Friday, August 21, 2009

விடுக‌தையா இந்த‌ வாழ்க்கை... விடை த‌ருவார் யாரோ!?


ஐயோ...... இதுக்கெல்லாம் யாராவது பதில் சொல்லுங்களேன்.......

"சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்".... இந்த பாடலை ஏன் இதுவரை யாருமே ரீமிக்ஸ் செய்யவில்லை?

இளைய திலகம் பிரபு நடித்த "சின்னத்தம்பி" சூப்பர் ஹிட்..... கேப்டன் விஜயகாந்த் நடித்த "பெரியண்ணா" மரண அடி..... ஏன்?? "அண்ணா"வை விட "தம்பி" ஒசத்தியா?

முரளி நடித்த எதிர்மறை தலைப்பு கொண்ட படங்கள் "பகல் நிலவு" மற்றும் "இரவு சூரியன்" ரெண்டு படமுமே ஓடவில்லை...... ஏன்??

தகரவாய் தங்கர் பச்சான் இயக்கி நடிக்கும் "வெள்ளையாய் ஒரு பச்சிலை" படம் எப்போது வெளிவரும்?

பாண்டியராஜன் இயக்கி, நடித்த ஆண்பாவம் என்ற படம் ஹிந்தியில் "ஸச்சா ப்யார்" என்ற பெயரில் ஜூஹி சாவ்லாவை நாயகியாக வைத்து தயாரிக்கப்பட்டது.... இந்த படம், வெளிவருமா வராதா?

கமல்ஹாசன் நடிக்கும் "உன்னை போல் ஒருவன்" படமும் வழக்கம் போல், ஆஸ்கர் கதவை தட்டி விட்டு வருமா? கிடைக்காத வெறுப்பில், ஆஸ்கர் அமெரிக்கர்களுக்கானது என்று வழக்கம் போல் படம் ஓட்டுவாரா?

அரசியல் வெடி புஸ்வானம் ஆன நிலையில் கேப்டனின் சினிமா எதிர்காலம்??

கேப்டனின் கடைசி வெளியீடான "எங்கள் ஆசான்" படம் ரிலீசான எல்லா இடங்களிலும் பப்படம் ஆன நிலையில் சென்னையில் ரிலீஸ் ஆகுமா, ரிலீசானால் ஹிட் ஆகுமா?

சிம்புவின் "சிலும்பல்" இதோடு அடங்கிவிடுமா? இல்லை இன்னும் தொடருமா?

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா... நீ தொட்டு கொள்ள சிக்கன் தரட்டா என்ற கவித்துவமான பாடலுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை?

கட்டு கட்டு கீரக்கட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு என்று தொடங்கும் டூயட் பாடல் எந்த கவிஞரால்(??) இயற்ற(??)ப்பட்டது?

9 comments:

Anonymous said...

yappa lollu thaangalada saami...

nalla irukunganna.. :)

R.Gopi said...

//Sachanaa said...
yappa lollu thaangalada saami...

nalla irukunganna.. :)//

Oh thanks... for your maiden visit and comments Sachanaa...

kggouthaman said...

கோபி! மேலும் ஒரு நையாண்டி தர்பாரா?
கலக்குங்க, கலக்குங்க; கலக்கிகிட்டே இருங்க!

R.Gopi said...

//kggouthaman said...
கோபி! மேலும் ஒரு நையாண்டி தர்பாரா?
கலக்குங்க, கலக்குங்க; கலக்கிகிட்டே இருங்க!//\

வாங்க‌ க‌வுத‌ம‌ன் சார்... சும்மா, போர‌டிச்ச‌ப்போ எழுதினேன்.. வாழ்த்துக்கு ந‌ன்றி சார்.

Eswari said...

ஏன் என்னாச்சு உங்களுக்கு?

டக்ளஸ்... said...

தெரியலயேப்பா...!
(டொய்ன்டடொய்ன்ட டொய்ன்டடொய்...)

R.Gopi said...

//Eswari said...
ஏன் என்னாச்சு உங்களுக்கு?//

அய்யோ... என‌க்கு ஒண்ணுமே ஆக‌லியே....

//டக்ளஸ்... said...
தெரியலயேப்பா...!
(டொய்ன்டடொய்ன்ட டொய்ன்டடொய்...)//

ஹா...ஹா....ஹா... ந‌ல்ல‌துங்கோ....

கலகலப்ரியா said...

கோபி.. கொள்ளு நிறைய சாப்படறீங்க போல.. ம்ம்.. லொள்ளு வர வர ஜாஸ்தி ஆறது..! ரூம் போட்டு யோசிப்பிங்களோ.. ரொம்ப நல்லா இருக்கு.. !

ஆனாலும் என்னோட அபிமான எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர்.. தங்கர் பச்சன் தலை உருளுவதைக் கண்டு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. ஆனாலும் லொள்ளுக்கு என்ன வேலி.. நானும் கன்னாபின்னான்னு உங்க அபிமான நடிகைகளை எல்லாம் நக்கலடிப்பேன்.. ஹிஹி.. அதனால சரியா போச்..!

R.Gopi said...

//கலகலப்ரியா said...
கோபி.. கொள்ளு நிறைய சாப்படறீங்க போல.. ம்ம்.. லொள்ளு வர வர ஜாஸ்தி ஆறது..! ரூம் போட்டு யோசிப்பிங்களோ.. ரொம்ப நல்லா இருக்கு.. !//

வாங்க‌ ல‌க‌ல‌க‌ ப்ரியா... இதெல்லாம், ஜஸ்ட் லைக் த‌ட் எழுத‌ற‌து... சீரிய‌ஸ் மேட்ட‌ர் எழுதும்போது தான் கொஞ்சம் யோசிக்க‌ணும்...

//ஆனாலும் என்னோட அபிமான எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர்.. தங்கர் பச்சன் தலை உருளுவதைக் கண்டு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. ஆனாலும் லொள்ளுக்கு என்ன வேலி.. நானும் கன்னாபின்னான்னு உங்க அபிமான நடிகைகளை எல்லாம் நக்கலடிப்பேன்.. ஹிஹி.. அதனால சரியா போச்..!//

உருட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு... தங்கர் என்ன... டிங்கர் என்ன.. எல்லாரையும் உருட்டிட வேண்டியதுதான்... ஒரு சின்ன கரெக்ஷன்... எனக்கு அபிமான நடிகையெல்லாம் கிடையாது... ஓகேவா??