Sunday, March 15, 2009

டன்மான டமிலன் @ டகால்டி டயலாக்ஸ் டாட் காம்


தே.மு.தி.க. கட்சியின் "தலை"வர் "கேப்டன்" என்ற அடைமொழியில் அனைவராலும் செல்லமாக (??) அழைக்கப்படுபவரும், தமிழ் கரடி விஜய டி.ராஜேந்தரால் "டாஸ்மாக் தாதா" என்று அழைக்கப்பட்டவரும், ஜெ.ஜெ. அவர்களால் காட்டமாக "குடிகாரன்" என்று அழைக்கப்பட்டவரும், கலைஞர் அவர்களால் "டாஸ்மாக் சகோதரன்" என்று அன்பாக விளிக்கப்பட்டவருமான திரு.விஜயகாந்த் (விஜயராஜ், இவர் இயற்பெயர், ரைஸ் மில் ஓனர்), அவர்கள் தன் சுற்றம் சூழ தேர்தல் திருவிழாவிற்கு தயாராகி விட்டார்.

புள்ளி விவர புலி, மற்ற எல்லாவற்றிலும் எலி என்று அனைவராலும் புகழப்படும் திரு. விஜயகாந்த் அவர்களின், சுற்றுப்பயண பேச்சை, சிறிது கேட்போமா??

குட் ஈவினிங். என்னடா, இவன் எப்போவும் டமில்-ல தானே வணக்கம் சொல்லுவான், இப்போ என்ன புதுசா இங்கிலிஷ்-ல வணக்கம் சொல்றேன்னு பாக்கறீங்களா?? எல்லாரும் எனக்கு இங்கிலிஷ் தெரியாதுன்னு நெனக்கறாங்க .... அவங்களுக்கு தான் இந்த குட் ஈவினிங்.
போன வாரம்தான் A,B,C,D, கத்துகிட்டேன். அடுத்த வாரம் ரைம்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கறேன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க. இனிமே, A,B,C,D, தான், இங்கலிஷ்-ல ரைம்ஸ் தான் .... அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இங்க கூட்டமா கூடி இருக்கற உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. யார் பேச்சையோ கேட்டு, யாருக்கு ஓட்டு போட்டு, அங்க எதுவும் கெடைக்காம, இங்க வந்து இருக்கீங்க. இப்போ கூட சொல்றேன். நான் உங்க எல்லாருக்கும் வயிறு நெறைய பிரியாணி போடறேன். ஆனா, வர்ற எலக்ஷன்-ல எனக்கு தான் ஓட்டு போடணும். சரின்னா, இப்போவே, பிரியாணி போடறேன். ஊர்ல சுத்திட்டு இருந்த எல்லா ஆட்டையும், இப்போதான் ஆட்டை போட்டு, பிரியாணி ரெடி ஆயிட்டு இருக்கு.

போன எலக்சன்ல பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டீங்க. இந்த எலக்சன் அப்பவும் பணம் கேளுங்க. 500 குடுத்தா, 1000 கேளுங்க, 1000 குடுத்தா, 2000 கேளுங்க. அதுவும் ஒரே நோட்டுதான்..... 2000 நோட்டு இல்லேன்னு சொல்லுவாங்க, புதுசா அடிச்சு குடுக்க சொல்லுங்க. ஏன்னா, அது எல்லாம் உங்க பணம், அதனால கேட்டு வாங்குங்க.
இப்போ இருக்கற வெலைவாசி-ல யாருக்கும் பல்பொடி வாங்க கூட காசு இல்ல. இவ்வளவு ஏன், இந்த மேடைல இருக்கற யாருமே இதுவரைக்கும் பல்லு விளக்கல, என்னையும் சேர்த்து. கையில பாத்தீங்களா, வேப்பம்குச்சி... செங்கல்பொடி ........ இதான் நம்ம நெலமை.

நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு. ஆனா, என்னிய தேடி வந்துட்டா, மொதல்ல ஒரு வேப்பம்குச்சி குடுத்து, பல்லு வெளக்க சொல்லிட்டு, சூடா சுக்கு காப்பி தண்ணி தருவேன். பொறவு, சூடா சாப்பாடு தயார் ஆகும், நான் வீட்டுல இருந்தா, என்னிய பாக்க வரவங்க எல்லாருக்கும் வயிறார சாப்பாடு கெடைக்கும். ஆனா முக்கியமா ஒரு விசயம் சொல்றேன். நான் வாரத்துல 7 நாளு மட்டும் வீட்டுல இருக்க மாட்டேன்.

என் கட்சில சேரணும்னு நெறைய பேரு வாராங்க. எல்லாரும் சீக்கிரமா வந்து சேந்துடுங்க. கட்சில சேர்ர எல்லாருக்கும் சுக்கு காப்பி தண்ணியும், கோழி பிரியாணியும் உண்டு. இப்போ கூட, வர்ற வழியில "வெட்டி வாலிபர்கள் சங்கம்"ன்ற ஒரு சமுதாய கூடத்த தொறந்து வச்சுட்டுதான் வரேன்.

இதுக்கு முன்னை ஆட்சில இருந்தவங்க உங்களுக்கு இலவச டி.வி. குடுத்தாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா, இலவசமா, ரேடியோ பொட்டி, ஐஸ் பொட்டி (அதாங்க பிரிட்ஜ்), ஜில் ஜில் பொட்டி (அதாங்க ஏ.சி.), கையில தூக்கிட்டு போய் பேசுற போனு (அதாங்க அண்ணன் சொல்றது என்னனா, மொபைல்) எல்லாம் இலவசமா குடுப்போம். இது தவிர மழை காலத்துல, நீங்க நனையாம இருக்கறதுக்கு நாங்களே வந்து உங்களுக்கு குடை பிடிப்போம், எப்படி. அம்ம்ம்ம்ம்ம்ம்.

நம்ம ஆளுங்க எல்லாருக்கும், நம்ம மண்டபத்திலேயே இலவசமா திருமணம் நடத்தி வைப்போம், ..... டெபாசிட் மட்டும் ஒரு லட்சம் குடுத்துடுங்க. அந்த டெபாசிட் கூட உங்க மூணாவது புள்ள பொறந்த உடனே, திருப்பி குடுத்துடுவோம்.
என்னது, மண்டபத்த இடிச்சிட்டாங்களா?? திருப்பி கட்டுவான் இந்த மதுரக்கார மொரட்டுப்பய.என்னது, கட்டுவேன்ன்னு நான் சொன்னது, மறுபடியும் கல்யாணம் இல்லடா (குடும்பத்துல கொழப்பம் பண்ணிடுவான் போல இருக்கே), பரதேசி, கல்யாண மண்டபத்தடா.....
டேய். நீ கேள்வி கேக்கறத பாத்தா, நீ அந்த குடிவேலு-வோட ஆளா?? என்னது, குடிவேலு, யாருன்னு தெரியாதா?? அது தெரியரவங்களுக்கு தெரிஞ்சா போதும்டா (நாக்கை மடித்து துண்டால் அடிப்பது போல் ஆக்ஷன் காட்டுகிறார்).

இங்க ஒரு பெரியவரும் , பெரியம்மாவும் என்னிய குடிகாரன்-னு சொன்னாங்களாம். ஆமாம், நான் குடிக்கறவன் தான். ஆனா, உங்கள மாதிரி அந்த டாஸ்மாக் கடைய மட்டும் நம்பி வாழறவன் இல்ல, தானே காய்ச்சி, தானே அடிப்பான் இந்த சல்பேட்டா சபரி.

நீ காய்ச்சி, அத டாஸ்மாக்-ல வித்து, நான் குடிச்சா எனக்கு அசிங்கம்
நானே காய்ச்சி, அத, என் பங்களாவுல வச்சு குடிச்சா நான் சிங்கம்

என் அடுத்த படம் என்னன்னு கேக்கறீங்களா?? ஏற்கனவே நடிச்ச படமே வெளியே வரல. என்னது, எப்போ வருமா, யாருக்குய்யா தெரியும், ஒரு பயலும் படத்த வாங்க மாட்டேங்கறான். வாங்குனாதான வெளியே வரும். ஆனா, இப்போ ஒரு சூப்பர் கதை ரெடி பண்ணி வச்சு இருக்கேன். கிராமத்து கதை. டைட்டில் கூட ரெடி, படத்தோட பேரு பெரிய செட்டியார்.

என்னோட சின்ன கவுண்டர் நல்லா ஓடினதால, இந்த படத்துக்கு பெரிய செட்டியார்னு பேரு வச்சு இருக்கேன். அந்த படத்துல, குடிவேலு-ன்னு ஒரு காமெடி நடிகன அறிமுகப்படுத்தறேன். அவன் வந்து இங்க இருக்கற இன்னொரு வேலு-க்கு ஆப்பு வைப்பான். யாரு அந்த வேலுவா?? அவனுக்கு தெரிஞ்சா சரி....... வெக்கறேண்டா அந்த வேலுவுக்கு வேட்டு.

எனக்கு நடிகர் சங்க பதவிய தந்த நீங்க, இந்த நாட்ட ஆளுற பதவியும் தந்து பாருங்க. அப்புறம் நம்ம நாட்ட தேடி, அமெரிக்கா காரன் வருவான். எதுக்காக வருவானா?? என்னிய கேட்டா?? எனக்கு என்னடா தெரியும்?!!

கடைசியா ஒண்ணு சொல்றேன், எனக்கு ஓட்டு போடுங்க, வீட்டுக்கு ஒரு ரேசன் கடை தொரப்பேன். சீம எண்ணை, அஸ்கா சக்கரை, வருசா வருசம் பொங்கலுக்கு இலவசமா கரும்பு, தீபாவளிக்கு வெடி எல்லாம் இலவசமா குடுத்து பட்டைய கெளப்ப போறேன்.

இன்னும் பேசறதுக்கு நெறைய இருக்கு, பேசிட்டே இருந்தா, அடுத்தவன் வந்து ஆட்சிய புடிச்சி, 5 வருசம் ஆட்சி பண்ணிட்டு போய்டுவான், எல்லாரும் எனக்கே ஓட்டு போடுங்க. நான் இன்னும் 5-10 காலேஜ் கட்டணும், 10-15 கல்யாண மண்டபம் கட்டணும், அதுக்கு உங்க எல்லாரோட ஆச்சியும் தேவை.

யோவ், அது ஆச்சி இல்லைய்யா, ஆசி,
ஆட்சி வேற, ஆச்சி வேற......ஆசி வேற....

(ஐயோ, நமக்கு தமிழே தள்ளாடுதே. நாம மொதல்ல, இந்த தமிழ ஒழுங்கா பேச கத்துக்கணும், நமக்கு தமிழே தகராறு, இதுல அடுத்த மீட்டிங்-ல இங்கலிஷ் வேறயா?? ஐயோ நெனச்சாவே தல சுத்துதே... இவனுங்க வேற நம்ம டங்குவார அறுத்துருவானுங்க. எல்லாத்தையும் போட்டோ புடிக்கறானுங்க ..... அங்க இங்க போட்டு நம்ம மானத்த வாங்கிட போறாங்க .......
(பின்னால் திரும்பி)
தம்பி ஒரு கிளாஸ் சர்பத் போட்டு குடுப்பா ....
டேய் ........... ஏண்டா, சர்பத் கேட்டா அதையே தரணுமா?? சர்பத் குடுக்கற மாதிரி சல்பேட்டா குடுடா பரதேசி)
யப்பா, 4 தொகுதியும் 40 கோடியும் வாங்கறதுக்குள்ள, நாக்குல நொரை தள்ளுதுய்யா அய்யனாரே!!!

7 comments:

Simple_Sundar said...

என்னப்பா 2011 இல் முதல்வரா பதவியேற்க போகிறவரை இந்த வாரு வாருறீங்க?

இருந்தாலும் செம காமெடி சென்சுப்பா உங்களுக்கு...

- சுந்தர்
onlysuperstar.com

R.Gopi said...

Thanks Mr.Sundar for your visit and encouraging comments.

Feel free to visit regularly and encourage with your comments, which will motivate me to write more such articles.

cdhurai said...

hai gopi,

Its very superppp... so fun and comedy.. i enjoyed a lot.

But its too much still he s one only TTAmil Captain, in climax only u can identify the Heroic Power as seen Tamil Cinema. Like that he will show all his perpormance on coming 2011 electiion. Be wait upto the moment pls. mmm.. athu...

he will become a Madurai dog Millainore otherwise Madurai dod Chief Minister.

Be wait upto 2011.... NOw Interval Only session only

By sectrtary of TMDMK,dubai
chelldurai

R.Gopi said...

Thanks Chelladurai for your visit and comments.

Feel free to visit and comment to encourage me to write more and more.

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

கிரி said...

//தமிழ் கரடி விஜய டி.ராஜேந்தரால் "டாஸ்மாக் தாதா" என்று அழைக்கப்பட்டவரும், ஜெ.ஜெ. அவர்களால் காட்டமாக "குடிகாரன்" என்று அழைக்கப்பட்டவரும், கலைஞர் அவர்களால் "டாஸ்மாக் சகோதரன்" என்று அன்பாக விளிக்கப்பட்டவருமான திரு.விஜயகாந்த் //

இப்படி சொல்லி அவரை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க :-))

R.Gopi said...

//இப்படி சொல்லி அவரை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க :-))//

**********

கிரி

இவர வேற எப்படித்தான் நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவது?

அதான், அடுத்தவர்கள் சொன்னதையே நானும் சொல்லிவிட்டேன். "கேப்டன்" கோபப்பட்டா கூட, நம்ம மேல பட முடியாதே??

இதுவே பரவாயில்ல.... நம்ம "தமிழ் கரடி" இவர ஒரு மேடையில வச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார். "தமிழ் கரடி" நம் "கேப்டன்"ஐ பற்றி சொன்னது :

இரவினில் பிராந்தி
கரங்களில் ஏந்தி
சுவைக்கவோ பூந்தி
தேடுவது சாந்தி
காலையில் வாந்தி
ஆக முடியுமா காந்தி?