Friday, August 28, 2009

சங்கி மங்கி ‍- அதிரடி டெர்ரர் கூட்டணி (27.08.09)


எலே சங்கி... பார்த்து எம்புட்டு நாளாச்சுடா ராசா... சொகமா கீறியா..??
வாலே மங்கி... நானும் வெரசா வந்து ஒன்னிய பாக்கணும், பாக்கணும்னு நெனச்சிகினு இருந்தேன்... இன்னிக்கிதான் நேரம் கெடச்சு...
சரி...சரி...ஊருக்குள்ள இன்னாடா மேட்டரு??

அத்த ஏண்டா கேக்கற.... நெறைய மேட்டரு இருக்குடா... சொல்றேன் கேட்டுக்கோ..

சேரனோட‌ "பொக்கிஷம்"ன்ற காலி டப்பா படம் வந்துச்சே... அது ரிலீஸான அல்லா எடத்துலயும் டான்ஸ் ஆடிடிச்சு..

ஆனா, அந்த படத்த தூக்கி நிறுத்தறதுக்காக சேரன், பத்மப்ரியா ரெண்டு பேரும் படம் ஓடற (???) பத்து ஊருக்கு போயி, சைட்ல குச்சி எல்லாம் நட்டு அந்த பொக்கிஷத்த ...
போடாங்க ... ஏண்டா என்னிய‌ வெறியேத்தற‌... வேற மேட்டரு எதுனாச்சும் இருந்தா சொல்லுடா..

சரிடா... டென்சனாவாத... இத்த கேளு...ஷோபனான்னு ஒரு பொண்ணு ஆக்ட் குடுத்துகினு இருந்துச்சே.. தெரியுமா?

தெரியும்டா... தளபதி படத்துல தலைவர் கூட ஆக்ட் குடுத்துச்சி...அதுக்கு இன்னா?

அது, சினிமால இருந்து போய், நாட்டிய பள்ளி தொடங்கிடிச்சி.. ஷோபனாவோட "மாயா ராவண்" அப்படின்ற‌ ஒரு ப்ரோக்ராம் டிவிடி வெளியிட்டாரு நம்ம ஒலக நாயகன் கமல்தாசன்.. அப்போ அவரு சொன்னத அப்படியே சொல்றேன்... அது இன்னான்னு புரிஞ்சா நீ புத்திசாலி, புரியலேன்னா, நீ அதிர்ஷ்டசாலி....

"நான் ராவணனின் ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். தமிழக கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆன்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திலிருந்தே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால்தான் உண்டு.

கலையும் கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் போல. இரண்டும் கலக்காது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா நல்ல சமையல்காரர். அவர் ராவணாவை படைத்தது போல நரகாசுரனையும் தனது நாட்டியத்திற்குள் கொண்டு வர வேண்டும். இங்கு செல்விகள் நாட்டியம் ஆடினார்கள். அதை பார்த்ததும் எனக்கு போன ஜென்மத்தில் இருந்தது போல தோன்றியது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதை இல்லாதவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும், பணிவும் என்னிடம் இருக்கிறது. வைரத்தை தோண்டி எடுப்பதை போல திறமையை தோண்டி எடுக்க வேண்டும். ஷோபனா ஒரு வைரம்".

இன்னாடா எதுவும் பிரியிதா??

டேய்... வேணாம்டா... என்னிய எவ்ளோ அடி வேணும்னாலும் அடிச்சிக்கோ... ஆனா.. சத்தியமா, இந்த மேரில்லாம் ரவுசு பண்ணாத.... ஏற்கனவே மண்டை காயுதுடா...

ஏண்டா.. நம்ம டைரடக்கரு மிஷ்கின், ஒலக நாயகன் கமல்தாசன வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தாரே... இன்னாடா ஆச்சு...

அதுவா...அல்லாரும், அவரு மர்மயோகி படத்த எடுக்க போறாருன்னு பேசிகினாங்கோ.. ஆனா, மேட்டர் இன்னான்னா, அந்த டகால்டிய நீயே பாரு :

"ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின்.
இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா?

முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம்."
டேய் மங்கி.... போதும்டா, இந்த மூணு நூஸ கேட்டே, நான் நொந்து போன நூடுல்ஸ்மாதிரி ஆயிட்டேன்... ஆள விடுடா சாமி... நான் எஸ்கேப் ஆயிடறேன்....

9 comments:

Sundari said...

//நம்ம ஒலக நாயகன் கமல்தாசன்.. அப்போ அவரு சொன்னத அப்படியே சொல்றேன்... அது இன்னான்னு புரிஞ்சா நீ புத்திசாலி, புரியலேன்னா, நீ அதிர்ஷ்டசாலி.//

அவர் என்னா சொல்ல வர்ரார்னா.....sorry அது எனக்கும் புரியல..:(

R.Gopi said...

//Sundari said...
//நம்ம ஒலக நாயகன் கமல்தாசன்.. அப்போ அவரு சொன்னத அப்படியே சொல்றேன்... அது இன்னான்னு புரிஞ்சா நீ புத்திசாலி, புரியலேன்னா, நீ அதிர்ஷ்டசாலி.//

அவர் என்னா சொல்ல வர்ரார்னா.....sorry அது எனக்கும் புரியல..:(//

வாங்க‌ சுந்த‌ரி... அவ‌ர் சொல்ல‌ வ‌ர்ற‌த‌ புரிஞ்சுக்க‌ற‌ அள‌வுக்கு நான்கூட‌ அறிவாளி இல்லை...

டக்ளஸ்... said...

டக்ளஸூ..இங்க இருந்து ஓடிப்போயிரு..!
இது ஏதோ உள்குத்து பதிவு மாதிரி தெரியுது.
ஆனாலும் ரொம்ப நக்கலய்யா உமக்கு.
:)

R.Gopi said...

//டக்ளஸ்... said...
டக்ளஸூ..இங்க இருந்து ஓடிப்போயிரு..!
இது ஏதோ உள்குத்து பதிவு மாதிரி தெரியுது.
ஆனாலும் ரொம்ப நக்கலய்யா உமக்கு.
:)//


டக்ளஸ் அண்ணே... நீங்களே ஓடிப்போயிட்டீங்கன்னா, மத்தவங்க எப்படி வருவாங்க...

உள்குத்து இல்லாத வலைப்பதிவு எங்க இருக்குண்ணே??

cdhurai said...

கமல் என்ன சொல்ல வராருன்னு அவங்க குறிப்பா தமிழ் நடிகைகளுக்கு தெரியும்'" நான் ராவணன்..நீ சீதையா என்னோடு வர உனக்கு விருப்பமா என்று ":

மற்ற உள் குட்டு எதுன்னா இருந்தா சொல்லுங்க கோபி!

செல்லத்துரை..

cdhurai said...

கமல் என்ன சொல்ல வராருன்னு அவங்க குறிப்பா தமிழ் நடிகைகளுக்கு தெரியும்'" நான் ராவணன்..நீ சீதையா என்னோடு வர உனக்கு விருப்பமா என்று ":

மற்ற உள் குட்டு எதுன்னா இருந்தா சொல்லுங்க கோபி!

செல்லத்துரை..

R.Gopi said...

//cdhurai said...
கமல் என்ன சொல்ல வராருன்னு அவங்க குறிப்பா தமிழ் நடிகைகளுக்கு தெரியும்'" நான் ராவணன்..நீ சீதையா என்னோடு வர உனக்கு விருப்பமா என்று ":

மற்ற உள் குட்டு எதுன்னா இருந்தா சொல்லுங்க கோபி!

செல்லத்துரை..//

வாங்க‌ செல்ல‌துரை... இதுல‌ இப்ப‌டி ஒரு உள்குத்து இருக்குன்னு ஒங்க‌ள‌ மாதிரி வெவ‌ர‌மான‌ ஆளுங்க‌ வந்து சொன்னாதான் தெரியுது... இதுதானா சேதி??!!

கிரி said...

No comments :-)

R.Gopi said...

//கிரி said...
No comments :-)//

Thanks GIRI...