Sunday, August 23, 2009

சங்கி-மங்கி - அதிர‌டி டெர்ர‌ர் கூட்ட‌ணி
ஏலே சங்கி...... ஊருக்குள்ள இன்னாடா மேட்டரு......

எலே எடுபட்ட பயலே மங்கி..... ஊரு இன்னாடா ஊரு.... ஒலக விஷயமே சொல்றேண்டா... கேளுடா.... மக்கா .......துபாய் மேட்டரு...கந்தசாமி, உன்னை போல் ஒருவன் மேட்டரு, சினேகா மேட்டரு, "தல" சிலை தொறந்த மேட்டரு, ஜெஸ்வந்த் சிங் பி.ஜே.பி.கல்தா மேட்டரு.... அல்லாத்தையும் கேளு....

துபாயில இம்புட்டு நாளு அவிய்ங்க ஊரு துட்டு 6,000௦௦௦ இருந்துச்சுன்னா, அல்லாரும் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொன்னாய்ங்க..... நேத்து ராவிக்கு திடுதிடுப்னு சம்பளம் 10,000௦ இருந்தாதான் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொல்லிட்டாய்ங்க... இவ்ளோ நாளு அங்க புள்ள, குட்டிகளோட இருந்தவிய்ங்க அல்லாரையும் அவுக வூட்டுக்காரைய்ங்கள இங்கன அனுப்பிட்டாகளாம்....

அட....இது இன்னாபா அக்குறும்பா இருக்குது......

அட...இது இன்னாபா... இத்தவிட அக்குறும்பு எல்லாம் நடக்குது நாட்டுல.... அத்தையும் சொல்றேன்..கேட்டுக்கோ...

நம்ம பீமன் இல்ல... அதாம்பா விக்ரமு... அவரு நடிக்கற "கந்தசாமி"ன்ற படம் ஒலகம் முயுக்க‌ 900 தியேட்டர்ல ரிலீஸ் பண்றாராம் "தாணு" அண்ணாத்த.... இதுனால நம்ம ஒலக நாயகன் படம் கூட ரிலீஸ் பண்ண முடியலியாம்...

டேய்...இன்னாடா இப்படி கூவுற .... இப்போ ஒலக நாயகனோட டாவு டர் ஆயிட்சா??? இவருக்கே இப்டின்னா, மிச்சவங்க‌ கதி எல்லாம் இன்னாடா ஆவும்...?

நாட்டுல பெரிய ஆளுங்க நெலமை ரெம்ப மோசம்டா... இதுல தப்பிச்சது நீயும், நானும்தான்...

அட.... இன்னாடா இப்டி சொல்ற?

பின்ன இன்னாடா... சினேகா பின்னாடி லோலோன்னு சுத்துனானே ஒரு கபோதி, அவன் பெரிய தொழிலதிபராம்.. புண்ணாக்கு விக்கறானா இன்னான்னு தெர்ல.. அவிய்ங்களுக்கு ரெம்ப செலவு பண்ணி கீறானாம்... குடுத்தப்போ எல்லாம் துட்ட வாங்கிகினு இப்போ டாணாகாரனாண்ட சொல்டாங்கோன்னு கூவறானாம்...

"ரெண்டு பெருசுங்க" சிலை தொறந்துச்சே... அந்த நூஸு ஏதும் கீதாபா?

சிலைய தொறந்தப்புறம், சிலைக்கு பக்கத்துல நாலஞ்சு பேர பாராக்கு போட்டு சிலைய கண்டுக்கங்க‌டான்னு சொன்னா, அவுனுங்க பராக்கு பாத்துகினு அங்கிட்டும், இங்கிட்டும் சுத்திகினு கீறாய்ங்களாம்... சிலை திறப்பு ஓகே.. இங்க கொஞ்சம் தண்ணியும் தொறந்து வுடறான்னா, மாட்டேன்றான்... அத்த பத்தி ஒண்ணுமே கேக்காம நம்ம "தல" ரிடன் வுட்டாரே....அத்த‌ ப‌த்தி....ஏதாவ‌து.....

டேய்... சத்தம் போட்டு பேசாதடா... இதெல்லாம் "நுண்ணரசியல்".. ஒனக்கும், எனக்கும் ஒண்ணுமே தெரியாது... மேட்டரு அவிய்ங்க காதுக்கு போயிட்சுன்னா, நம்ம பொயப்பு நாறிடும்... ந‌ம்ம டங்குவார அறுத்துடுவானுங்க..க‌ம்முனு கெடடா‌ க‌யிதே...

ஜஸ்வந்த் அண்ணாத்தக்கி பி.ஜே.பி.ல இருந்து கல்தா குடுத்துட்டாய்ங்களாமே... இன்னா மேட்டரு... அத்த‌ ப‌த்தி சொல்லுபா...

அது ஒன்ணும் இல்லடா...அவரு ஏதோ சுயசரிதை எய்தறேன்னு சொல்லி, வேலில போன ஓணான எடுத்து, பைஜாமா உள்ள வுட்டுகினாருப்பா... இப்போ, ஓணான் பைஜாமால படா டேமேஜ் பண்ணிச்சு... க‌த‌ர்றாரு... இன்னாத்த‌ சொல்ற‌து.. எல்லாம் கெர‌க‌ம்டா.....

சர்தான்பா... போதும்... போதும்... இத்தோட நிறுத்திக்க... இத்த கேட்டாவே "தல" சுத்துது... அட சுத்தறது என் தலப்பா... மிச்ச மீதி இருந்தா அப்பாலிக்கா சொல்லு... சுருக்கா போயி, அங்க கீற கபாலிய கூட்டிகினு நேர போயி ஒரு ஃபுல்"டாஸ்மாக்" வுட்டாதான் சரிப்படும்....அப்போ வர்ர்ட்டா...

11 comments:

நட்புடன் ஜமால் said...

நெம்ப அரசியலாக்கீது

நான் அப்பீட்டு ...

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
நெம்ப அரசியலாக்கீது

நான் அப்பீட்டு ...//

Thanksuppaa....

தண்டோரா ...... said...

ஜோக்கிரி எப்ப நைனா டாஸ்மாக் கபாலி ஆனாரு..படா ஷோக்கா கீது..

R.Gopi said...

// தண்டோரா ...... said...
ஜோக்கிரி எப்ப நைனா டாஸ்மாக் கபாலி ஆனாரு..படா ஷோக்கா கீது..//

100 போஸ்டிங் எழுதுனதுக்கு வாழ்த்துக்கள் "தல"...

நைனா டாஸ்மாக் கபாலியா மாறி ரெம்ப நாள் ஆச்சு..

ஈ ரா said...

கலக்குறீங்க,

கொஞ்சமா தலைப்பு செய்தி மாதிரி காமிச்சதுலையே பின்னி எடுத்துட்டீங்க ... இன்னும் நிறைய நியூசை டச் பண்ணா சோக்கா இருக்கும்..

R.Gopi said...

//ஈ ரா said...
கலக்குறீங்க,

கொஞ்சமா தலைப்பு செய்தி மாதிரி காமிச்சதுலையே பின்னி எடுத்துட்டீங்க ... இன்னும் நிறைய நியூசை டச் பண்ணா சோக்கா இருக்கும்..//

வாங்க ஈ.ரா.

இதெல்லாம் சும்மா அப்பப்போ எழுதறது... நல்ல விஷயங்களுக்காக‌ யோசிக்கும் இடைவெளியில் எழுதினது... கூடவே, நாக்க முக்க, நாக்க மு.க.ன்னு ஒண்ணு எழுது வச்சு இருக்கேன்... இதெல்லாம் தமாசு....

R.Gopi said...

தமிழிஸில் இந்த பதிவிற்கு வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி..

chithu
ktmjamal
ashok92
ganpath
chuttiyaar
paarvai
balak
vimalind

ஷைலஜா said...

விகடன்ல கவிதை பார்த்தேன் கோபி நல்லாருக்கு

Mrs.Menagasathia said...

அப்பாடா இந்த தமிழை படித்து முடிக்கிறதுக்குள்ள சிரிப்புத்தாங்கலை.நல்லாயிருக்கு கோபி!!
எப்படிலாம் யோசிக்கிறாங்க..

R.Gopi said...

//ஷைலஜா said...
விகடன்ல கவிதை பார்த்தேன் கோபி நல்லாருக்கு.//

வாங்க‌ ஷைல‌ஜா மேட‌ம்... யூ.எஸ்.ல‌ தான் இருக்கீங்க‌ளா?? இல்ல‌, ரிட‌ர்ன் வந்தாச்சா? த‌ங்க‌ள் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி...

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
அப்பாடா இந்த தமிழை படித்து முடிக்கிறதுக்குள்ள சிரிப்புத்தாங்கலை.நல்லாயிருக்கு கோபி!! எப்படிலாம் யோசிக்கிறாங்க..//

வாங்க‌ மேன‌கா ச‌த்யா... வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி... நீங்க‌ள் ம‌ன‌சு விட்டு சிரித்த‌த‌ற்கு என் ந‌ன்றி... இது ம‌ட்டுமா!!? இன்னும் எவ்ளோ இருக்கு... வ‌ரும்...