12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து

எடுக்கப்பட்ட படம்.. ரஜினி, அம்பிகா, ராதா இணைந்து நடித்த படம்... ரஜினி அவர்களின் அமைதியான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது... அதே நாளில் பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன்., கமல் கூட்டணியில் வெளிவந்த ஒரு மசாலா படம் பட்டையை கிளப்பியது... அது “சகலகலா வல்லவன்”.
13. மூன்று முகம் – 01.10.1982
மூன்று வேடங்களில் மூன்

று முகமாய் மிகவும் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை காட்டினார். துறவறம்
பூண்டு தொடங்கும் பாந்தமான காமெடி நடிப்பு, பின் பொறி பறக்கும் அலெக்ஸ் பாண்டியன் என பரிமளித்து பின் பகுதியில் ஜான் என கலக்கிய படம். இதுவே பின்னர்
ஹிந்தியில் "ஜான் ஜானி ஜனார்த்தன்" எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடி பறந்தது. குறிப்பாய் செந்தாமரைக்கும் ரஜினிக்கும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் தியேட்டரின் ஏகோபித்த ஆதரவு பெற்றது.
14. ஸ்ரீராகவேந்திரர் - 01.09.1985
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100வது படம்.... திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடனே மனதில் முடிவு செய்து வைத்திருந்தாராம்,.. இந்த

வேடத்தை 100வது படத்தில் ஏற்பது.... குருநாதர் பேனரில் நடிப்பது என்று... அதற்காகவே,
கே.பாலசந்தர் அவர்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் சொல்லி, இந்த படத்தை டைரக்ட் செய்ய சொன்னதான எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்...
கவிதாலயா தயாரிப்பு...
எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்... அருமையான இசை இளையராஜா... “அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்”, ”ஆடல் கலையே தேவன் தந்தது”, தேடினேன் தேவ தேவா. தாமரை பாதமே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மந்த்ராலய மகான் அவர்களின் காவியம் தமிழுக்கு
கிடைத்தது...
15.படிக்காதவன் - 11.11.1985கே.பி., எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை தொடர்ந்து ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த மற்றொரு டைரக்டர் ராஜசேகர்.
.jpg)
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த “குத்தார்” படத்தின் தமிழ் ரீமேக்... நடிப்பின் இமயமும் நடிகர் திலகம் சிவாஜி இவரும் சேர்ந்து கலக்கி,
மிகப் பெரிய வெற்றி. குடும்பத்திற்காக
உழைக்கும் அப்பாவியான டாக்சி டிரைவர், தம்பி சரியாக படிக்காமல், தீய வழியில் போவதை
கண்டு வெம்பும்
கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார்.. ஜோடி அம்பிகா.. 1985 தீபாவளிக்கு வெளியானது... இருவரின் நடிப்பும் வெகு பாந்தமாக வெளிப்பட்ட படமிது..
இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது...” இத்தனை
அப்பாவியா என நாகேஷ் கேட்கும் காமெடிகளில் கச்சிதம். தம்பிக்கு என
பாசம் கொட்டி, தன் வாழ்க்கையை அர்பணித்து விட்டு தம்பி உதாசினம் செய்து விட வெறுத்து ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என பாடும் போது இதயம் நனையும். காமெடி யதார்த்தம்
என இரு துருவங்களையும் இணைத்த பிரமிப்பு. ”ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்”, “ராஜாவுக்கு
ராஜா நான்டா” “சோடிக்கிளி எங்கே சொல்லு
சொல்லு” , “ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக” போன்ற சூப்பர்
ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.
16. தளபதி - 05.11.1991ஜி.வி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு...டைரக்டர் மணிரத்னம் அவர்களுடன் முதலில்
இணையும் படம்.. இளையராஜாவின் அதிரடி சூப்பர் ஹிட் இசை, வாலியின்
வைர வரிகளில் பட்டையை கிளப்பிய
பாடல்கள்... இது “தளபதி” படத்திற்கு
எதிர்பார்ப்பை எகிறவைத்த கூட்டணி..உயரிய இயக்கம், தேர்ந்த திரைக்கதை, குளு குளு ஒளிப்பதிவு என ரஜினியும் மம்முட்டியும்
அதிரடியாய் நடித்தது. அரவிந்த்சாமி
அறிமுகமான படம்..நட்பை கூட கற்பை
போல் எண்ணுவேன்
என கர்ணனாய் வாழும்
கதாபாத்திரம்.மம்முட்டி ரஜினிக்கு இணையான படம் முழுதும் வந்து
பாராட்டத்தக்க நடிப்பை தந்த
படம்... ரஜினியின் பல பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த படம்...
“ராக்கம்மா கைய தட்டு”, சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, காட்டுக்குயிலு
மனசுக்குள்ள”, யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே”, ”சின்ன தாயவள் தந்த ராசாவே”, “மார்கழிதான் ஓடி போச்சு போகியாச்சு” என்று அனைத்து பாடல்களும் ஹிட் ஆன ஒரு படம் தான் “தளபதி”... 1991
ஆம் ஆண்டு
தீபாவளி ரிலீஸ்... வெற்றி பெற்ற படம்..
17.மன்னன் - 14.01.1992பி.வாசு.இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்... ரஜினியின்
.jpg)
அனைத்து பரிமாண நடிப்பும் வெளிப்பட்ட ஒரு படம்.. காதல், சோகம், அன்பு, பாசம், வீரம் என்று
அனைத்து துறைகளிலும் ரஜினி சிக்ஸர்
அடித்திருப்பார்... தாயை மதிப்பதில் மன்னன், சண்டி ராணியான மனைவி அடக்குவதில் மன்னாதி மன்னன்.
இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.. அதிலும் கவிஞர் வாலி எழுதி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத
உயிரில்லையே” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்... (இந்த பாடலை
கல்வெட்டில்
செதுக்கி வைத்துள்ளார் யேசுதாஸ் அவர்கள் தான் கட்டிய ஒரு கோயிலில்..)
அம்மா என்றழைக்காத பாடலில் தன் தாயை நினைக்காத
தமிழனே இல்லை
என சொல்ல வைத்த பாடல். அடங்காத திமிர் பிடித்த பெண்ணாக விஜயசாந்தி ரஜினியுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார்... கவுண்டருடன் டிக்கிட்டு கவுண்டரில் அடிக்கும்
லூட்டி எக்கச்சக்கம்.
18. அண்ணாமலை - 27.06.1992
ஆக்ரோஷமான ரஜினியை வெளிக்கொணர்ந்த, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா
டைரக்ட் செய்த படம்.. தேவாவின் பட்டையை கிளப்பிய இசை, கலகல
திரைக்கதை, உணர்வு பூர்வமான நடிப்பு என சுரேஷ் கிருஷ்ணாவின்
.jpg)
இயக்கத்தில் செம தூள்.கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா தயாரிப்பாக வந்தது..
முதலில் டைரக்டர் வசந்த் இயக்குவதாக இருந்து,
சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வந்தது..
இசையமைப்பாளர் தேவா முதன் முதலாம ரஜினி
படத்திற்கு இசையமைத்த படம்... “கொண்டையில் தாழம்பூ” , “ரெக்க கட்டி
பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்”, வந்தேண்டா பால் காரன் அடடா, பசு
மாட்ட பத்தி
பாடப்போறேன்” (ரஜினியின் அட்டகாசமான அறிமுக பாடல்), “ஒரு பெண்புறா” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மாபெரும்
வெற்றிப்படம்.. என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கியதில் முக்கிய பங்காற்றிய படம் என்று ரஜினியே சொன்ன படம் இது.
19.பாட்ஷா - 12.01.1995
சாந்தமான வம்புச் சண்டை எதற்கும் போகாத ஆட்டோக்காரன் என வலம்
வந்து இடைவேளை வேளையில் ஆக்ரோஷமான அடிதடி ஆள் என உருமாறி
அதகளப்படுத்தும் அற்புதமான நடிப்பு.
எழுத்தாளர் பாலகுமாரன் ரஜினிக்காக எழுதிய மறக்க முடியாத பஞ்ச் டயலாக் “ நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி”
மிடுக்காக அமைந்த படம்.
இதிலும், இசையமைப்பாளர் தேவாவின் இசை பெரிதும் பேசப்பட்டது... “ நான் ஆட்டோக்காரன்” (அட்டகாச அறிமுகப்பாடல்), “தங்க மகன் இங்கு சிங்க நடை
போட்டு”, “ அழகு, நீ நடந்தால் நடை அழகு” (இது ரஜினியின் தசாவதார
பாடல்..... இந்த பாடலில் 10 அவதாரம் எடுத்து இருப்பார்), “ரா ரா ரா ராமையா” (இது சித்தர் சொல்லிய வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக வைத்து கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்) என்று தேவாவின் இசை ராஜாங்கம் நடந்த படம் இது...
ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுத்து, அதன் பின்னர் போட்டுக்கோ என ஸ்வீட் பீடாவும் கொடுத்தது மாதிரி முழு திருப்தி தந்த படம். படம் மெகா ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
20.சிவாஜி - 15.06.2007பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படம்.. இங்கிலாந்
தின் பாக்ஸ் ஆஃபீஸ் யூ.கே.டாப்-10ல், 9வது இடம் பிடித்து, யூ.கே.டாப்-10

படங்களில் நுழைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை பெற்றது... ஜூன் 2007ல் வெளிவந்த “சிவாஜி” செய்த சாதனை, இன்று (ஃபிப்ரவரி 2010) வரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது...... இந்திய படங்கள் என்றாலே
பாலிவுட்டின் ஹிந்தி படங்கள் தான் என்று நினைத்திருந்த சர்வதேச திரைப்பட சந்தைக்கு, தமிழ் (கோலிவுட்) என்று ஒரு மார்க்கெட் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய படம்..சர்வதேச சந்தைக்கு தமிழ் படத்தை கொண்டு சென்று, நினைத்துப் பார்க்க முடியாத வருவாயை ஈட்டி, தமிழ் படத்தை தரம் உயர்த்திய மைல்கல்.
இன்றைய தலைமுறையை ரசிக்க வைத்து அதிரடி, ஸ்டைல் என கலர்ஃபுல் கலக்கல். ரஜினி இன்னும் இவ்வளவு இளமையா, அழகா என ஆச்சர்யப்படவைத்த அற்புதம். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உலக அளவிலான வசூலில் மிக பெரிய சாதனை படைத்த படம்.... ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசப்பட்ட படம்...
அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு எழுதியது இந்த பதிவு. மொத்தமுள்ள 150கும் மேற்பட்ட ஒரு பட்டியலில் 20ஐ மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம். பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே. வணக்கம்தோழமைகள் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.