Monday, February 14, 2011

ஆட்டைய போட்ட ஆண்டிமுத்து ராசா

எனது நண்பர் காவிரிமைந்தன் அவர்கள் இன்றைய ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளின் அடுத்தவர் பணத்தை ஆட்டையை போட்டு சொகுசு வாழ்க்கை நடத்தும் நிலைமையை எண்ணி மனம் நொந்து எழுதிய சில வரிகள் இதோ :

ராஜாதி ராஜாக்கள் கூட வாழாத வாழ்க்கையை
வாழத்தான் தெரிந்திருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்!

அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலங்கள் அரங்கேறும் இந்தியாவில் - இதுதான் சுதந்திரமா?

இதைத்தான் நாம் போராடிப் பெற்றோமா?

விழிப்புணர்வு ஒரு துளியும் நம்மிடத்தில் இல்லாத வரை..

இவையெல்லாம் தொடர்கதையே!


************


ஆண்டிமுத்து ராசா, நாட்டை ஆட்டையை போட்டது நம் அனைவருக்கும் தெரியும்... அப்படி கிடைத்த அந்த சொற்ப பணத்தில் (வெறும் 1,70,000 கோடிகள் தான்), அந்த பரம ஏழை கட்டிய அவரின் “சிறிய வீட்டை” பாருங்கள்...

27 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அண்ணா ’நாமம்’ வாழ்க!

R.Gopi said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அண்ணா ’நாமம்’ வாழ்க!//

**********

ஹா...ஹா... வாங்க ஷங்கர் ஜி...

அண்ணா பேர சொல்லி இந்த “தம்பி தல” போட்ட நாமம் இருக்கே... அத இந்த உலகமே மறக்க முடியாது...

சித்தம் குறும்படத்தை பார்த்து கருத்து சொல்லவே இல்லையே ஜி..

சங்கவி said...

இந்த வீட்டைப்பார்த்தால் ரொம்ப ஏழை மாதிரி தெரியுது...

R.Gopi said...

//சங்கவி said...
இந்த வீட்டைப்பார்த்தால் ரொம்ப ஏழை மாதிரி தெரியுது...//

********

நம்ம “தல”யோட ஆஸ்தான சிஷ்யன்னா கண்டிப்பா பரம ஏழையா தான் இருப்பாரு...

அதான் இந்த சின்ன வீடு கட்டி இருக்காரு...

ஹுஸைனம்மா said...

நெசமாவே இது ராசா வீடுதானா? நெம்ப ஜிம்பிளா கீது? :-))))

கிரி said...

கோபி இது வேற ஏதாவது வீடா இருக்க போகுது.. எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை காரணம் இது மாடர்னாக இருக்கிறது. இதைப்போல இவர் கட்டுவாரா என்று தெரியவில்லை..

கே. ஆர்.விஜயன் said...

இது அவரோட ”சின்ன’ வீடா. சின்னவீடே இப்படின்ன அவருடைய பெரிய வீடு எப்படி இருக்கும்.

R.Gopi said...

//ஹுஸைனம்மா said...
நெசமாவே இது ராசா வீடுதானா? நெம்ப ஜிம்பிளா கீது? :-))))//

******

வாங்க ஹூஸைனம்மா...

பாவம்மா.... ஆண்டிமுத்து ஆட்டைய போட்ட அமவுண்ட் கம்மியாமே... அதான் இந்த நெம்ப ஜிம்பிளான வீடு..

R.Gopi said...

// கிரி said...
கோபி இது வேற ஏதாவது வீடா இருக்க போகுது.. எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை காரணம் இது மாடர்னாக இருக்கிறது. இதைப்போல இவர் கட்டுவாரா என்று தெரியவில்லை..//

*********

வாங்க கிரி...

அம்புட்டு கோடி அமவுண்ட ஆட்டைய போட்ட ஆண்டிமுத்து இதை விட பேலஸ் கட்டுவார் ஜி... நீங்க வேற..

R.Gopi said...

//கே. ஆர்.விஜயன் said...
இது அவரோட ”சின்ன’ வீடா. சின்னவீடே இப்படின்ன அவருடைய பெரிய வீடு எப்படி இருக்கும்.//

******

வாங்க விஜயன் சார்....

ஹா...ஹா.. பெரிய டெர்ரரா இருக்கீங்களே...

Chitra said...

பாவம்ங்க... ஒரு கல்லு விட்டு எறிஞ்சா - தாங்காத வீட்டை கட்டிட்டாங்களே!

Mrs. Krishnan said...

//அந்த பரம ஏழை
கட்டிய அவரின் “சிறிய வீட்டை”
பாருங்கள் ...//
-
அம்மாம் பெரிய அமௌண்ட்ட பதுக்க இம்மாம் பெரிய வீடு வேண்டாங்களா!!? என்னாங்க நீங்க...... கெஸ்ட் ஹவுஸ் இருக்கா?

R.Gopi said...

// Chitra said...
பாவம்ங்க... ஒரு கல்லு விட்டு எறிஞ்சா - தாங்காத வீட்டை கட்டிட்டாங்களே!//

*******

ஹா...ஹா...ஹா....

வாங்க சித்ரா... நான் தான் சொன்னேனே... ஏழை கட்டிய வீடுன்னு

R.Gopi said...

//Mrs. Krishnan said...
//அந்த பரம ஏழை
கட்டிய அவரின் “சிறிய வீட்டை”
பாருங்கள் ...//
-
அம்மாம் பெரிய அமௌண்ட்ட பதுக்க இம்மாம் பெரிய வீடு வேண்டாங்களா!!? என்னாங்க நீங்க...... கெஸ்ட் ஹவுஸ் இருக்கா?//

**********

யப்பா... ஆண்டிமுத்து ஆட்டைய போட்ட மேட்டர் பத்தி எழுதினா, என்னா டெர்ரர் கமெண்ட்ஸா வருதுப்பா....

இராஜராஜேஸ்வரி said...

இதுதான் சுதந்திரமா?
இதைத்தான் நாம் போராடிப் பெற்றோமா?//
kettukkoontee Iruppooomm!!

சொல்லச் சொல்ல said...

க்....க்.... கீழ்வேல மட்டும் தானே முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள அவசரப்பட்டுடீங்களேப்பா! இன்னும் மேவேல பாக்கி கிடக்கே.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பதிவுலகில் உள்ள பகுத்தறிவும் விழிப்புணர்வும் தமிழகமெங்கும் பிரதிபலித்தால், நல்ல விடியல் கிடைக்கும் என்று தோன்றுகிறது.

கோமதி அரசு said...

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ராஜாக்கள் வீடு, அரண்மனை என்று கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.

R.Gopi said...

//இராஜராஜேஸ்வரி said...
இதுதான் சுதந்திரமா?
இதைத்தான் நாம் போராடிப் பெற்றோமா?//
kettukkoontee Iruppooomm!!//

******

கேட்டு என்ன பயன்... உழைப்பவர்கள் உழைத்துக்கொண்டே இருக்க, இது போன்று அநியாய வழியில் பிழைக்கவும், கொழிக்கவுமே செய்கிறார்கள்...

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
க்....க்.... கீழ்வேல மட்டும் தானே முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள அவசரப்பட்டுடீங்களேப்பா! இன்னும் மேவேல பாக்கி கிடக்கே.//

*********

ஹா...ஹா...ஹா... இது வேறயா...

அந்த ஏரியா பூராவும் வளைச்சு வளைச்சு கட்டினதாம்...

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பதிவுலகில் உள்ள பகுத்தறிவும் விழிப்புணர்வும் தமிழகமெங்கும் பிரதிபலித்தால், நல்ல விடியல் கிடைக்கும் என்று தோன்றுகிறது.//

*******

நம்மால் முடிந்தவரை தெரிந்தவர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி சிறிய அளவில் மாற்றங்கள் வந்தாலே, வரும் தேர்தலில் அது பெரிய அளவில் எதிரொலிக்க வாய்ப்புண்டு...

R.Gopi said...

//கோமதி அரசு said...
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ராஜாக்கள் வீடு, அரண்மனை என்று கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.//

********

வாங்க கோமதி மேடம்...

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...அதான் திஹார் ஜெயில்ல தூக்கி போட்டாச்சே.

அநியாயமா அடிச்சு சேர்த்து இதை விட பெரிய பங்களா கட்டினாலும், அவர்கள் இருக்கப்போவது என்னவோ திஹார் போன்ற ஜெயிலில் சிறிய அறைகளிலேயே!!!

ஆனந்தி.. said...

நானும் ஈமெயில் இல் இந்த படங்கள் எல்லாம் பார்த்தேன் கோபி...ம்ம்..வயிதெரிச்சல் படுவதை தவிர என்னத்தை சொல்ல...????

Jaleela Kamal said...

ஆட்டைய போட்ட பணம் ரொம்ப கம்மியா கீதே..’ஐய அந்த தெரிதே அந்த குடிசையவ சொல்றீய

R.Gopi said...

//ஆனந்தி.. said...
நானும் ஈமெயில் இல் இந்த படங்கள் எல்லாம் பார்த்தேன் கோபி...ம்ம்..வயிதெரிச்சல் படுவதை தவிர என்னத்தை சொல்ல...????//

********

வாங்க ஆனந்தி....

நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்....

R.Gopi said...

// Jaleela Kamal said...
ஆட்டைய போட்ட பணம் ரொம்ப கம்மியா கீதே..’ஐய அந்த தெரிதே அந்த குடிசையவ சொல்றீய//

********

வாங்கோ....

ஆக்சுவலா ஆட்டைய போட்டது இன்னும் எவ்வளவோ விஷயங்களில், இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் கோடிகள்... நமக்கு தெரிஞ்சது இவ்ளோ தான்...

R.Gopi said...

பதிவிற்கு வருகை தந்து, “இண்ட்லி”யில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி....