Monday, August 17, 2009

கப்சா டைம்ஸ் சினிமா செய்திகள் - 01.01.2012


"எந்திரன் பாகம்-II" தான் என் கடைசி படம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

எனது "மருதநாயகம்" படம், மருதநாயகி என்று பெயர் மாற்றம்..... ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க நானே அந்த படத்தை இயக்குகிறேன்..... கலைஞானி கமல்ஹாசன்....

மன்சூர் அலிகான், அரசியலில் காமெடியனானதை தொடர்ந்து தன் அடுத்த படத்தை அறிவித்தார்..... படத்தின் பெயர் - "டம் டம் டமாக்கா...டும் டும் டுமாக்கா, தாம் தூம், அன்றும், இன்றும், என்றும் நான் ஆல் டைம் டகால்டி".....

வைகைப்புயல் வடிவேல் டாஸ்மாக்கையும், இரவு ஆட்டத்தையும் சிறிது குறைத்து கொண்ட பின், லேட்டஸ்டாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.... படத்தின் பெயர் "எமலோகத்தில் ஏழுமலை".

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஹீரோயினாக "திரிஷா"வையும், அசினையும் நடிக்க வைக்குமாறு வடிவேல் டைரக்டரிடம் சொல்லியதாக காத்து வழியாக காதை வந்தடைந்த செய்தி..

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு.... தமிழக அரசு அறிவிப்பு... இதை தொடர்ந்து, ஜெட் லி நடித்த ஆங்கில டப்பிங் படத்திற்கு "மரண அடி மன்னாரு" என்று சுத்தமான தமிழ் பெயர் சூட்டப்பட்டதாக ராமநாராயணன் அறிவித்தார்..

"வெட்டி வீராசாமி-II". எனது அடுத்த படம் என்று விஜய டி.ராஜேந்தர் அறிவித்தார். இந்த படத்தில் அவர் முதன் முதலாக மூன்று வேடம் போடுகிறார் என்றும் தகவல்... மூன்று ஜோடிகள்.... ஆனால், யாரையும் தொடாமல் நடிப்பேன் என்று கூக்குரல் விடுத்தார்....

ராமநாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் தயாரிப்பதாக அறிவித்தார்.. படத்தின் பெயர் "ஆடுடா ராமா", ஹீரோ டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ்.... இந்த படத்தை ஆங்கிலத்தில் "100 MONKEYS" என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்போவதாக‌ ராமநாராயணன் அறிவித்தார்..

"தசாவதாரம்" படத்தில் மேக்கப்புக்கு பயன்படுத்த, பெருமளவில் மைதா மாவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக கமலின் ஆஸ்தான மேக்கப்மேன் "மைக்கேல் வெஸ்மோர்" கைதாகிறார்....அரசின் தீர்ப்பு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருப்பதாக பல்பொருள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பங்காரு பாபு தெரிவித்தார்...

தங்கர் பச்சான், புதிய படத்தை அறிவித்தார்..... கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது... படத்தின் பெயர் "தகரத்தில் ஒரு பித்தளை டப்பா".

டைரக்டர் பாலா, தன் அடுத்த படத்தை கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து படம் பிடிக்க போகிறார்.... விஜய டி.ராஜேந்தர் தான் ஹீரோ, படத்தின் பெயர் "நான் கரடி".

ஆஸ்கர் கனவு நாயகன் கமல்ஹாசன் ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் படம் "உயரமாய் ஒரு குள்ளன்".

நடிகர் பாண்டியராஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை ஏ.வி.எம்.மில் நடைபெற்றது... அதில் அவர் நெகடிவ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் "குட்டையானவன் கெட்டவனா"?.

நடிகர் நாசர் கதாநாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது.... அவரே தயாரிப்பாளர்.... படத்தின் பெயர் "குல்லா போட்ட நவாபு, செல்லாது உன் ஜவாபு"...

கோவை சரளா வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படத்தின் பெயர் "குரங்கு குசலா"... இதில், இவர் நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் நெப்போலியனின் அடுத்த படம் பூஜை..... படத்தின் பெயர் "எட்டு பட்டியும் பட்டா பட்டியும்"....குஷ்பு ஜோடி என்று தெரிகிறது.

வினு சக்கரவர்த்தி அதிரடி வேடத்தில் நடிக்கும் படம் "அட்டை கரி ஆறுமுகம்".

ரிடயர்ட் ஆன முன்னாள் நடிகை ரஞ்சிதா மீண்டும் நடிக்க வந்து, கதாநாயகியாக நடிக்கும் படம் "ஆத்தி இது வாத்து கூட்டம்"..... இதில், டைரக்டர் பாரதிராஜா "டவுசர் பாண்டி"
என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

டைரக்டர் பேரரசு தன் அடுத்த அதிரடி படம் தொடங்கினார்... படத்தின் ஹீரோ ராஜ்கிரண், வில்லன் பேரரசு....படத்தின் பெயர் - "கொண்டி தோப்பு கஜா"....

கேப்டன் விஜயகாந்த் தன் சரிந்த மார்கெட்டை நிமிர்த்த, சொந்த படம் தயாரிக்கிறார்..... படத்தின் பெயர் "பெரிய செட்டியார்".... இது தன் முந்தைய பழைய கிளாஸிக் படமான "சின்ன கவுண்டர்" போல பட்டையை கிளப்பும் என்று தெரிவித்தார்.....

பூஜைக்கு "கேப்டன்" முழு பாட்டில் "டாஸ்மாக்"கை காலி செய்து விட்டு சிவந்த கண்களுடன் வந்திருந்ததால், தள்ளாடியபடியே தன் காரை நோக்கி போனதாக, காககையார், கழுகார், குருவியார், பருந்தார் மற்றும் டாஸ்மாக்கார் தெரிவித்தனர்.

எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு டைரக்ட் செய்து நாயகனாக நடிக்கும் படம் "கும்மிருட்டில் கும்தக்கா"..

நடிகர் பார்த்திபனின் அடுத்த படம் "மக்களோட மங்காத்தா".

சத்யராஜ், தன் மகன் சிபிக்காக தயாரித்து, இயக்கும் படம் "மாண்புமிகு மொக்கசாமி".... இதில் சத்யராஜின் ஜோடியாக நமீதா நடிக்கிறார்.. சிபியின் ஜோடியும்
நமீதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண், உக்கிரமான அதிரடி நாயகன் வேடத்தில் நடிக்கும் படம் "காளி கோவில் கபாலி". இதில் சண்டை காட்சிகள் பிரதானமாக இருக்கும் என்று தெரிகிறது.

காமெடி நடிகர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் சின்னி ஜெயந்த் _ முரட்டு நாயகன், அறியாத பையன், காலேஜ் யூத் என்று மூன்று வேடங்களில் நடிக்கும் புது படம் - "ஜில்பான்சோ, பல்பான்சே, பில்பான்சி"......

இப்போது புதிதாக சேம்பரில் பதிவு செய்யப்பட தமிழ் படங்களின் பெயர்கள்....

அயனாவரத்தில் ஒரு அப்புசாமி
அக்ரகாரத்தில் ஒரு அண்ணாசாமி
மாயவரத்தில் ஒரு மன்னார்சாமி
பரமக்குடி பல்டி நாயகம்
ஜப்பானில் ஜானகிராமன்
அறந்தாங்கியில் அர்த்தநாரி
அமெரிக்காவில் பேரிக்கா
இந்தியாவில் விந்தியா
ஈரானில் பூரான்
கமுதியில் கபோதி
ஏர்வாடியில் ஒரு மார்வாடி
பூட்டானில் ஒரு சேட்டன்
மாயவரத்தில் ஆரவாரம்
சுங்குவாரில் கிழிந்த டங்குவார்
ஆழ்வார்பேட் ஆண்டவர்
மலேசியாவில் மன்னாரு
அதிரடி தொடரும்.....

17 comments:

நட்புடன் ஜமால் said...

பின்னங்கால் பிடறில அடிக்க ஓடுறேன்

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
பின்னங்கால் பிடறில அடிக்க ஓடுறேன்//

அய்யோ ஏன் ஜமால் ஜி.... வந்து, பார்த்து விட்டு இப்ப‌டி ஓடினா என்ன‌ அர்த்த‌ம்....

நட்புடன் ஜமால் said...

படிச்சிட்டு தாங்க


எல்லாம் கொல வெறி தாக்குதலா இருக்கே


வீராசாமி பேரே கேட்டாலே ...


வேண்டாம் விட்டுடுங்க - அழுதுடுவேன்

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
படிச்சிட்டு தாங்க


எல்லாம் கொல வெறி தாக்குதலா இருக்கே


வீராசாமி பேரே கேட்டாலே ...


வேண்டாம் விட்டுடுங்க - அழுதுடுவேன்//

ஹா....ஹா....

டெர்ர‌ர் கெள‌ப்ப‌ற‌துக்கு வீராசாமி ம‌ட்டுமா, ஜெ.கெ.ரித்தீஷ், பேரர‌சு, கேப்ட‌ன்‍னு எத்த‌னையோ பேரு இருக்காங்க‌ளே ஜி...

டக்ளஸ்... said...

சூப்பர் கோபி...!
படிச்சுட்டு பயங்கரமா சிரிச்சேன்.
அதுவும் பார்த்திபனுக்கு எஸ்.ஜே.சூர்யாவோடதும் கலக்கல்.

சித்து said...

அப்பா எவ்வளவு யோசிச்சிருக்கீங்க, ரொம்ப நல்லா இருக்கு. வெறும் சூப்பர் ஸ்டார் பத்தி மட்டும் எழுதாம இப்படி வேற ஏதாவது எழுதினால் நல்லா தான் இருக்கு ஜீ.

Abu said...

Thala,

Ovovoru actor kum titles pottu kalakiteenga . Vayiru valikuthu ..control panna mudiyala sirippa..

Engeyo poiteenga....Intha titles ellam nan ippave Film Chamber la register panna poren. Ippadium title pottu nala padangal vara vaippu iruku. Yaar kanda....

Regards
Abu

R.Gopi said...

//டக்ளஸ்... said...
சூப்பர் கோபி...!
படிச்சுட்டு பயங்கரமா சிரிச்சேன்.
அதுவும் பார்த்திபனுக்கு எஸ்.ஜே.சூர்யாவோடதும் கலக்கல்.//

வாங்க‌ ட‌க்ள‌ஸ்... ரொம்ப‌ நாளைக்கு அப்புற‌ம் வந்து இருக்கீங்க‌... வாழ்த்துக்கு ந‌ன்றி த‌ல‌.... அப்ப‌டியே எட‌க்கு ம‌ட‌க்கு ப்ளாக் போயி, ஒரு விசிட் வுடுங்க‌....

R.Gopi said...

// சித்து said...
அப்பா எவ்வளவு யோசிச்சிருக்கீங்க, ரொம்ப நல்லா இருக்கு. வெறும் சூப்பர் ஸ்டார் பத்தி மட்டும் எழுதாம இப்படி வேற ஏதாவது எழுதினால் நல்லா தான் இருக்கு ஜீ.//

வ‌ண‌க்க‌ம் சித்து.... பின்னே, சும்மா வந்துடுவாங்க‌ளா த‌லைவா ந‌ம்ம‌ இட‌த்துக்கு.... இந்த‌ மாதிரி எல்லாம் எழுதினா தான் வ‌ருவாங்க‌... சூப்பர் ஸ்டார் ப‌த்தி எழுத‌ற‌துக்கு நான் சேர்த்து வ‌ச்ச‌ டீடெயில்ஸ் எல்லாம் எவ்ளோ வ‌ருஷ‌ உழைப்பு தெரியுமா த‌ல‌....

என்னோட‌ ம‌த்த‌ ஆர்டிகிள்ஸ் ப‌டிக்க‌ற‌துக்கு இங்கேயும் போங்க‌ ஜி.... (www.edakumadaku.blogspot.com)

R.Gopi said...

// Abu said...
Thala,

Ovovoru actor kum titles pottu kalakiteenga . Vayiru valikuthu .. control panna mudiyala sirippa..

Engeyo poiteenga....Intha titles ellam nan ippave Film Chamber la register panna poren. Ippadium title pottu nala padangal vara vaippu iruku. Yaar kanda....

Regards
Abu//

Thanks for your visit and appreciation comment Abu....

I am happy that you have enjoyed reading this....

Do visit regularly and enjoy reading all my articles....

தங்கராசு நாகேந்திரன் said...

யப்பா தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

R.Gopi said...

//தங்கராசு நாகேந்திரன் said...
யப்பா தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது//

வாங்க‌ த‌லைவா... தங்க‌ள் முத‌ல் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி...

ரொம்ப‌ சந்தோஷ‌ம்... நீங்க‌ வாய் விட்டு சிரிச்ச‌துக்கு....

Mrs.Menagasathia said...

சூப்பர் கோபி,வாய்விட்டு ரொம்பநேரம் சிரித்தேன்.

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
சூப்பர் கோபி,வாய்விட்டு ரொம்பநேரம் சிரித்தேன்.//

அட‌டே...வாங்க‌ வாங்க‌ மேன‌காச‌த்யா...

த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப‌ ந‌ன்றிங்க‌....

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்லுவாங்க‌... நான் என்ன‌ சொல்றேன்னா, வாய் விட்டு சிரிச்சா, நோயே வராது...

ந‌ன்றி மேன‌காச‌த்யா....

kggouthaman said...

// இப்போது புதிதாக சேம்பரில் பதிவு செய்யப்பட தமிழ் படங்களின் பெயர்கள்....//

பதினாறையும் படித்து, சிரித்ததில், என் 32 பற்களில் பதினாறு பற்கள் சுளுக்கிக் கொண்டுவிட்டன!
நன்று, கோபி நன்று!

R.Gopi said...

//kggouthaman said...
// இப்போது புதிதாக சேம்பரில் பதிவு செய்யப்பட தமிழ் படங்களின் பெயர்கள்....//

பதினாறையும் படித்து, சிரித்ததில், என் 32 பற்களில் பதினாறு பற்கள் சுளுக்கிக் கொண்டுவிட்டன!
நன்று, கோபி நன்று!//

கவுதமன் சார்.... வரவேண்டும்... தன்யனானேன்.... தங்களின் தொடர்வரவும், பாராட்டும் எனக்கு பெரிய உற்சாசம் தருகிறது...

தொடர்ந்து வருகையும், ஆதரவும் தாருங்கள்....

நன்றி சார்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி..

vanniinfo
mohamedFeros
tamizhpoo
chithu
goodmorningindians
idugaiman
bhavaan
mvetha