Monday, February 16, 2009

ஒற்றை கண் ஓஜா


விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து ஜாக் தூக்கி எறியப்பட்டான். எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினானோ தெரியவில்லை.

திடீரென கண்விழித்து பார்க்க முயற்சி செய்த போது, கண்ணின் இமைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடியதில், மிகுந்த சிரமத்திற்கிடையில் கண் விழித்த போது, தான் ஒரு அடர்ந்த காட்டில் விழுந்திருப்பது தெளிவாகியது.
இரண்டு நாட்கள் முன் நடந்தவைகளை ஒருமுறை சற்றே ரீவைண்ட் செய்து பார்த்த போது, தான் வந்து கொண்டிருந்த விமானம், விபத்துக்குள்ளானது நினைவுக்கு வந்தது.
தன்னுடன் பயணம் செய்த மற்ற 300 பேரின் கதி என்ன என்று கவலைப்பட்டான். நான் எப்படி பிழைத்தேன் என்றே தெரியவில்லையே??
மிகுந்த களைப்புடன், தடுமாறி எழுந்து, தன்னை சுற்றி நோக்கினான். எங்கும் மையிருட்டு. அந்த கும்மிருட்டில், சிறிது நேரம் பார்வையை செலுத்தியதில், அந்த இருட்டு கண்ணுக்கு பழக்கப்பட்டு, சற்று தூரத்தில், யாரோ விழுந்து கிடந்தது தெரிந்தது. அந்த உருவம் ஈனஸ்வரத்தில் முனகுவதும் கேட்டது. மெதுவாக முன்னேறி, அந்த உருவத்தை அடைந்தான்.
அங்கே, தன்னுடன் பயணம் செய்த ஒரு பெண், அடிபட்டு, வலியில் முனகிக்கொண்டிருந்தாள். மெதுவே அவளை எழுப்பி, அருகில் சிதறி கிடந்த ஒரு தண்ணீர் பாட்டிலில் இருந்து சிறிது தண்ணீர் அவள் வாயில் புகட்டினான். அவள் சிரமமாக கண்விழித்து அவனை பார்த்து, வீலென அலறினாள், மயங்கி சரிந்தாள்.
மயங்கியவளை, மெதுவாக எழுப்பி, நடந்தவைகளை நினைவுபடுத்தி, தன்னுடன் அழைத்து சென்றான். எங்கெங்கு காணினும் இருளடா!!! வெளிச்சத்தை தேடி இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது ............
திடீரென, ஒரு உருவம் அவர்கள்முன் குதித்தது. அப்போது, இருவரும் திகிலடைந்து அலறிய சத்தம், அந்த அடர்ந்த காடெங்கும் எதிரொலித்தது.

மொசமொசவென உடல் முழுதும் முடியால் மூடிய ஒரு சிறிய உருவம். கன்னங்கரேலென இருந்தது. கழுத்து என்று ஒன்று தனியாக இல்லை. அங்கும் இங்கும் தாவி, அவர்கள் இருவரின் மேலும் அமர முற்பட்டது.
இருவரும் சாமர்த்தியமாக விலகி, விலகி அதற்கு ஆட்டம் காட்டினர். அவர்களின் ஒரே குறிக்கோள் அதை களைப்படைய செய்வதுதான். மேலும் அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையும், மனதில் ஓடி கொண்டிருந்தது.
இரண்டு கைகளை அகல விரித்து, அவர்களை கன்னத்தில் அறைய முற்பட்டது. அதன் கைகளில் 4 தடித்த விரல்கள் இருந்தன. அந்த விரல்கள் கால்விரல்களை போல பெரியதாக இருந்தன.
முகத்தின் முக்கால் பாகம் இருந்த அந்த புருவமில்லாத ஒற்றை கண்ணால் உருட்டி உருட்டி பார்த்தது.
பக்கத்தில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஜாக் அந்த உருவத்தை நோக்கி வீசினான். அது சரியாக அதன் முகத்தில் பட்டு, ரத்தம் கொப்பளித்து வழிந்தது. அது கரும் பச்சை ரத்தம்.
வலி தாங்காமல் அந்த உருவம் ஓலமிட்டது. அந்த உருவத்தின் மரண ஓலம் கேட்டு, தூரத்தில் கும்பல், கும்பலான ஒரு மிருக கூட்டம் அவர்களை நோக்கி ஓடி வந்தது. பயத்தில் இருவரும் மயங்கி சரிந்தனர்.

3 comments:

Abu said...

Ojaye ojaye Oja....ayyo pakkave payama iruku...thala ....enga irunthu pudichinga intha oja va...?

Oja pramathamaga payanikirar ....

vazthukkal !

Regards
Abu

தாமிரா said...

கதை மிக த்ரில்லாக ஆரம்பிக்கப்பட்டு சொதப்பலாக முடிந்துவிட்டது.. ஆனால் இந்த படத்தை எங்கேங்க புடிச்சீங்க? யப்பா.. புல்லரிக்குது.!

gopi said...

நன்றி அபு மற்றும் தாமிரா

இது என் கன்னி முயற்சி (கதை எழுதுவதில்).

நீட்டி முழக்காமல் இருக்க, சட்டென கதை முடிந்து விட்டது. இனி கவனம் செலுத்துவேன்.

தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி. தொடர்ந்து வருக. இங்கு மேலும் பல கதைகள் உள்ளது. அதனையும் படித்து, தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

படம் கூகிளில் பிடித்தது.