந‌ன்றி...

கிலோமீட்ட‌ர் தூர‌த்தை மாற்றி நேர‌த்தில் சொன்னால், ந‌ன்றாக‌தான் இருக்கும்... இப்போ மாற்ற‌லாமா என்று தெரிய‌வில்லை... போட்டிக்கு கொடுத்தாச்சே..

அது ஒரு சிற‌ப்பு சிறுக‌தை போட்டி... இங்க‌ போய் பாருங்க‌ "த‌ல‌"...

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி
http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html

R.Gopi said...

// தமிழரசி said...
கருத்துள்ள கதை..

இந்த அன்னியோன்னியம் விட்டுக் கொடுத்தல் இருந்தால் பெரும்பாலும் பிரட்சனைகள் இல்லை என்பதை சின்ன கதையில் குழந்தைகள் வாயிலாக சொல்லிடீங்க..கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கோபி...//

வாங்க‌ த‌மிழ‌ர‌சி...

த‌ங்க‌ளின் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும், பாராட்டுக்கும் என் ம‌ன‌ம் கனிந்த‌ ந‌ன்றி...

நிலாரசிகன் said...

கோபி,

நச் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்

-நிலாரசிகன்.

R.Gopi said...

//நிலாரசிகன் said...
கோபி,

நச் நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்

-நிலாரசிகன்.//

**********

வ‌ருகைக்கும், வாழ்த்திய‌த‌ற்கும் ந‌ன்றி நிலார‌சிக‌ன்...

படிப்போர் பாராட்டுவதே போட்டியில் வென்றதை விட சந்தோஷம் தருகிறது... அது போதும் எனக்கு...

இன்னும் நிறைய எழுதி உள்ளேன்... ஒவ்வொன்றாக என் வலையில் பதிவாகும்...

தொடர்ந்து வாருங்கள்... படித்து மகிழுங்கள்.. மேலான கருத்தை தெரிவியுங்கள்...

கலகலப்ரியா said...

//ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..//

ஆப்ப்பீசுக்கு போயிட்டேன்.. அதுதான்.. அவ்வ்வ்வ்... வர்றப்பவே இப்டி கேட்டா எப்டி..

கலகலப்ரியா said...

//ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது//

aaaaaahhh..!!!

Menaga Sathia said...

நல்ல கருத்துள்ள கதை கோபி!!நிஜத்துலயும் இப்படியே இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்....பரிசு பெற வாழ்த்துக்கள் கோபி!!

பெசொவி said...

முடிவு எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

இந்த கதைக்கு இன்னும் ஒரு பாரா சேர்த்திருந்தால் எப்படி இருக்கும்?
(என் கற்பனையில்)

......ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....

மகிழ்ச்சியோடு கோப்பையை வாங்கிய ஷீதல், ஓடி வந்து தன்னுடைய அப்பாவிடம் கேட்டாள், "எதிர் பார்த்த மாதிரியே பரிசு வாங்கிட்டு வந்துட்டேன், பார்த்தீங்களா அப்பா. போற வழியிலே தாத்தா பாட்டியையும் பார்த்து பரிசை காண்பிக்கலாமா?"
மோகன் (அப்பா) தன் மனைவியை பார்க்க, அவள் "அதுக்கென்ன, ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துடலாம்" என்றாள்

கார் சிவானந்த குருகுலம் நோக்கி விரைந்தது.

R.Gopi said...

//கலகலப்ரியா said...
//ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..//

ஆப்ப்பீசுக்கு போயிட்டேன்.. அதுதான்.. அவ்வ்வ்வ்... வர்றப்பவே இப்டி கேட்டா எப்டி..//

வாங்க‌ ப்ரியா... க‌தாகால‌ட்சேப‌ம் என்று சொன்ன‌தே அவ‌ர்க‌ள் வ‌ய‌தான‌ த‌ம்ப‌திக‌ள் என்ப‌தை குறிப்பாய் காட்டிட‌ தான்...

வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி...

R.Gopi said...

//கலகலப்ரியா said...
//ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது//

aaaaaahhh..!!!//

என்ன‌ ப‌ழ‌செல்லாம் ஞாப‌க‌ம் வ‌ருகிற‌தா ப்ரியா?

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
நல்ல கருத்துள்ள கதை கோபி!!நிஜத்துலயும் இப்படியே இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்....பரிசு பெற வாழ்த்துக்கள் கோபி!!//

வாங்க‌ மேன‌கா...

நிஜ‌ம்தான்... எங்க இருக்கு? ஆனால் அப்படி இருக்க‌ வேண்டும் என்ப‌தே என் அவா... வ‌ருகை தந்து, வாழ்த்திய‌த‌ற்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
முடிவு எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

இந்த கதைக்கு இன்னும் ஒரு பாரா சேர்த்திருந்தால் எப்படி இருக்கும்?
(என் கற்பனையில்)

......ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....

மகிழ்ச்சியோடு கோப்பையை வாங்கிய ஷீதல், ஓடி வந்து தன்னுடைய அப்பாவிடம் கேட்டாள், "எதிர் பார்த்த மாதிரியே பரிசு வாங்கிட்டு வந்துட்டேன், பார்த்தீங்களா அப்பா. போற வழியிலே தாத்தா பாட்டியையும் பார்த்து பரிசை காண்பிக்கலாமா?"
மோகன் (அப்பா) தன் மனைவியை பார்க்க, அவள் "அதுக்கென்ன, ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துடலாம்" என்றாள்

கார் சிவானந்த குருகுலம் நோக்கி விரைந்தது.//

************

வாங்க‌ பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை...

எதிர்பாராத‌ முடிவு வ‌ர‌ வேண்டும் என்று யோசித்து எழுதிய‌து...

ஆயினும், நீங்க‌ள் சொல்லும் அந்த‌ பாராகிராஃப் சேர்த்திருந்தால், இன்னும் ரொம்ப ந‌ல்லா இருந்திருக்கும்...

எனக்கு கதை எல்லாம் எழுதி அனுபவம் இல்லை... அதான், அந்த முதிர்ச்சியின்மை தெரிகிறது...

இனி யோசித்தால், நீங்கள் சொன்னது போல், மெருகேற்ற முயற்சிக்கிறேன்...

நன்றி "தலை"வா...

R.Gopi said...

இந்த பதிவிற்கு வாக்களித்து "தமிழிஷில்" பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....

kiruthiga
balak
square
VGopi
mvetha
spice74
ldnkarthik
jollyjegan
Kalakalapriya
csKrishna
era

cdhurai said...

நண்பா,

உலகின் அசைக்க முடியாதது அன்பு... அது உள்ளவரை ஜீவன் இந்த பூமியில் வாழும்.... ஆனால் பெற்றவர்களை நெனைக்க கூட மறக்கும் ஜீவன்களை... இந்த கதை எதாவது செய்தால் சந்தோசம்... அது மட்டுமே நமக்கு வெற்றி.... வாழ்த்துகள் என்னை பொறுத்தவரை தேவை இல்லை... பெற்றவர்களை மக்கள் போற்றதவரை...

செல்லத்துரை..மதுரை

R.Gopi said...

//cdhurai said...
நண்பா,

உலகின் அசைக்க முடியாதது அன்பு... அது உள்ளவரை ஜீவன் இந்த பூமியில் வாழும்.... ஆனால் பெற்றவர்களை நெனைக்க கூட மறக்கும் ஜீவன்களை... இந்த கதை எதாவது செய்தால் சந்தோசம்... அது மட்டுமே நமக்கு வெற்றி.... வாழ்த்துகள் என்னை பொறுத்தவரை தேவை இல்லை... பெற்றவர்களை மக்கள் போற்றதவரை...

செல்லத்துரை..மதுரை//

***********

வாங்க‌ செல்ல‌துரை...

வந்த‌ வேக‌த்துல‌, ப‌டிச்சு ஒரு அருமையான‌ க‌ருத்தை ஆழ‌காக‌ சொல்லி சென்ற‌ உங்க‌ள் வேக‌ம் என்னை பிர‌மிக்க‌ வைத்த‌து... அதுதானே அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வால்பையன் said...

நல்ல கதை!

வளர்ந்த பிறகு இவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்னு யார் கண்டா!?

R.Gopi said...

//வால்பையன் said...
நல்ல கதை!

வளர்ந்த பிறகு இவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்னு யார் கண்டா!?//

வாங்க‌ வால்...

வந்து, ப‌டித்து, வாழ்த்திய‌த‌ற்கு ந‌ன்றி...

அதானே யார் கண்டா??

விக்னேஷ்வரி said...

கதை வித்தியாசமா நல்லாருக்கு. ப்ரின்சிபலை "என்றாளு"க்கு பதிலாக "என்றார்" என விளித்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும் கோபி.

R.Gopi said...

//விக்னேஷ்வரி said...
கதை வித்தியாசமா நல்லாருக்கு. ப்ரின்சிபலை "என்றாளு"க்கு பதிலாக "என்றார்" என விளித்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும் கோபி.//

*************.

வாங்க‌ விக்னேஷ்வ‌ரி...

ப‌திவிற்கு வ‌ருகை தந்து, ப‌டித்து, க‌ருத்து சொன்ன‌த‌ற்கு ந‌ன்றி...

நீங்கள் சொன்னது போலவே, மாற்றி விட்டேன்...

Anonymous said...

ஷைலஜாக்கு ரிப்பீட்டு சொல்றேன். போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

கதை நன்றாக வந்திருக்கிறது கோபி. உயிரின் உயிர்கள் சின்னஞ்சிறு சிட்டுக்கள்:)! ஷைலஜாவின் முதல் பின்னூட்டதை வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள்!

Unknown said...

கோபி முதல் கதையா?
//என்றார் கோமதி....//

என்றாள் கோமதி? இது மாதிரி இன்னோரு இடமும் வருகிறது.

//அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது//

கதை இங்குமுடிந்துவிடுகிறது.
பின்னால் எதற்கு”நீதி” நோட்ஸ் போட்டு இழுக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்லா இருக்கு. பரிசு பெற all the best :)

R.Gopi said...

//சின்ன அம்மிணி said...
ஷைலஜாக்கு ரிப்பீட்டு சொல்றேன். போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்//

வ‌ருகை தந்து, வாழ்த்திய‌த‌ற்கு மிக்க ந‌ன்றி சின்ன‌ அம்மணி...

R.Gopi said...

//ராமலக்ஷ்மி said...
கதை நன்றாக வந்திருக்கிறது கோபி. உயிரின் உயிர்கள் சின்னஞ்சிறு சிட்டுக்கள்:)! ஷைலஜாவின் முதல் பின்னூட்டதை வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள்!//

வண‌க்க‌ம் ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்...

க‌தையை ப‌டித்து, வாழ்த்திய‌த‌ற்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

R.Gopi said...

//கே.ரவிஷங்கர் said...
கோபி முதல் கதையா?
//என்றார் கோமதி....//

என்றாள் கோமதி? இது மாதிரி இன்னோரு இடமும் வருகிறது.

//அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது//

கதை இங்குமுடிந்துவிடுகிறது.
பின்னால் எதற்கு”நீதி” நோட்ஸ் போட்டு இழுக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!//

*********

வருகை தந்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... கதையின் முடிவில் சொன்ன அந்த 2/3 வரிகள் என் திருப்திக்காக எழுதப்பட்டது...

நன்றி ரவிஷங்கர் சார்...

R.Gopi said...

//Shakthiprabha said...
நல்லா இருக்கு. பரிசு பெற all the best :)//

வ‌ருகைக்கும், வாழ்த்திய‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி ஷ‌க்திப்ர‌பா..

நான் முன்பே சொன்ன‌துபோல், ப‌ரிசு முக்கிய‌மில்லை...கலந்து கொள்வ‌து தான் முக்கிய‌ம்...

Vidhoosh said...

அருமையான கதைக் களம். அழகாக எழுதியுள்ளீர்கள். நல்லாருக்கு கோபி.
வெளியிடும் முன் இன்னும் நாலைந்து முறை படித்தால் நிறைய ஐடியாக்கள் வரும், இன்னும் மெருகேற்ற.

தாமத வருகைக்கு மன்னிக்க.
:)

வித்யா

சுவாசிகா said...

நல்ல கதை..அசத்தல் திருப்பம்

வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

R.Gopi said...

//Vidhoosh said...
அருமையான கதைக் களம். அழகாக எழுதியுள்ளீர்கள். நல்லாருக்கு கோபி.
வெளியிடும் முன் இன்னும் நாலைந்து முறை படித்தால் நிறைய ஐடியாக்கள் வரும், இன்னும் மெருகேற்ற.

தாமத வருகைக்கு மன்னிக்க.
:)

வித்யா//

*********

வ‌ருகை தந்து, ப‌டித்து, வாழ்த்திய‌த‌ற்கு ந‌ன்றி விதூஷ்....

இன்னும் மெருகேற்றலாம்... ம்ம்ம்... கருத்துக்கு நன்றி...

R.Gopi said...

//சுவாசிகா said...
நல்ல கதை..அசத்தல் திருப்பம்

வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me//

*********

வாங்க‌ சுவாசிகா...

வ‌ருகை தந்து, ஊக்குவிக்கும் வித‌மான‌ க‌ருத்து சொன்ன‌த‌ற்கு என் ம‌ன‌மார்ந்த ந‌ன்றி...

தமிழ் said...

நல்ல கதை

R.Gopi said...

//திகழ் said...
நல்ல கதை//

********

வ‌ருகைக்கும், க‌ருத்து ப‌கிர்ந்த‌மைக்கும் ந‌ன்றி திக‌ழ்...

RAMYA said...

கருத்தும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு கோபி!

தாமதமா வந்தாலும் ஒரு சிறப்பான கதையை படிச்ச நிறைவை மனதிற்கு கொடுத்தது.

வெற்றிபெற வாழ்த்துக்கள்!

அமுதா said...

நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்புறம் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் முடிந்தால் பதிவிடுங்கள்.
http://nandhu-yazh.blogspot.com/2009/11/blog-post.html

R.Gopi said...

//RAMYA said...
கருத்தும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு கோபி!

தாமதமா வந்தாலும் ஒரு சிறப்பான கதையை படிச்ச நிறைவை மனதிற்கு கொடுத்தது.

வெற்றிபெற வாழ்த்துக்கள்!//

*******

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வ‌ருகை தந்து, க‌தையை ப‌டித்து வாழ்த்திய‌த‌ற்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி ர‌ம்யா...

R.Gopi said...

//அமுதா said...
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்புறம் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் முடிந்தால் பதிவிடுங்கள்.
http://nandhu-yazh.blogspot.com/2009/11/blog-post.html//

*********

தங்களின் வ‌ருகைக்கும், க‌தையை ப‌டித்து பாராட்டிய‌த‌ற்கும், வெற்றி பெற‌ வாழ்த்திய‌த‌ற்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி அமுதா...

தொடர்பதிவா... இதோ வந்து பார்க்கிறேன்...

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு தகவல் நண்பரே!

இது நம் வாழ்விலும் நாம் நடத்தி காட்ட வேண்டும்

------------

பரிசு பெற்றிட வாழ்த்துகள்.

R.Gopi said...

// நட்புடன் ஜமால் said...
நல்லதொரு தகவல் நண்பரே!

இது நம் வாழ்விலும் நாம் நடத்தி காட்ட வேண்டும்

------------

பரிசு பெற்றிட வாழ்த்துகள்.//

*********

வாங்க ஜமால்... எவ்ளோ நாள் ஆச்சு உங்கள இங்க பார்த்து... நலம், நலம் அறிய ஆவல்...

வருகை தந்து, படித்து, கருத்தும் வாழ்த்தும் சொல்லியதற்கு என் மனமார்ந்த நன்றி....

ஸ்வர்ணரேக்கா said...

கோபி அண்ணே..

நல்லா எழுதியிருக்கீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணே...

R.Gopi said...

// ஸ்வர்ணரேக்கா said...
கோபி அண்ணே..

நல்லா எழுதியிருக்கீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணே...//

********

வருகைக்கும், வெற்றி பெற வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றி தோழி ஸ்வர்ணரேக்கா அவர்களே.....

CS. Mohan Kumar said...

நல்லா இருக்கு கோபி..வாழ்த்துக்கள்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

R.Gopi said...

//Mohan Kumar said...
நல்லா இருக்கு கோபி..வாழ்த்துக்கள்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com//

***********

வருகை தந்து, கதையை படித்து, வாழ்த்தியதற்கு மிக்க நன்றி மோகன்குமார்....

அடலேறு said...

கோபி,

கடைசியில் நச் அருமையா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்

-அடலேறு

R.Gopi said...

//அடலேறு said...
கோபி,

கடைசியில் நச் அருமையா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்

-அடலேறு//

**********

மிக்க நன்றி அடலேறு...

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

parameswary namebley said...

கருத்துள்ள நச் கதை.. வாழ்த்துகள்..

R.Gopi said...

//parameswary namebley said...
கருத்துள்ள நச் கதை.. வாழ்த்துகள்..//

*****

Many thanks for your visit and wish.

Do visit regularly and support

Unknown said...

HI Gopi,


Long time Nice Story Best of luck for getting the prize.. more than the prize the moral was so good..

Kamesh

Unknown said...

Gopi

A few months back I got a story through mail.. .this is not about kids but...

A father call up his son and tell that he is deivorcing his wife. the son who is in states call his sisters who is in canada.. both of them talk to the Dad but fail to convice him over phone and decide to fly down...

After this Dad will be telling his wife atlast we can see our son / daughter without spending money they are coming down here

Kamesh

R.Gopi said...

//Kameswara Rao said...
HI Gopi,


Long time Nice Story Best of luck for getting the prize.. more than the prize the moral was so good..

Kamesh

***

Kameswara Rao said...
Gopi

A few months back I got a story through mail.. .this is not about kids but...

A father call up his son and tell that he is deivorcing his wife. the son who is in states call his sisters who is in canada.. both of them talk to the Dad but fail to convice him over phone and decide to fly down...

After this Dad will be telling his wife atlast we can see our son / daughter without spending money they are coming down here

Kamesh
--------
Many thanks for your visit and comments KAMESH....

My story is already out of RACE

சொல்லச் சொல்ல said...

தாயும் தகப்பனுமாக மனதை லேசாக வருடிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத திருப்பம். professional touch தெரிகிறது

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
தாயும் தகப்பனுமாக மனதை லேசாக வருடிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத திருப்பம். professional touch தெரிகிறது//

********

மிக்க நன்றி சொல்ல சொல்ல...