Tuesday, March 3, 2009

கேப்டன் விஜயகாந்த் - எங்கள் ஆசான் (படத்த வாங்க ஆளு யாரும் இல்லீங்கோ ஒ)






விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் படம் முடிந்த பின்பும் ரிலீஸ் செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை என்பதால்தான் இந்த நிலை. முதலில் படத்தை வாங்கிக்கொள்வதாக உறுதியளித்த பிரமிட் சாய்மீரா கடைசி நேரத்தில் கையை விரிக்க, அதிர்ந்து போய் விட்டார் தயாரிப்பாளர் தங்கராஜ்.

இதற்கிடையில் மரியாதை பட பிரஸ் மீட்டில், "எங்கள் ஆசான் ரிலீஸ் ஆவது தாமதமாகிக்கொண்டிருக்கிறதே" என்று ஒரு நிருபர் கேட்க, "என் வேலை நடிச்சுக் கொடுப்பதுதான். படத்தை ரிலீஸ் பண்ணுவதும், தள்ளிப் போடுவதும் தயாரிப்பாளரின் இஷ்டம். அதிலே நான் எப்படித் தலையிட முடியும்?" என்றார் கேப்டன். முன்பெல்லாம் தனது படங்களில் ஏதாவது சிக்கல் என்றால் முன்னின்று முடித்து தருபவர், இப்போதெல்லாம் இப்படிப் பேசுவது எதனால் என்று புரியாமல் தவித்தார்கள் நிருபர்கள்.

இவர்களைவிடப் பெரும் தவிப்போடு இருப்பவர் எங்கள் ஆசான் தயாரிப்பாளர்தான்.

(நன்றி : சென்னைஆன்லைன்.காம்)
(இவரு பின்ன வடிவேலு கூட எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா காமெடி லெவல்-ல தான் இருக்கமுடியும். கடந்த பத்து வருடங்களில் விஜயகாந்த் நடித்த ரமணா தவிர எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. ஆகவே தான் விஜயகாந்தின் படங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. சமீபத்தில் டாப்-20 தமிழ் நடிகர்களின் பட்டியலை ஒரு முன்னணி வெப்சைட் வெளியிட்டது. அந்த லிஸ்டில் விஜயகாந்த் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

3 comments:

Suresh said...

super post thalai, evaroda oru padam peru kuda maranthupochu ah neyagbagam vara an vanthuduchu arasangam first day first show mayajal la vera padathukku ticket kedaikama parthom counter karane oru mathiri parthan engalae mothame 4 peru in mayajal seri kali kalai kalachu comedy padam parthom...

eppadi nalla nagaichuvaiyana engal asan eppothu varum nanba, veraswamy ku potiya ..

he he

nanum oru post potu irukan padinga pudicha vote a podunga

. said...

எடக்கு மடக்கு காரரே
எப்படிங்க நச்சு நச்சுனு போஸ்ட் போடுறிங்க.

எடக்கு மடக்கு போஸ்டிங் படிச்சா உடனே சிரிப்பாணி வந்து மனது லேசாயிருது.

விக்க முடியாத சரக்கு விலை போகாத சரக்கு ஆனா பேரு பெரிசு எங்கள் ஆசான்

ஆமா அண்ணே சதிஷ்!!! அரசாங்கம் பார்த்த விவரம் சொல்லவே இல்லை. பார்த்திங்களா .... விட்டுட்டு போய்டிங்களே.

R.Gopi said...

Thanks Suresh and Padukali for your visit and comments.