அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)
(இது இந்த நேரத்திற்கான பதிவு அல்ல... இருந்தாலும், படித்து மகிழுங்களேன்...)
அன்பு உடன்பிறப்பே... இந்த அவனியில் நீ வாங்க முடியாதது துவரம்பருப்பே... போன்ற "ஜல்லி"யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவு இது...
ஆகவே, தலைப்பை பார்த்து விட்டு கழக கண்மணிகள், சமீபத்தில் நம்ம "தல" வாங்கின அந்த "அண்ணா விருது" பற்றிய பதிவோ என்று உள்ளே வந்து ஏமாற வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (தலைப்பு மாற்றி போட்டு ஏமாற்றுவோர் சங்கம்) சார்பாக கேட்டுக்கொள்கிறேன்...
இது... காலேஜ் படிக்கும் போது, திரிஷா, பிரியாமணி (தகரத்தில் உப்பு காகிதம் வைத்து தேய்த்தது போன்ற குரல் உடையவர்) போன்று அழகும், பி.சுசிலா போன்ற குயிலின் குரலும் கொண்ட (இப்படி அழகு, நல்ல குரல்வளம் ரெண்டும் சேர்ந்து இருக்கற பெண்களை பார்க்கறது ரொம்ப ரேர் இல்ல...) பசுங்கிளிகள், பாசப்பறவைகள் ("தல"யின் பாசப்பறவைகள் அல்ல...), உடன் வகுப்பில் அல்லது அதே காலேஜில் படிக்கும் நம்மை பார்த்து, மயக்கும் புன்னகையை அள்ளி தெளித்து, கையசைத்து அழைத்து, பின் நமக்கு கொடுக்கும் விருது(ரக்ஷா பந்தன்)...
இந்த விருதை இதுவரை சந்தோஷத்துடன் எந்த இளைஞனும் வாங்கியதாக சரித்திரம், பூகோளம், அறிவியல் இல்லை.....
நாம் அனைவரும், ஏதாவதொரு காலகட்டத்தில் இந்த சிறந்த "அண்ணா விருதை" வாங்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.... வாங்கிய அனைவரும் அழுமூஞ்சி "அண்ணாக்கள்" ஆனதையும் மறப்பதற்கில்லை...
இந்த பதிவின் மூலம், "அண்ணா விருது" வாங்கிய அனைவரும், ஒன்று கூடி வந்து கும்மியில் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.....
அண்ணா விருது வாழ்க
இதை அள்ளி தந்த அழகு, தங்க மங்கையர்கள் வாழ்க
விருதை வாங்கி நொந்து போன கட்டிளம் காளைகள் வாழ்க.......
(பின் குறிப்பு : "அண்ணா விருது" வாங்கிய தங்க தம்பிகள், அழாமல் வந்து ஒருவருக்கொருவர் ஆறுதலும், தேறுதலும் சொல்லலாம்...என்று எங்கள் மற்றொரு சங்கத்தின் (தான் அழுதாலும், அழும் மற்றவர்களை தேற்றுவோர் சங்கம்)சார்பாக கூறிக்கொள்கிறேன்...
12 comments:
கலக்கல்டா தம்பி..(உரிமைதான்)
// தண்டோரா ...... said...
கலக்கல்டா தம்பி..(உரிமைதான்)//
நன்றி தண்டோரா அண்ணா...
உங்கள் பாசத்திற்கு என் நன்றி.... வருகைக்கும், ரசித்து பாராட்டியமைக்கும்.... மீண்டும் ஒரு முறை நன்றி....
செம காமெடி ..ஏதோ விசேஷமுன்னு உள்ள போன ஏமாந்தேன்..ஆனால் நகைச்சுவையா இருந்ததது.....
//தமிழரசி said...
செம காமெடி ..ஏதோ விசேஷமுன்னு உள்ள போன ஏமாந்தேன்..ஆனால் நகைச்சுவையா இருந்ததது.....//
வருக தமிழ்...
அதான், டைட்டில்லயே சொல்லிட்டேனே...
இன்னுமா இந்த உலகம் என்னிய நம்பிட்டு இருக்கு.... அய்யோ...அய்யோ...
அருமையான அண்ணா விருது.
// goma said...
அருமையான அண்ணா விருது.//
*******
வாங்க கோமா...
ஆமாம்... இது எதிர்பாராத விருது.... வாங்கறவங்க சந்தோஷப்படறதுக்கு பதில், வருத்தப்படுவாங்க...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
செமகாமெடியான பதிவு கோபி!!
//Mrs.Menagasathia said...
செமகாமெடியான பதிவு கோபி!!//
வாங்க மேனகாசத்யா...
வந்தததற்கும், வந்து ரசித்தமைக்கும், ரசித்து பாராட்டியமைக்கும் நன்றி...
தொடர்ந்து வாருங்கள்...
//Mrs.Menagasathia said...
pls see this link
http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html//
Welcome Mrs.Menagasathia...
Will see it now... Thanks...
சூப்பர் காமெடி கோபி
அன்புடன்
அம்மு.
//Ammu Madhu said...
சூப்பர் காமெடி கோபி
அன்புடன்
அம்மு.//
-----------
வாங்க அம்மு மது,....
வருகைக்கும், ரசித்து படித்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றி...
super comedy thala....
Syed babu
Post a Comment