Wednesday, February 23, 2011

"பஸ் டே” - அராஜக கொண்டாட்டங்கள்



”பஸ் டே” கொண்டாட்டங்கள்

இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது.. இளைஞர்களே கனவு காணுங்கள், நம் நாடும் நாளை வல்லரசாக மாறும் என்று... இளைஞர்களே... இன்று நீங்கள் வாழ்வில் செய்யும் எந்த விஷயங்களும், எடுக்கும் எந்த நல்ல முடிவுமே வருங்காலத்தில் நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் என்று இன்று இருக்கும் பல நல்லவர்கள் உங்களை பற்றி
உயர்வாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் செய்வது என்ன?

ஒவ்வொரு வருடமும் ”பஸ் டே” கொண்டாட்டங்கள்....

ஆஹா... பஸ் டே கொண்டாட்டமா, தாராளமாக கொண்டாடுங்களேன்... பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து குடும்பங்களும் எப்படி மகிழ்ச்சியாக தன் சுற்றம் சூழ மகிழ்வாக கொண்டாடுகிறோமோ அப்படித்தானே இந்த பஸ் டே கொண்டாட்டமும்..

இந்த கொண்டாட்டத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
* மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பஸ் டிப்போக்களுக்கு சென்று, அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து, பொதுமக்கள் முகம் சுளிக்காமல் பயணம் செய்யும் வகையில் செய்யலாம்...

* வருடம் முழுதும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி குழந்தைகள் என்று எல்லோரையும் பத்திரமாக செல்லும் இடம் சேர்க்கும் வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் டிக்கெட் கொடுக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு ஏதேனும் பதில் மரியாதை செய்யலாம்...

* பேருந்தில் பயணிக்கும் சக பயணியர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாம்...

* தான் கல்லூரிக்கு செல்வது படிப்பதற்கே, மற்றபடி தான் எந்த வேலையையும் (மாணவர்களை கவனித்து கொள்ளும் தந்தை, அண்ணன்கள் போல்) செய்யாமல், வெறுமே புத்தகங்களை கையிலேந்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்து, அவர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை கிரகித்து அதை தன் வாழ்நாளுக்கு உபயோகப்படுத்துதலாம்...

ஆனால் ”பஸ் டே” என்ற பெயரில் அந்த தினத்தில் சென்னையெங்கும் நடக்கும் கூத்துகள் என்ன?

பேருந்துகளில் உடன் பயணிக்கும் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பெரிதாக ஓசையெழுப்புவது...

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பெண் பயணிகளை கிண்டல் செய்வது

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகள் யாரேனும் இந்த நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முன்வந்தால் அவர்களை கும்பலாக சேர்ந்து நையப்புடைத்து காயப்படுத்துவது

பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு ஆட்டம் என்ற பெயரில் அனைத்து கன்றாவிகளையும் செய்வது

பேருந்துகள் செல்லும் வழியெங்கும் சாலைகளில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்வது, கடைகளை சூறையாடுவது, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பயணியர்களை ஏசுவது, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பெண்களை கண்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அசிங்கமான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதில்லை (உபயம் : இன்றைய கேவலமான திரைப்படங்கள்).... எதிர்ப்படும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவது....

நாட்டின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் காவலர்கள் இந்த அராஜக மாணவர்களின் அட்டகாசங்கள், கூத்துக்கள் அத்துமீறாமல் இருக்க, பெரும்படையாக இவர்களுடன் பலதரப்பட்ட வாகனங்களில் கூடவே ஊர்வலம் வர செய்வது...

இதெல்லாம் இந்த படிக்கும் வயதில், இளைஞர்கள் / மாணவர்கள் செய்ய காரணம் என்ன? இன்றைய அக்கிரம அரசியல்வியாதிகள் தான்...

போன வருடம் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? இதோ, இந்த வருடமும் இந்த “பஸ் டே” கொண்டாட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றனர்... ஏராளமான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்... பெண் காவல்துறை அதிகாரியை கொச்சையான, ஆபாசமான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தி உள்ளனர்... ஏன், இவர்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா, அவர்களை இப்படி தான் நடத்துகிறார்களா? இது தான் இவர்கள் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் பாடமா?

இந்த மாணவர்களின் கடமை தான் என்ன?

இன்றைய சூழலின் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவர்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்... நன்றாக உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்...... எப்படி உணவருந்த வீட்டில் உட்காரும் போது, உணவை ருசித்து சாப்பிடுகிறார்களோ, திரையரங்குகளுக்கு சென்றால் திரைப்படத்தை ரசித்து பார்க்கிறார்களோ, அதே போல் கல்லூரியில் படிக்கும் அந்த 3-4 வருடங்கள் அவர்களின் முழு கவனமும் படிப்பின் மீது மட்டுமே இருக்க வேண்டும்...

அனைத்து விதமான தீய பழக்கங்களில் இருந்தும் கவனமாக ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளலாம்... முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியிலாவது உதவியாக இருக்கலாம்... தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு எந்த அநாவசிய செலவையும் வைக்காமல் இருக்க குறைந்தபட்சம் முயற்சிக்கவாவது செய்யலாம்... ஓய்வு நேரங்களை தன் வாழ்வை வளமாக்கும் வழியில் நூலகங்களில் சென்று செலவிடலாம்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்னால் சென்று, கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தில், தன் பகுதியில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...

செய்வார்களா இன்றைய மாணவர்கள்?? இல்லையென்றால், இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தானா?

நம் நாட்டின் இன்றைய நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத ஒரு சராசரி குடிமகன்..

(ஆர்.கோபி)

32 comments:

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய
மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது

yes

R.Gopi said...

வாங்க சரவணன்...

காலை வந்தவுடன், செய்தி அறிந்து, மனம் நொந்து போய் தான் இந்த பதிவை எழுதினேன்...

முதலில் வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.....

Chitra said...

.....இப்பொழுதுதான், முதன் முறையாக நடந்த சம்பவங்களை முழுதும் வாசிக்கிறேன்.... வேதனையாகத்தான் இருக்கிறது.

Mrs. Krishnan said...

சமுதாய அக்கறை உள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

//இன்றைய சூழலின் மிகுந்த
சிரமங்களுக்கிடையில்
இவர்களை பெற்றோர்கள்
கல்லூரியில்
சேர்த்து விடுகிறார்கள்...
நன்றாக
உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்
குறிக்கோளாக இருக்க
வேண்டும்//

பெற்றோரின் சிரமங்களை புரிந்து கொண்டாலே மாணவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது நிச்சயம்.

பொன் மாலை பொழுது said...

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் அரசியல்தான். அரசியலில் செல்வாக்கு உள்ளவர்களின் ,அவர்களின் அடிபொடிகளின் வீட்டு பிள்ளைகள்தான் இவை போன்ற மாணவ கலாசார சீரழிவுக்கு காரணம். இவை போன்ற செயல்களில் ஈடுபடும் அவர்களுக்கு வருங்கால அரசியலில் இடம் கிடைத்துவிடும். அதற்க்கான முன்னோட்டமே இவைகள். அரசோ, கல்வி ஸ்தாபனங்களோ இவைகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

R.Gopi said...

//Chitra said...
.....இப்பொழுதுதான், முதன் முறையாக நடந்த சம்பவங்களை முழுதும் வாசிக்கிறேன்.... வேதனையாகத்தான் இருக்கிறது.//

********

வாங்க சித்ரா... நானும் இன்று காலை வந்ததும் இந்த செய்தியை படித்து மனம் நொந்தேன்... இது போன்ற மாணவர்களால் எதிர்காலத்திற்கு என்ன பயன்?

S Maharajan said...

நல்ல சமுக அக்கறையுள்ள பதிவு
கோபி,அரசும்,அந்த கல்லூரியும் , பெற்றோர்களும் இதை கண்டிக்க வேண்டும்

R.Gopi said...

//Mrs. Krishnan said...
சமுதாய அக்கறை உள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

//இன்றைய சூழலின் மிகுந்த
சிரமங்களுக்கிடையில்
இவர்களை பெற்றோர்கள்
கல்லூரியில்
சேர்த்து விடுகிறார்கள்...
நன்றாக
உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்
குறிக்கோளாக இருக்க
வேண்டும்//

பெற்றோரின் சிரமங்களை புரிந்து கொண்டாலே மாணவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது நிச்சயம்.//

********

வாங்க திருமதி கிருஷ்ணன்...

செய்தியை படித்து, மனம் நொந்து இந்த பதிவிட்டேன்...

எதிர்காலத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இன்றே நம் மனதில் தோன்றினால் ஒழிய இது போன்ற நிகழ்வுகளை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை...

R.Gopi said...

//கக்கு - மாணிக்கம் said...
இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் அரசியல்தான். அரசியலில் செல்வாக்கு உள்ளவர்களின் ,அவர்களின் அடிபொடிகளின் வீட்டு பிள்ளைகள்தான் இவை போன்ற மாணவ கலாசார சீரழிவுக்கு காரணம். இவை போன்ற செயல்களில் ஈடுபடும் அவர்களுக்கு வருங்கால அரசியலில் இடம் கிடைத்துவிடும். அதற்க்கான முன்னோட்டமே இவைகள். அரசோ, கல்வி ஸ்தாபனங்களோ இவைகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்.//

********

வாங்க சுக்கு மாணிக்கம்...

அது தான் சொன்னேன்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து இது போன்ற படிக்கும் மாணவர்களை அராஜகம் செய்ய தூண்டும் இந்த அவலம் என்று தான் மாறுமோ??

R.Gopi said...

//S Maharajan said...
நல்ல சமுக அக்கறையுள்ள பதிவு
கோபி,அரசும்,அந்த கல்லூரியும் , பெற்றோர்களும் இதை கண்டிக்க வேண்டும்//

********

வாங்க மகராஜன்...

படிக்கும் காலத்தில் அற்புதமான நேரத்தை இது போன்ற அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துகிறார்களே என்று மனம் நொந்து எழுதியது இந்த பதிவு....

ஹுஸைனம்மா said...

வருஷா வருஷம், இப்படி ஏதாவது ஒரு சங்கடத்தினை மாணவர்கள் வரவழைத்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் ஊழலில் மாட்டுவதைப் போல.

//மாணவர்கள் .. அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து,//

நல்ல ஐடியா.

படுக்காளி said...

மிக அருமையான பதிவு.

வெறும் பிரச்சனைகளை மட்டும் சொல்லாது, என்ன செய்ய வேண்டும், அதற்கான நடைமுறை தீர்வு என்ன என சொன்னதில் உயர்ந்து நிற்கிறது.

சூப்பர்.

இளைய தலைமுறை ஒரு காட்டாற்று வெள்ளம் போல். அவர்களை வழி நடத்தி, ஆக்கபூர்வமாய் ஆக்குவது மிக முக்கியம்.

இந்த அருமையான கருத்துக்கள், அவர்களை சென்றடைய வேண்டும்.

R.Gopi said...

//
ஹுஸைனம்மா said...
வருஷா வருஷம், இப்படி ஏதாவது ஒரு சங்கடத்தினை மாணவர்கள் வரவழைத்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் ஊழலில் மாட்டுவதைப் போல.

//மாணவர்கள் .. அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து,//

நல்ல ஐடியா//

**********

வாங்க ஹூஸைனம்மா... வருகை தந்து பதிவை படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

காலை வந்து இந்த செய்தியை படிக்கும் போது வருத்தமாக இருந்தது. விளைவே இந்த பதிவு...

R.Gopi said...

//
படுக்காளி said...
மிக அருமையான பதிவு.

வெறும் பிரச்சனைகளை மட்டும் சொல்லாது, என்ன செய்ய வேண்டும், அதற்கான நடைமுறை தீர்வு என்ன என சொன்னதில் உயர்ந்து நிற்கிறது.

சூப்பர்.

இளைய தலைமுறை ஒரு காட்டாற்று வெள்ளம் போல். அவர்களை வழி நடத்தி, ஆக்கபூர்வமாய் ஆக்குவது மிக முக்கியம்.

இந்த அருமையான கருத்துக்கள், அவர்களை சென்றடைய வேண்டும்.//

*********

சித்தம் குறும்படத்தை எடுத்து, வெட்டி, ஒட்டிய படுக்காளி அவர்களே ... வருக.. வருக...

பதிவை ஆழ்ந்து படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தலைவா..

கோமதி அரசு said...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...//


சமுதாய அக்கறை உள்ள பதிவு.
நாளைய, இன்றைய மாணவ சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான கருத்துக்களைக் கொண்ட பதிவு.

முன்பு எல்லம் பஸ் டே என்றால் பஸ்ஸுக்கு அலங்காரம் செய்து , நடத்துனர்,ஓட்டுனருக்கு மரியாதைகள் செய்து இனிப்பு வழங்கி மகிழ்வார்கள்.

R.Gopi said...

// கோமதி அரசு said...
சமுதாய அக்கறை உள்ள பதிவு.
நாளைய, இன்றைய மாணவ சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான கருத்துக்களைக் கொண்ட பதிவு.

முன்பு எல்லம் பஸ் டே என்றால் பஸ்ஸுக்கு அலங்காரம் செய்து , நடத்துனர்,ஓட்டுனருக்கு மரியாதைகள் செய்து இனிப்பு வழங்கி மகிழ்வார்கள்.//

*******

வாங்க கோமதி மேடம்...

நலமா? தங்கள் வருகைக்கும், மேலான கருத்திற்கும் நன்றி மேடம்..

நீங்க சொல்றது எல்லாம் முன்னாடி மேடம்.. இப்போ எல்லாம், அராஜகம், ரகளை, கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, காவல்துறை அதிகாரிகளையே அடித்தல் போன்ற நல்ல (!!??) விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள்...

sathishsangkavi.blogspot.com said...

நீங்க சொல்வது சரிதான் கோபி என்ன தான் சொன்னாலும் இந்த பசங்க கேப்பாங்களா மாட்டாங்க அவுங்க வயது அப்படி...

பஸ் டே கொண்டாடுகிறோன் என ஆரம்பிச்சதும் அவுங்களுக்கு பஸ் கொடுத்த அதிகாரிகள் முதல் தவறு..

இதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் அதிகாரிகள் இரண்டாவது தவறு..

மாணவர்களை ஒழுங்குபடுத்தாக கல்லூரி மேல் மூன்றாவது தவறு..

தவறு எல்லார் மேலயும் இருக்கு என்ன செய்வது நம்ம நிலைமை இப்படி இருக்கு...

R.Gopi said...

//சங்கவி said...
நீங்க சொல்வது சரிதான் கோபி என்ன தான் சொன்னாலும் இந்த பசங்க கேப்பாங்களா மாட்டாங்க அவுங்க வயது அப்படி...

பஸ் டே கொண்டாடுகிறோன் என ஆரம்பிச்சதும் அவுங்களுக்கு பஸ் கொடுத்த அதிகாரிகள் முதல் தவறு..

இதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் அதிகாரிகள் இரண்டாவது தவறு..

மாணவர்களை ஒழுங்குபடுத்தாக கல்லூரி மேல் மூன்றாவது தவறு..

தவறு எல்லார் மேலயும் இருக்கு என்ன செய்வது நம்ம நிலைமை இப்படி இருக்கு...//

*********

வாங்க சங்கவி...

வயசு ஓகே பாஸ்... நான் சொல்ல வர்றது என்னன்னா, இவ்ளோ பெரிய தடிமாடு மாதிரி இருக்கறவனுங்களுக்கு மத்த பெண்களை ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கமெண்ட் அடிப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது பேருந்து, மற்ற வாகனங்களையோ தீயிட்டு கொளுத்துவது என்பதெல்லாம் தவறு என்பது தெரியாதா?

M Arunachalam said...

Excellant Gopi. I don't know whether these so-called students will listen to such sane voices. But, you have done your duty. Keep it up.

R.Gopi said...

// M Arunachalam said...
Excellant Gopi. I don't know whether these so-called students will listen to such sane voices. But, you have done your duty. Keep it up.//

********

Thanks a lot Arun ji for your encouraging comments..

Actually the reason for students' behaviour is due to the corrupt politicians' support and encouragement to do such unacceptable activities.

ஸாதிகா said...

சமீக அக்கரை உள்ள பதிவு.

நட்புடன் ஜமால் said...

பள்ளி காலங்களில் நானும் பஸ்டே கொண்டாடியதுண்டு

ஆனால் இவ்வாறல்ல ... :(

R.Gopi said...

வாங்க ஜமால், ஸாதிகா....

அந்த காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் வெறுமே ஜாலிக்காக நடத்தப்பட்டது... ஆனால் இன்றைய இளைஞர்கள் சினிமாவில் காணப்படும் வன்முறையை அப்படியே எடுத்து கையாள்கிறார்கள்...

காவல்துறை அதிகாரிகளை தாக்குதல், பெண் அதிகாரிகளை ஆபாசமாக வசைபாடுதல் போன்றவை சினிமாவின் தாக்கமும், பின்புலத்தில் உள்ள அயோக்கிய அரசியல்வாதிகளின் சப்போர்ட் ஆகியவையே...

Jaleela Kamal said...

ரொம்ப கவலையா இருக்கு நாட்டின் நிலைமய நினச்சா, பஸ் டே வேரயா?

R.Gopi said...

// Jaleela Kamal said...
ரொம்ப கவலையா இருக்கு நாட்டின் நிலைமய நினச்சா, பஸ் டே வேரயா?//

*******

வாங்க ஜலீலா மேடம்...

பஸ் டேன்னு சொல்லி படிக்கற பசங்க பண்ணும் அராஜகத்தை காலை செய்தியில் வாசித்து நொந்து போய் தான் இந்த பதிவெழுதினேன்...

வெங்கட் நாகராஜ் said...

வேதனை!

suneel krishnan said...

இவர்கள் தான் எதிர்க்கால இந்தியாவா ? பயங்கர கோவம் வருது , எவ்ளவு கொழுப்பு இவர்களுக்கு ? சக மனிதனை மதிக்க தெரியாத ஒரு மாணவ சமுதாயம் உருவாகிறது ,இதன் கையில் நாம் நம் நாட்டை கொடுக்குறோம் ,உண்மையில் இவர்களின் செயல்கள் நம் பொறுமையை சோதிக்கின்றன ,கூட்டமாக இருந்தால் நல்லது செய்ய கை கால் வராதா ?

R.Gopi said...

வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

வெங்கட் நாகராஜ்
சுனில் கிருஷ்ணன்..

R.Gopi said...

பதிவிற்கு வருகை தந்து, பதிவிற்கு ”இண்ட்லி”யில் வாக்களித்து, பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

mrskrishnan
chitrax
kkdavidbilla
gomathyarasu
kobikashok
anubagavan
chithu
sriramanandaguruji
RDX
venkatnagaraj
subam
tharun
vilambi
idugaiman
Karthi6
balak
bhavaan
easylife
tamilz
Mahizh
ambuli
karthikvlk
skyuvaraj
ipc4

Kousalya Raj said...

பஸ் டே அனுபவம் எனக்கும் உண்டு...ஆனால் சென்னையில் அப்போது இந்த அளவிற்கு கிடையாது...எல்லோருக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்து விஷ் பண்ணி ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும்...

இப்ப நீங்க சொல்லி இருக்கிற விசயங்களை படிக்கிறபோது நம்ம இளைஞர்கள் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து வேதனையாக இருக்கிறது.

கோபி உங்களின் ஆதங்கத்தில் பங்கு கொள்வதை தவிர வேறு என்ன சொல்வது...?

R.Gopi said...

//Kousalya said...
பஸ் டே அனுபவம் எனக்கும் உண்டு...ஆனால் சென்னையில் அப்போது இந்த அளவிற்கு கிடையாது...எல்லோருக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்து விஷ் பண்ணி ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும்...

இப்ப நீங்க சொல்லி இருக்கிற விசயங்களை படிக்கிறபோது நம்ம இளைஞர்கள் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து வேதனையாக இருக்கிறது.

கோபி உங்களின் ஆதங்கத்தில் பங்கு கொள்வதை தவிர வேறு என்ன சொல்வது...?//

********

இந்த நிகழ்வு நடந்து அடுத்த இரு தினங்களில் மீண்டுமொரு வன்முறையை மாணவர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்... இதிலும் நிறைய காவல்துறை அதிகாரிகள் (குறிப்பாக பெண் காவலர்கள்) காயமடைந்து இருக்கிறார்கள்...

அந்த கொடுமையை இன்று காலை தினசரியில் பார்த்தேன்... இன்றைய நம் நாடு எந்த திசையில் போகிறது என்று நினைத்து திகைத்து போயிருக்கிறேன்...