Friday, August 21, 2009

விடுக‌தையா இந்த‌ வாழ்க்கை... விடை த‌ருவார் யாரோ!?






ஐயோ...... இதுக்கெல்லாம் யாராவது பதில் சொல்லுங்களேன்.......

"சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்".... இந்த பாடலை ஏன் இதுவரை யாருமே ரீமிக்ஸ் செய்யவில்லை?

இளைய திலகம் பிரபு நடித்த "சின்னத்தம்பி" சூப்பர் ஹிட்..... கேப்டன் விஜயகாந்த் நடித்த "பெரியண்ணா" மரண அடி..... ஏன்?? "அண்ணா"வை விட "தம்பி" ஒசத்தியா?

முரளி நடித்த எதிர்மறை தலைப்பு கொண்ட படங்கள் "பகல் நிலவு" மற்றும் "இரவு சூரியன்" ரெண்டு படமுமே ஓடவில்லை...... ஏன்??

தகரவாய் தங்கர் பச்சான் இயக்கி நடிக்கும் "வெள்ளையாய் ஒரு பச்சிலை" படம் எப்போது வெளிவரும்?

பாண்டியராஜன் இயக்கி, நடித்த ஆண்பாவம் என்ற படம் ஹிந்தியில் "ஸச்சா ப்யார்" என்ற பெயரில் ஜூஹி சாவ்லாவை நாயகியாக வைத்து தயாரிக்கப்பட்டது.... இந்த படம், வெளிவருமா வராதா?

கமல்ஹாசன் நடிக்கும் "உன்னை போல் ஒருவன்" படமும் வழக்கம் போல், ஆஸ்கர் கதவை தட்டி விட்டு வருமா? கிடைக்காத வெறுப்பில், ஆஸ்கர் அமெரிக்கர்களுக்கானது என்று வழக்கம் போல் படம் ஓட்டுவாரா?

அரசியல் வெடி புஸ்வானம் ஆன நிலையில் கேப்டனின் சினிமா எதிர்காலம்??

கேப்டனின் கடைசி வெளியீடான "எங்கள் ஆசான்" படம் ரிலீசான எல்லா இடங்களிலும் பப்படம் ஆன நிலையில் சென்னையில் ரிலீஸ் ஆகுமா, ரிலீசானால் ஹிட் ஆகுமா?

சிம்புவின் "சிலும்பல்" இதோடு அடங்கிவிடுமா? இல்லை இன்னும் தொடருமா?

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா... நீ தொட்டு கொள்ள சிக்கன் தரட்டா என்ற கவித்துவமான பாடலுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை?

கட்டு கட்டு கீரக்கட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு என்று தொடங்கும் டூயட் பாடல் எந்த கவிஞரால்(??) இயற்ற(??)ப்பட்டது?

Tuesday, August 18, 2009

அதிரடி டைரக்டர்கள் 2010 - ஒரு சிறப்பு பார்வை



2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை வெளிவந்த படங்களில் "நாடோடிகள்" தவிர எந்த படமும் போணியாகாத‌ நிலையில், கோலிவுட் டைரக்டர்கள் ஒன்று கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கிறார்கள்...

செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....

**************

பேசாம நாம பழைய வ்யாவாரத்துக்கே போயிடலாம்னே.... புண்ணாக்க நோண்டிட்டு, புளிய உருட்டிட்டு...... என்னவோ செய்யலாம்..... இங்க, நேத்து வந்த பயலுவ எல்லாம், நம்ம வந்தா மருவாத குடுக்கறதில்ல..... காலு மேல காலு போட்டு இருக்கானுவ.... என்று "பூமநாராயணன்" சீறினார்.....

இன்னிக்கி தான்யா சரியா சொன்னீரு.... என் படத்துல நடிக்கற ஹீரோ, ஹீரோயின் பண்ற அலப்பறை கூட தாங்கலேய்யா என்று "டிங்கர் பிச்சான்" பொருமினார்.... அதுலயும், அந்த விஜயகாந்து படம் "எங்கள் ஆசான்" வந்தது பாருங்க.... அய்யோ...அய்யோ.. ரெண்டு, மூணு ஷோ தான் ஓடுச்சு.... அதுக்கே.. தியேட்டர் ஆப்பரேட்டருங்க 10/20 பேரு கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆயிட்டானுவக...

கரெக்டுங்க.... என் படத்துல பாருங்க.... ஒப்பனிங் சீன்ல ஹீரோ ரயில்ல வந்து எறங்கரார்னு அந்த "பிஜய்" கிட்ட கதை சொல்றேன்.... ஹெலிகாப்டர்ல வந்து எறங்கற மாதிரி சீன் வைய்யுன்னு பெரிய சீன் போடறாரு... "கொட்டாம்பட்டி"க்கு வர்ற ஹீரோக்கு எதுக்குங்க ஹெலிகாப்டர்..... என்று "பீரரசு" நறநறக்கிறார்.
பேசுறது எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு என்னை மட்டுமாவது அனுப்புங்க... இன்னிக்கி ஏ.வி.எம்.ல "தந்திரன்' படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் இருக்கு என்று அவசரப்படுத்துகிறார் டைரக்டர் "பங்கர்"...இவனுங்களும், இவனுங்க இம்சையும் என்றபடி...

நான் இங்க எதுக்கு வந்தேன்னே தெரியல என்றபடி மோட்டுவளையை பார்த்தபடி தாடையை சொரிந்தார் "பவுதம் பேனன்". இந்த மாதிரி ஷாட் வச்சா நல்லா இருக்குமா இல்ல "ப‌ம்பு"வும் "பிரிஷா"வும் வானத்து மேல‌ இருந்து பறந்து வ‌ர்ற‌ மாதிரி ஒரு ஷாட் வ‌ச்சு அச‌த்திடுவோமா என்று தனக்கு தானே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்...

"ஏழாம் வடை" படத்தோட ஷூட்டிங் நிறுத்திட்டு இந்த மீட்டிங் வந்து இருக்கேன்.. அங்க எல்லாரும் எனக்காக வெயிட்டிங்... சொல்றத எதுன்னாலும் சீக்கிரம் சொல்லுங்க என்று கர்ஜித்தார் "கந்தர் கி".
அப்போது "தமிழ் கரடி" ஆவேசமாக சவுண்ட் விட்டுக்கொண்டு உள்ளே வர அந்த ஏரியாவே டெர்ரராகிறது....
யார் கிட்ட, என்கிட்டயேவா..... நான் தமிழன்டா.....தமிழன்..... யூத்து... தெரியும்ல... இன்னும் நான் யூத்து என்று விரலை சொடுக்கியபடி எனக்கு தமிழ் மட்டும் இல்ல.... இங்கிலீஷும் தெரியும்.....
வர்றியா..... ஒரு மேடை போட்டு ABCD சொல்லுவோம்.... யாரு மொதல்ல சொல்லி முடிக்கறாங்கன்னு பாப்போமா..... "பனை மரத்துல வவ்வாலா இந்த கரடி கிட்ட சவாலா"!!! இத பத்து தடவை மவுண்ட் ரோடு நடுவுல நின்னு கத்தி சொல்லுவியா? நான் சொல்லுவேன் என்றெல்லாம் சவுண்ட் விடுவதை பார்த்து அனைவரும் மூச்சு விட மறந்தனர்....
ஐயோ.....இன்னிக்கி செத்தோம் என்று எல்லாரும் கோரசாக மனதிற்குள் கூவினர்..... கரடி எங்கேயோ வெளியூர்ல ஷூட்டிங் போயிடுச்சுன்னு சொன்னதாலதான், இன்னிக்கி இந்த மீட்டிங் வச்சோம்.... ஆனா, கரடி எப்படியோ தப்பிச்சு இங்க வந்துடுச்சே, இன்னிக்கி நம்ம எல்லாரோட கதையும் சங்குதான், அபீட்டுதான் என்று நினைத்தனர்...
என்னையா நடக்குது இந்த நாட்டுல..... ஒரு தமிழனுக்கு உள்ளே வர அனுமதி இல்லையா..... ...... என் அடுத்த படம் வரட்டும்.... ஆல் ஓவர் தி வேல்ட் ஒரே ஒரு ஹீரோதான்.... அது நான்தான்....

கோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட், பிளைவுட்னு எல்லா வுட்டும் என்கிட்டே வந்து கால்ஷீட் கேட்டு நிக்கும்..... என்றெல்லாம் பிதற்றுவதை பார்த்து "பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் எல்லாம் டெர்ரர் ஆகிறார்கள்...

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, தான் ஏற்கனவே எழுதி வைத்த தீர்மானங்களை டைரக்டர்கள் சங்க தலைவர் "பூமநாராயணன்" வாசித்தார்....

***********************

இனிமேல் நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வண்டி கிடையாது..... டெண்ட் கொட்டகைதான்.

விதவிதமான ஜூஸ் கிடையாது..... வெறும் தண்ணீர்தான்.... வேண்டுமானால் சிறிது ஐஸ் மட்டும் போட்டு..

படத்துல மொத்தம் 5 டிரஸ்தான் .....

மத்தியானம் சாப்பாடு வெறும் கம்பங்கூழும், பச்சை மிளகாயும்தான்.... வெங்காயம் வேணும்னா, அவிய்ங்கவிய்ங்க வீட்டுல இருந்துதான் எடுத்து வரணும்...

லன்ச் டயத்துல தூங்கறதுக்கு ஆளுக்கு ஒரு பாய் மட்டுமே தரப்படும். போர்வை வேண்டுமென்றால் அவரவர்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும். அது அவர்கள் இஷ்டம். இதில் நிர்வாகம் தலையிடாது.

வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வருவதற்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்.....

தமிழ் படங்களின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.... இது ரொம்ப முக்கியம்....
நடிப்பவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாதவர்கள், தானே சொந்தமாக படம் தயாரித்து நடிக்கட்டும் என்று இந்த சங்கத்தின் சார்பாக கூறிக்கொள்கிறேன்.....என்று அறிக்கையை வாசித்து முடித்தார்.....

இதை கேட்ட "பீரரசு" "கரடி" போன்ற ஹீரோ டைரக்டர்கள் கொதித்து எழுந்தனர்......

நீங்கள் போடும் சட்டம் எல்லாம், ஹீரோவாக மட்டும் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் பொருந்தும்...... எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு பொருந்தாது என்று ஜெர்க்கினர்....

படைப்பாளி என்ற வார்த்தையை கேட்டதும் நன்றாக தூங்கி கொண்டிருந்த "டிங்கர் பிச்சான்"...சட்டென்று எழுந்து கரடி, பீரரசு, கிந்தர் எல்லாம் படைப்பாளிகள் இல்லை.... அழிப்பாளிகள்.... இந்த படவுலகில் படைப்பாளி என்றால் அது இந்த "டிங்கர் பிச்சான்" மட்டும்தான் என்று ஓவர் அலப்பறை விடுகிறார்....

இதை கேட்ட "பீரரசு" மற்றும் "கரடி" ஆகியோர் சங்கமாவது.... சுங்கமாவது.... கலைங்கடா எல்லாத்தையும் என்றபடி தன் தலையை கலைத்து, சட்டையை கிழித்துக்கொண்டு "டிங்கர் பிச்சான்" நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர்....

நிலைமை மோசமாவதை கண்ட "பூமநாராயணன்" சங்கத்தின் பின் வாசல் வழியாக பாய்ந்து தாவுகிறார்.... "கரடி" மற்றும் "பீரரசு" அவரை அடிக்க கையில் அரை செங்கல் எடுத்து துரத்துகின்றனர்......

மொத்தத்தில் அந்த ஏரியாவே "கலீஜ்" ஆகிறது.... ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?

Monday, August 17, 2009

கப்சா டைம்ஸ் சினிமா செய்திகள் - 01.01.2012


"எந்திரன் பாகம்-II" தான் என் கடைசி படம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

எனது "மருதநாயகம்" படம், மருதநாயகி என்று பெயர் மாற்றம்..... ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க நானே அந்த படத்தை இயக்குகிறேன்..... கலைஞானி கமல்ஹாசன்....

மன்சூர் அலிகான், அரசியலில் காமெடியனானதை தொடர்ந்து தன் அடுத்த படத்தை அறிவித்தார்..... படத்தின் பெயர் - "டம் டம் டமாக்கா...டும் டும் டுமாக்கா, தாம் தூம், அன்றும், இன்றும், என்றும் நான் ஆல் டைம் டகால்டி".....

வைகைப்புயல் வடிவேல் டாஸ்மாக்கையும், இரவு ஆட்டத்தையும் சிறிது குறைத்து கொண்ட பின், லேட்டஸ்டாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.... படத்தின் பெயர் "எமலோகத்தில் ஏழுமலை".

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஹீரோயினாக "திரிஷா"வையும், அசினையும் நடிக்க வைக்குமாறு வடிவேல் டைரக்டரிடம் சொல்லியதாக காத்து வழியாக காதை வந்தடைந்த செய்தி..

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு.... தமிழக அரசு அறிவிப்பு... இதை தொடர்ந்து, ஜெட் லி நடித்த ஆங்கில டப்பிங் படத்திற்கு "மரண அடி மன்னாரு" என்று சுத்தமான தமிழ் பெயர் சூட்டப்பட்டதாக ராமநாராயணன் அறிவித்தார்..

"வெட்டி வீராசாமி-II". எனது அடுத்த படம் என்று விஜய டி.ராஜேந்தர் அறிவித்தார். இந்த படத்தில் அவர் முதன் முதலாக மூன்று வேடம் போடுகிறார் என்றும் தகவல்... மூன்று ஜோடிகள்.... ஆனால், யாரையும் தொடாமல் நடிப்பேன் என்று கூக்குரல் விடுத்தார்....

ராமநாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் தயாரிப்பதாக அறிவித்தார்.. படத்தின் பெயர் "ஆடுடா ராமா", ஹீரோ டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ்.... இந்த படத்தை ஆங்கிலத்தில் "100 MONKEYS" என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்போவதாக‌ ராமநாராயணன் அறிவித்தார்..

"தசாவதாரம்" படத்தில் மேக்கப்புக்கு பயன்படுத்த, பெருமளவில் மைதா மாவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக கமலின் ஆஸ்தான மேக்கப்மேன் "மைக்கேல் வெஸ்மோர்" கைதாகிறார்....அரசின் தீர்ப்பு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருப்பதாக பல்பொருள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பங்காரு பாபு தெரிவித்தார்...

தங்கர் பச்சான், புதிய படத்தை அறிவித்தார்..... கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது... படத்தின் பெயர் "தகரத்தில் ஒரு பித்தளை டப்பா".

டைரக்டர் பாலா, தன் அடுத்த படத்தை கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து படம் பிடிக்க போகிறார்.... விஜய டி.ராஜேந்தர் தான் ஹீரோ, படத்தின் பெயர் "நான் கரடி".

ஆஸ்கர் கனவு நாயகன் கமல்ஹாசன் ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் படம் "உயரமாய் ஒரு குள்ளன்".

நடிகர் பாண்டியராஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை ஏ.வி.எம்.மில் நடைபெற்றது... அதில் அவர் நெகடிவ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் "குட்டையானவன் கெட்டவனா"?.

நடிகர் நாசர் கதாநாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது.... அவரே தயாரிப்பாளர்.... படத்தின் பெயர் "குல்லா போட்ட நவாபு, செல்லாது உன் ஜவாபு"...

கோவை சரளா வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படத்தின் பெயர் "குரங்கு குசலா"... இதில், இவர் நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் நெப்போலியனின் அடுத்த படம் பூஜை..... படத்தின் பெயர் "எட்டு பட்டியும் பட்டா பட்டியும்"....குஷ்பு ஜோடி என்று தெரிகிறது.

வினு சக்கரவர்த்தி அதிரடி வேடத்தில் நடிக்கும் படம் "அட்டை கரி ஆறுமுகம்".

ரிடயர்ட் ஆன முன்னாள் நடிகை ரஞ்சிதா மீண்டும் நடிக்க வந்து, கதாநாயகியாக நடிக்கும் படம் "ஆத்தி இது வாத்து கூட்டம்"..... இதில், டைரக்டர் பாரதிராஜா "டவுசர் பாண்டி"
என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

டைரக்டர் பேரரசு தன் அடுத்த அதிரடி படம் தொடங்கினார்... படத்தின் ஹீரோ ராஜ்கிரண், வில்லன் பேரரசு....படத்தின் பெயர் - "கொண்டி தோப்பு கஜா"....

கேப்டன் விஜயகாந்த் தன் சரிந்த மார்கெட்டை நிமிர்த்த, சொந்த படம் தயாரிக்கிறார்..... படத்தின் பெயர் "பெரிய செட்டியார்".... இது தன் முந்தைய பழைய கிளாஸிக் படமான "சின்ன கவுண்டர்" போல பட்டையை கிளப்பும் என்று தெரிவித்தார்.....

பூஜைக்கு "கேப்டன்" முழு பாட்டில் "டாஸ்மாக்"கை காலி செய்து விட்டு சிவந்த கண்களுடன் வந்திருந்ததால், தள்ளாடியபடியே தன் காரை நோக்கி போனதாக, காககையார், கழுகார், குருவியார், பருந்தார் மற்றும் டாஸ்மாக்கார் தெரிவித்தனர்.

எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு டைரக்ட் செய்து நாயகனாக நடிக்கும் படம் "கும்மிருட்டில் கும்தக்கா"..

நடிகர் பார்த்திபனின் அடுத்த படம் "மக்களோட மங்காத்தா".

சத்யராஜ், தன் மகன் சிபிக்காக தயாரித்து, இயக்கும் படம் "மாண்புமிகு மொக்கசாமி".... இதில் சத்யராஜின் ஜோடியாக நமீதா நடிக்கிறார்.. சிபியின் ஜோடியும்
நமீதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண், உக்கிரமான அதிரடி நாயகன் வேடத்தில் நடிக்கும் படம் "காளி கோவில் கபாலி". இதில் சண்டை காட்சிகள் பிரதானமாக இருக்கும் என்று தெரிகிறது.

காமெடி நடிகர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் சின்னி ஜெயந்த் _ முரட்டு நாயகன், அறியாத பையன், காலேஜ் யூத் என்று மூன்று வேடங்களில் நடிக்கும் புது படம் - "ஜில்பான்சோ, பல்பான்சே, பில்பான்சி"......

இப்போது புதிதாக சேம்பரில் பதிவு செய்யப்பட தமிழ் படங்களின் பெயர்கள்....

அயனாவரத்தில் ஒரு அப்புசாமி
அக்ரகாரத்தில் ஒரு அண்ணாசாமி
மாயவரத்தில் ஒரு மன்னார்சாமி
பரமக்குடி பல்டி நாயகம்
ஜப்பானில் ஜானகிராமன்
அறந்தாங்கியில் அர்த்தநாரி
அமெரிக்காவில் பேரிக்கா
இந்தியாவில் விந்தியா
ஈரானில் பூரான்
கமுதியில் கபோதி
ஏர்வாடியில் ஒரு மார்வாடி
பூட்டானில் ஒரு சேட்டன்
மாயவரத்தில் ஆரவாரம்
சுங்குவாரில் கிழிந்த டங்குவார்
ஆழ்வார்பேட் ஆண்டவர்
மலேசியாவில் மன்னாரு
அதிரடி தொடரும்.....

Saturday, August 15, 2009

பேர‌ கேட்டாலே சும்மா அதிருதுல்ல‌ - (ப‌குதி - 10)






எழுத்தாளர் பாலகுமாரன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தன் நட்பு குறித்தும், ரஜினி குறித்து அவர் நினைப்பதுமான பல விஷயங்களை சொல்ல எழுதியதுதான் "சூரியனோடு சில நாட்கள்" என்ற புத்தகம்.... ரஜினியை பற்றி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் விரும்பி படிக்கக்கூடிய அளவில் இருக்கும் என்பது ஒரு சிறப்பு.... கிடைத்தால் (தேடித்தான் பாருங்களேன்,கிடைக்கும்), படித்துப்பாருங்கள்.

***************

தொடர்ந்து பத்து பகுதிகளாக‌ வந்த இந்த "பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" தொடரை தொடர்ந்து வருகை தந்து படித்து, கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.....

இப்போது இந்த தொடருக்கு "முற்றும்" என்று போட மனது வரவில்லை என்றாலும், வேறு சில பதிவுகளை போட வேண்டும் என்பதால் இது வெறும் தற்காலிக முற்றும்தான்.... ஏனெனில், சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி எழுத ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று...

இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த தொடரில், நான் கூடியவரை, அவரை பற்றி நிறைய பேருக்கு தெரியாத சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக நினைவு... இந்த தொடரின் மூலமாக எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...

இந்த தொடர் மற்றும் ரஜினியையும் வெகுவாக ரசிப்பவர்களும், என் நண்பர்களுமான :

சிம்பிள் சுந்தர் என்கிற சூப்பர் சுந்தர் (சென்னை)
அருண் என்கிற அருணாச்சலம் (பெங்களூரு)
கல்யாண் (பெங்களூரு)
தினகர் (அமெரிக்கா)
ஈ.ரா.(சென்னை)
வினோஜாஸன் (சென்னை)
கிரி (சிங்கப்பூர்)
லாரன்ஸ் (ஷார்ஜா)
அபுதாகீர் (துபாய்)
பஹ்ரைன் பாபா என்கிற ராம் (தற்போது ஷார்ஜா வாசம்)சிவசங்கர் (அபுதாபி வாசம்)
பாட்சா (திருச்சி, தற்போது துபாய்)
நிர்மல் (துபாய்)
வால் பையன் (ஈரோடு அருண்)
தண்டோரா
நட்புடன் ஜமால் (சிங்கப்பூர்)
தர்மா (சிங்கப்பூர்)
செல்லதுரை (துபாய்)
நரசிம்மன் (ஷார்ஜா)
ராமசந்திரன் (ஷார்ஜா)
சாரதி (ஷார்ஜா)
ரஜினி ராம்கி (சென்னை)
ஷாஜஹான் (தற்போது இந்தியா)
நட்டு என்கிற நடராஜன் (இங்கிலாந்து)
ராஜ் நாராயண் (சிங்கப்பூர், தற்போது பெங்களூரு)
ஷங்கர் பாபு (துபாய்)
பாசகி (இந்தியா)
காமேஷ்
கயல்விழி நடனம்
மற்றும் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்....

முக்கிய பின்குறிப்பு :

1) இந்த நண்பர்கள் பட்டியலில் பல பெயர்கள் விடுப்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்....

2) இன்று அகில உலக சினிமா ரசிகர்கள் மற்றும் அனைத்து ரஜினி ரசிகர்களின் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர் "எந்திரன்".
சூப்பர் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" கதைகளை படித்து விட்டு, இதைபோல் "எந்திரன்" இல்லையே என்று டைரக்டர் ஷங்கர் அவர்களையோ, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையோ யாரும் வசைபாட வேண்டாம் என்று முன்கூட்டியே வேண்டுகோள் விடுக்கிறேன்...

ஏனெனில், எழுத்தில் வந்ததை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம்... பல்வேறு மாற்றங்களுடன் தான் 'எந்திரன்" திரைக்கு வர இருக்கிறது....

இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படைப்பாகவும், அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாகவும் "எந்திரன்" படம் உருவாகி வருகிறது....இதை சமீபத்தில் வரும் செய்திகளும் உறுதி செய்கிறது......

எனவே, 2010_ஆம் ஆண்டு தொடக்கத்திலோ அல்லது கோடை விடுமுறையின் போதோ "எந்திரன்" வருவார். அவரை பாருங்கள்....ரசியுங்கள்....பிரம்மிப்படையுங்கள்.

(தற்காலிக முற்றும்....)

Wednesday, August 12, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி - 9)


நீங்கள் ரசித்து வாசித்து வந்த இந்த தகவல்கள் சிலவற்றை, வானொலி மூலமாய் அமீரகத்தில் சில பேர் கேட்டு இருக்க கூடும்.
நானும் நண்பர் லாரன்ஸ் அவர்களும் இணைந்து மற்ற பல நண்பர்களின் (அபுதாகீர் உட்பட) உதவியுடன், அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலியான SHAKTHI FM ரேடியோ ஊடாக, 2006, 2007, 2008 (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஆடியோ லின்க் இதோ..http://www.rajinifans.com/detailview.php?title=960) ஆகிய‌ வருடங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் செய்தோம். கடவுள் அருள் இருப்பின் இந்த வருடமும் அந்த நிகழ்ச்சி நடைபெறும்.....

2007 மற்றும் 2008 வருடங்களில் நாங்கள் துபாயிலிருந்து தொலைபேசி / அலைபேசி வழியாக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தொடர்பு கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சியை பற்றி விளக்கி கூறி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்....

வெகுநேரம் ரஜினியை பற்றியும், ரஜினியின் உயர்ந்த பண்பு, நேர்மை, உழைப்பு, உதவும் குணம் (வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில்) போன்ற விஷயங்களை எல்லாம் பற்றி பேசிய அவர், மேலும் கூறிய ஒரு சுவாரசியமான விஷயம் இதோ :

"நான் சமீபத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி எழுதிய புத்தகம் "பிருந்தாவனம்". அந்த புத்தகத்தின் முன்னுரையில் தமிழகத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை அறிமுகம் செய்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம் என்று எழுதியுள்ளேன் என்று கூறினர்....

********************
ரஜினிகாந்த் அவர்களின் பெரும்பாலான தமிழ் படங்கள் (தற்போதெல்லாம்) தெலுங்கில் உடனுக்குடன் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் பதிப்புடனேயே வெளியிடப்படுகிறது.... ஆனால், முன்பு அப்படி இல்லை.... எப்போதிலிருந்து இப்படி?
மெகா ஹிட் படம் "பாட்சா" வரை தெலுங்கில் ரஜினிக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.... ஆனால், எல்லா படங்களும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்....பாட்சா தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக் உரிமையுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோது, அவர் "பாட்சா" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை...

ஆக‌வே..."பாட்சா" படத்தை எப்போதும் போலவே டப்பிங் செய்து வெளியிட்டார்கள்... பின்னணி பாடகர் மனோ டப்பிங் குரல் கொடுத்தார் (கடைசியாக வெளிவந்த "சிவாஜி தி பாஸ்" வரை மனோ தான் ரஜினிக்கு தெலுங்கில் டப்பிங், கமலுக்கு எஸ்.பி.பி) .... படம் வெளியாகி பட்டையை கிளப்பியது... சிரஞ்சீவி கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருந்தினார்...

அதிலிருந்து ரஜினியின் எல்லா படங்களும் தெலுங்கில் உடனுக்குடனாக வெளியாகும்... சிவாஜி தி பாஸ் அதிகபட்சமாக 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தூள் கிளப்பியதைதான் நாம் அனைவரும் அறிவோமே !! 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தெலுங்கு பதிப்பு, ரூ.27 முதல் ரூ.30 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று செய்தி வந்தது....

சென்னை, ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் ஒரே நேரத்தில் வெளியானது கூட ஒரு சாதனைதான்....

சென்னையில் கேஸினோ திரையரங்கில் தெலுங்கு பதிப்பு வெளியானது....

********************
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த "நான் மகான் அல்ல" என்ற படம் முதலில் "நான் காந்தி அல்ல" என்ற பெயரில் தான் தயாரிக்கப்பட்டது.. சென்சார் போர்டு ஆட்சேபத்தின் பேரில் "நான் மகான் அல்ல" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... இது, ஹிந்தியில் சத்ருகன் சின்ஹா நடித்த "விஸ்வநாத்" என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது தெரியுமா?

********************
மறைந்த முன்னாள் இயக்குனர் ராஜசேகர் அவர்களின் டைரக்ஷனில் வெளிவந்த "தர்மதுரை" முதலில் "காலம் மாறிப்போச்சு" என்ற பெயரில்தான் தயாரிக்கப்பட்டது..... பின்புதான் "தர்மதுரை" என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்தது..

*********************
இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய படம்தான் "ராஜாதி ராஜா"....

இதில், ரஜினியின் இளமையான தோற்றமும், ரஜினியின் உடைகளும், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையும், பாடல்களும் ஒன்றாக கை கோர்த்து படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிந்தது....

இந்த படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்.... "மீனம்மா, மீனம்மா கண்கள் மீனம்மா, "மாமா ஒன் பொண்ண கொடு ஆமா சொல்லி கொடு", "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதிராஜனடா" "மலையாள் கரையோரம் கவி பாடும் குருவி" "என் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசையில்லயா" மற்றும் இசைஞானி இளையராஜா இயற்றி, (இதுவே பலருக்கு நியூஸ்தானே?!).இசையமைத்த ஒரு பாடல் "வா வா மஞ்சள் மலரே.

படம் வெளிவந்தது... திரைவிமர்சனத்தில், வழக்கம் போலவே வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம் ரஜினியை பற்றி வாருவதற்கு ஏதாவது செய்தி படத்தில் உள்ளதா என்று விளக்கெண்ணை ஊற்றி பார்த்தன.... அதிலும் "குமுதம்" படத்தை பார்த்து விட்டு பின்வருமாறு எழுதியது....

வா வா மஞ்சள் மலரே என்ற டூயட் பாடலில் ஒரு வரி வருகிறது.... வாச கருவேப்பிலையே உன் நேசம் வந்து சேர்ந்தம்மா என்று..... டூயட் பாடலில் கருவேப்பிலைக்கு என்ன வேலை??

அதே குமுதம் இன்று அதன் திரை விமர்சனத்தில், இந்த‌ பாட‌ல்க‌ளை எல்லாம் ப‌ற்றி ஒன்றுமே எழுதுவ‌தில்லையே...ஏன்??

நாக்க‌ முக்க‌ நாக்க‌ முக்க‌
க‌ட்டு க‌ட்டு கீர‌க்க‌ட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு
டேய்...கைய‌ வ‌ச்சுக்கிட்டு சும்மா இருடா!!!
குருவியோட‌ பாட்டு, கொளுத்துங்க‌டா வேட்டு, என் வீட்டு செங்க‌ல் நீ, என் சாப்பாட்டுல‌ உப்பு க‌ல்லு நீ....

இந்த பாடல்கள் எல்லாம் என்ன கவித்துவம் நிறைந்த பாடல்களா? நீங்களே சொல்லுங்க மக்களே.......

***************
ஜி.வி.பிலிம்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் டைரக்ஷனில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தளபதி" படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பதை நாம் அனைவரும் அறிவோம்... குறிப்பாக இங்கு நான் சொல்ல வந்த விஷயம், அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது, அட ஆமாம் என்று சொல்லக்கூடிய‌ விஷயம்.. அதாவது :

"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே" என்ற முழு பாடலும் ஸ்லோ மோஷனில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.....

(இன்னும் கொஞ்சமே வரும் ........)

Sunday, August 9, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-8)










கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில், தெலுங்கில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார். இது, ரஜினிக்கு முதல் தெலுங்கு படம்...... பெயர் "அந்துலேனி கதா".
*******************
"BLOODSTONE' என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நிறுவனம் அவருக்கு 1988-ம் ஆண்டின் "சாதனையாளர்" (BEST ACHIEVER AWARD) விருது அளித்தது... அந்த விருதை வாங்கி கொண்டு, ரஜினி அவர்கள் விழா மேடையில் தன்னடக்கத்துடன் சொன்னது..

"IT IS NOT AN ACHIEVEMENT, BUT AN OPPORTUNITY".
*****************

"புன்னகை மன்னன்" படத்தின் 100-வது நாள் விழா, ஆனந்த் தியேட்டர் வளாகத்தில், கே.பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது... அந்த விழாவின், முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார் :

HE IS AN INSTITUTION BY HIMSELF
*********************

சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட "ப்ரியா" படம்தான் தமிழின் முதல் "ஸ்டீரியோபோனிக்" இசை கொண்ட படம் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த "ஸ்டீரியோபோனிக்" இசையை "ப்ரியா" படத்திற்கு அமைக்க பெரும் அளவில் உதவி புரிந்த பின்னணி பாடகர் "ஜேசுதாஸ்" அவர்களுக்கு நன்றி செய்யும் விதமாக, இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்களையே பின்னணி பாட வைத்தார்.
*********************

கதாசிரியர், வசனகர்த்தா போன்ற பலமுகங்களை கொண்டவரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பெண்ணின் திருமண விழாவில் எத்தனையோ நண்பர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், பாலகுமாரன் அவர்கள், ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டதை சிலாகித்து சொன்னதை பாருங்களேன்....

கேள்வி : ரஜினிகாந்த், உங்கள் இல்ல திருமணத்திற்கு வந்திருந்து, உங்கள் செல்ல மகளை வாழ்த்தினாராமே?

பாலகுமாரன் பதில் : ஆமாம்....அது என் பாக்கியம்....எங்கள் மூத்தோர் செய்த புண்ணியம்...என் குழந்தையின் நல்வாழ்க்கைக்கு கிடைத்த நல்ல சகுனம்.... வாழ்நாளின் இறுதிவரை நான் சந்தோஷப்பட்டு, நன்றியோடு நினைத்து கொண்டிருக்கிற விஷயம். திருமண வரவேற்பின் போது, வந்து ஏழு நிமிடங்கள் நின்று கவுரப்படுத்திய அவரின் வருகைக்கு பிறகு மனசெல்லாம் நிறைந்து போயிற்று...

ரஜினி அந்த திருமண வரவேற்பிற்கு வந்த அந்த தருணத்தை எழுத்தாளர் பாலகுமாரன் இவ்வாறு விவரிக்கிறார்..

"குண்டலினி சக்தி எழும்போது ஒரு மனிதருக்கு எத்தனை பரபரப்பு உள்ளத்திலும், உடம்பிலும் ஏற்படுமோ, அப்படியொரு பரபரப்பு திருமண வரவேற்பில் திரு.ரஜினிகாந்தின் வருகையின்போதும் எல்லோருக்கும் ஏற்பட்டது...பாதுகாப்பின் காரணமாக எங்கேயும் அதிகம் போகாத அவர் என் மீது அன்பு வைத்து, என் குழந்தையை நேரடியாக ஆசீர்வதித்தது, நாங்கள் செய்த பாக்கியம்....அவருக்கு எங்கள் வீடு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.....
******************

அமிதாப் பச்சன் "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த போது, ஒருமுறை கலந்து கொள்ள வந்திருந்த போட்டியாளரின் பெயர் "ரஜினிகாந்த்". அவர் பெயரை கேட்டவுடன், அமிதாப் பச்சன், அந்த போட்டியாளரிடம் :

ரஜினிகாந்த் என்றொரு மாபெரும் தென்னிந்திய நடிகர் உள்ளார்...... அவர் என் சிறந்த நண்பர் என்று கூறினார்...... பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பியது என் நினைவுக்கு வருகிறது......
*********************

"சிவாஜி தி பாஸ்" திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்கள் முன்பு வந்த ஆனந்த விகடன் இதழில் படத்தின் வசனகர்த்தா "சுஜாதா" அவர்க கூறியது....

"நான் சில நகை வாங்க வேண்டும் என்று பிரின்ஸ் ஜுவல்லரி சென்றிருந்தேன்..... அங்கு இருந்த சேல்ஸ்மேன் எனக்கு பலவேறுபட்ட நகைகளை எடுத்து காண்பித்தார்.... அதில், நான் சிலவற்றை செலக்ட் செய்தவுடன், என்னிடம் வந்து, சிவாஜி படத்தின் கதை என்ன என்று கூறினால், பில் அமௌன்டில் சில ஆயிரங்கள் குறைப்பதாக சொன்னார்........ என்னால், சிறிதும் நம்ப முடியவில்லை.... சிவாஜி படத்தின் இந்த அளவு தாக்கத்தை....."
**********************

கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "வேலைக்காரன்" என்ற படம் வெளிவந்தது.... இது, அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்த "நமக் ஹலால்" என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

இளையராஜா இசை.... கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் மிக நன்றாக இசைக்கப்பட்டு இருந்தது...

அதில் வரும் ஒரு சூப்பர் ஹிட் டூயட் பாடல் "வா வா வா கண்ணா வா". இது காஷ்மீரில் படமாக்கப்பட்டது..... இந்த பாடலின் இடையில் வரும் வரிகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்..... இது என்ன புதுமை...... காதல் பாடலின் வரிகள் "மத நல்லிணக்கத்தை" சொல்கிறது என்று....

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே
பேச தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே...

இப்படி வந்து கொண்டிருக்கும் பாடலின் இடையே வரும் அந்த அற்புதமான வரிகளை இங்கே பாருங்களேன்....

"தாஜ்மகாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில், மதங்கள் ஒன்று சேரலாம்".....

எப்படி.......சும்மா அதிருதுல்ல..........
(தொடரும்......)

Friday, August 7, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-7)





வேற்று மொழி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த தமிழ் திரைப்படங்கள்.
மோகன்பாபு : கர்ஜனை, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்.
விஷ்ணுவர்தன் : "விடுதலை" மற்றும் "ஸ்ரீ ராகவேந்திரர்" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
அம்பரீஷ் : "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.
சிரஞ்சீவி : "ராணுவ வீரன்", "மாப்பிள்ளை" படங்களில் உடன் நடித்து இருப்பார். மம்மூட்டி : "தளபதி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
மது : "தர்மதுரை" படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து இருப்பார்.
அம்ரீஷ் பூரி : "தளபதி" மற்றும் "பாபா" படங்களில் வில்லனாக நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ஒருவர் ரஜினியின் தம்பியாக "பாட்சா" படத்தில் நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ரவிச்சந்திரன் "நாட்டுக்கு ஒரு நல்லவன்" என்ற படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் நடிகர் கன்னட பிரபாகர் அவர்கள் "தாய் மீது சத்தியம்", "அண்ணாமலை", "முத்து" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஷீலா அவர்கள் ரஜினியுடன் "சந்திரமுகி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
ஜெயபாரதி அவர்கள் ரஜினியுடன் "முத்து" படத்தில் நடித்து இருப்பார்....
மேலும் சில தகவல்கள்.

கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "நிழல் நிஜமாகிறது" தமிழ் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, தமிழில் கமலஹாசன் ஏற்று நடித்த வேடத்தை ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார்.

நான்கு மொழிகளில் எடுக்கப்பட்ட படமான "நாட்டுக்கு ஒரு நல்லவன்" தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசானது. ஆனால், அதன் ஹிந்தி பதிப்பான "ஷாந்தி கிராந்தி" இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

ரஜினி அவர்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடன் தமிழிலிருந்து இருவருக்கு ஹிந்தி படங்களில் பணிபுரிய வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

1. ஜூடோ ரத்னம் - ரஜினி நடித்த "ஜான் ஜானி ஜனார்தன்", "கங்குவா" போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

2.காமெடி நடிகர் செந்தில் ரஜினி நடித்த "பூல் பனே அங்காரே" படத்தில் நடித்து இருப்பார். கரகாட்டக்காரன் படத்தில் செய்த "வாழைப்பழ" காமெடியை இதில் மாற்றி "பான் பீடா" காமெடி செய்து இருப்பார்.

1987-88 வருடத்தில் அமிதாப் பச்சன் தலைமையில் ஒரு குழு ஸ்டார்நைட் நிகழ்ச்சிக்காக "இங்கிலாந்து" சென்றது. அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கேர், கோவிந்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த சமயத்தில்தான், ரஜினியின் ஹேர்ஸ்டைல் மாறியது. சூப்பர் ஸ்டாரின் அந்த புதிய ஹேர்ஸ்டைல் அனில்கபூரின் ஹேர்ஸ்டைலை போலிருந்தது. இந்த புதிய ஹேர்ஸ்டைல்தான் "குருசிஷ்யன்" படத்தில் தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து அடிதடி படங்களிலேயே நடித்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த மிக முக்கியமான படம், மறைந்த முன்னாள் டைரக்டர் ராஜசேகர் டைரக்ஷனில் வெளிவந்த "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படம்தான், ரஜினியின் காமெடி / நகைச்சுவை நடிப்பை முழுதுமாக வெளிகொணர்ந்தது என்றால், அது மிகையாகாது.

இந்த படம் வெளியீட்டின் போது, படத்தின் போஸ்டர்களில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரை மோதலில் தூள் கிளப்பி வந்த ரஜினிகாந்த், இப்போது, காதலிலும் தூள் கிளப்புகிறார்.

இதுவரை கைகலப்பில் தூள் பரத்தி வந்த ரஜினிகாந்த், இப்போது கலகலப்பிலும் தூள் பரத்துகிறார்.

1977-ம் வருடத்தில் 15 படங்களிலும், 1978-ம் வருடத்தில் 20௦ படங்களிலும் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

(இன்னும் வரும்....)