Thursday, July 14, 2011

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்...

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

(எப்போதோ எழுதியது......)

Wednesday, April 6, 2011

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-1)


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட தே.மு.தி.க.தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" ஒரு "உற்சாக" விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்... அதில் கலந்து கொண்ட நமது சிறப்பு நிருபர் "டாஸ்மாக்கார்" அளித்த சுறுசுறு ரிப்போர்ட், இதோ..

முதலில் தே.மு.தி.க தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" கட்சி தொண்டர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்...

இங்க வந்து இருக்கற எல்லாருக்கும் வணக்கம்... நான் ரெம்ப நல்லவன்னு "அம்மா" சொன்னாய்ங்க... அம்மான்னா அவிய்ங்க இல்லடா... இவிய்ங்க வேற‌டா பரதேசி... என் வீட்டம்மா... பிரேமா....
பந்தலுக்கு உள்ளார நெறைய பேரு வந்தத பாத்தேன்... ஆனா, இங்க பாதி கூட்டம்தான் இருக்கு... மிச்சம் இருக்கறவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆனா, சொல்ல மாட்டேன்... அவிய்ங்களாவே இங்க வந்து பந்தல்ல ஒக்காரணும்... இன்னும், கொஞ்ச நேரத்துல இந்த மீட்டிங் முடிஞ்சதும், நானே என் கையால ஒங்க எல்லாருக்கும், சப்ளை பண்றேன்... யேய்.... பிரியாணிய சொல்றேன்...

இந்த தேர்தல்ல கூட்டணி வச்சதால இரண்டாவது எடத்துல இருக்கோம்..அடுத்த தேர்தல்ல, மொத எடத்துக்கு வரணும்... அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.. அவிய்ங்கள, நான் தனியா கவனிக்கறேன்...

தலீவா... இந்த தடவ அ.தி.மு.க. வோட சேர்ந்து போட்டி போடறோம்... அடுத்த தடவ, "தல" கிட்ட சொல்லி, அவிய்ங்கள போட்டி போட வேணாம்னு சொன்னா, நம்ம அடுத்த எலக்சன்ல மொத எடத்துக்கு வந்துடுவோம்...

டேய்... பரதேசி... நீ எந்த கச்சி ஆளுடா... மவனே.. நான் அங்க வந்தா, ஒன்னிய பெண்டு எடுத்துடுவேன்.. ஐடியா குடுக்கற மூஞ்சிய பாரு... ஓங்கி குத்தவா? (முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்துகிறார்....)... இதை பார்த்த, முதல் நான்கு வரிசை தொண்டர்கள் படை டர்ராகிறது...

உருப்படியா ஏதாவது சொல்றதுன்னா சொல்லுங்க... இல்ல, வந்த வேலைய பார்க்க போங்க... உள்ளுக்கு ரூம்புல தான் சரக்கு இருக்கு... அடிதடி பண்ணாம, முடிங்க... அந்த பக்கம், பிரியாணி பார்சல் இருக்கு... ஆளுக்கு ஒரு பார்சல் மட்டும் எடுத்துட்டு போங்க... போன தடவ ஆயிரம் பார்சல் வந்தது...அத்த, வந்து இருந்த ஐநூறு ஆளுய்ங்களே ஆட்டைய போட்ட மாதிரி இல்லாம.... என்று ஓவர் சவுண்ட் விடுகிறார்...
கேப்டனின் கண்கள் சிவந்து, பெரிதாகி, எந்நேரமும் தெறித்து விழுவதை போல் இருப்பதை கண்டு, சுதீஷ் அலறுகிறார்... இவன் வேற... ஏண்டா... இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கற... என்று சுதீஷை சீறுகிறார்...

மக்களே...நேத்து ஒரு பொஸ்தகம் படிச்சேன்... அது ரொம்ப நல்ல பொஸ்தகம்...

தலீவா... அது இன்னா பொஸ்தகம்?? எதுனா பலான பலானதா??

டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட‌ எப்போவும் போல‌வே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...

இப்போது மெதுவாக திரும்பி பக்கத்தில் இருக்கும் பண்ரூட்டியை பார்க்க, அவர் திருவள்ளுவர், திருக்குறள் என்று எடுத்து கொடுக்க...

ஆங்... அந்த பொஸ்தகம் பேரு "திருவள்ளுவர்"...எழுதுனது "திருக்குறள்"...

அய்யோ..அய்யோ என்று தலையில் பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த விஜயகாந்த் தன் சிவந்த விழிகளை பெரிதாக்கி, உருட்டி பார்க்க.... பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால் சாய்கிறார்...

அவர் சாய்வதை பார்த்த சிலர், சோடா கேட்க, ஒரு தொண்டர், ஒரு ஃபுல் பாட்டிலும், சோடாவும், கிளாஸூம்... கூடவே சிப்ஸூம் எடுத்து வருவதை பார்த்து கேப்டன் கர்ஜனை செய்கிறார்...

சோமாறி... மயங்கி விழுந்தவனுக்கு, மொதல்ல வெறும் சோடா குடுடா... எழுப்பி, வேணுமான்னு கேட்டு சரக்கு கலக்கி குடு... எல்லாத்தையும், நானே சொல்லி தரணுமாடா. எவ்ளோ வருசம் என்கூட இருக்க... இது கூட தெரியலியா என்று ஜெர்க்குகிறார்...

சரி. சரி.. மொதல்ல அவர எழுப்பி உள்ளார இருக்கற‌ ரூம்புல படுக்க வைங்க... என்னோட ஏ.சி.ரூம்புக்கு யாரும் போயிடாதீங்க... அங்க எனக்கு தனியா காய்ச்சின பெஸல் சரக்கு இருக்கு...தப்பித்தவறி அத எடுத்து யாராவது அடிச்சு காலி பண்ணுணீங்க, மவனே, ஒரு பய இந்த எடத்த விட்டு உருப்படியா போக முடியாது...என்று ச‌வுண்ட் விடுகிறார்...

பெருமூச்சு வாங்கி விட்டு, சிறிதே போதை தெளிந்த நிலையில், அந்த பொஸ்தகம் பேரு "திருக்குறள்", அத்த எழுதுனவரு அந்த பெரிய தாடி வெச்ச "திருவள்ளுவர்" என்று சரியாக சொல்லிவிட்டு, ஹீ...ஹீ... என்று இளிக்கிறார்... அப்போது பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு தொண்டர் ஃபோட்டோ எடுக்க... அந்த ஃபோட்டோவ வெளியே பெரிசா போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார்...

பொஸ்தகம் முழுசா படிச்சேன்... அதுல ஒரு கொறளு நெனவுக்கு வந்துச்சு... சொல்லவா என்று கூட்டத்தை பார்த்து கேட்க.. பசியில் எல்லா தலையும் ஒரு புறமாய் சாய, கேப்டன் சரி என்கிறார்கள் என்று எண்ணி, உற்சாசமாகி சொல்ல ஆரம்பிக்கிறார்...

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து...

அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? சொல்றேன் கேளுங்க...

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று கூறப்படுவது..

ஆனா, இப்போ கருணாநிதி ஆச்சில மக்களுக்கு நோய் வருது... விளைச்சலே இல்ல.. பொருளாதார வளம் அவரு வீட்டுல மட்டும் தான் இருக்கு... இன்ப நிலை.. கலைஞர் டி.வி.ல காட்டுற "மானாட மயிலாட" தான் இன்ப நிலையா?? உரிய பாதுகாப்பு... நாட்டுல எங்க இருக்கு பாதுகாப்பு...

காலைல கூட நான் வரப்போ ஒருத்தன் என் மேல தூக்கி போடறதுக்கு ஒரு பெரிய பாறாங்கல்லோட வந்தான்... அப்புறம் அவன கூப்பிட்டு சரக்கடிக்க ரூ.200 குடுத்தேன்... கம்முனு போயிட்டான்... என்ன மாதிரி ஒரு பெரிய கச்சி தலைவருக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்ல...

(யப்பா... ஒரெ ஒரு கொறளு சொல்றதுக்குள்ளவே, வேர்த்து, விறுவிறுத்து, நாக்குல நொரை தள்ளிப்போச்சு.. இனிமேல அந்த கொறளு பொஸ்தகத்த கண்ணால கூட பாக்க கூடாதுடா அய்யனாரே...).

இன்னும் நெறைய விசயம் இருக்கு... அடுத்த வாரம் மீட்டிங்ல சொல்றேன்... போயி எல்லாரும், வந்த வேலைய தொடங்குங்க... சரக்கு, பிரியாணி எல்லாம் உள்ளாக்க இருக்கற ரூம்புல இருக்கு...நான் வர்ட்டா..ஆங்ங். என்று சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக மாடியில் இருக்கும் தன் ரூம்புக்கு எஸ்கேப் ஆகிறார்...

(கேப்டனின் அதிரடி தொடரும்....)

Tuesday, March 22, 2011

"விதை” - குறும்படம்

”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய விதையுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த விதை குறும்படத்தின் கதாநாயகன்.

வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.

இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

“விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U


உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்


(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Thursday, March 17, 2011

சூப்பர் மூன் - 19.03.2011

ஜப்பானில் நிகழ்ந்த மாபெரும் சுனாமி பேரழிவை தொடர்ந்து, வானவியல் வல்லுநர்கள் மார்ச் 19 அன்று மற்றொரு இயற்கை பேரழிவான பூகம்பம், எரிமலை வெடித்து சிதறுதல், மற்றும் பல வகையில் அழிவு என்று இந்த பூவுலகம் சந்திக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் சில விஞ்ஞானிகள் இது போல் நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்..

இது விஷயமாக எனக்கு வந்த இந்த ஃபார்வர்ட் மெயிலை ”படிச்சாலே ஒதறுதுல்ல”.

*-**-*-*-*-*-*-*-*-*-*-

Supermoon on March 19th may cause natural disasters


On March 19th 2011, the moon will make its closest approach to Earth in almost 20 years, possibly triggering earthquakes, volcanic eruptions and other disasters.

The phenomenon, called lunar perigee or Supermoon, happens when the moon reaches its absolute closest point to Earth. On March 19, the natural satellite will be only 221,567 miles away from our planet.

There were Supermoons in 1955, 1974, 1992 and 2005, and these years had their share of extreme weather conditions, too. Although there are scientific laws that say the moon affects the Earth, it's still ambiguous whether the lunar perigee and natural disasters is coincidence or not.

Two days after online warnings that the Supermoon might trigger disasters, the devastating Japanese tsunami forced everyone to think - could the movement of the moon cause natural calamities?

"Supermoons have a historical association with strong storms, very high tides, extreme tides and also earthquakes," the Daily Mail quoted astrologer Richard Nolle, who first coined the term in 1979, as saying in an interview with ABC radio.

However, scientists dismiss this as utter nonsense.

Dr David Harland, space historian and author, said, "It's possible that the moon may be a kilometre or two closer to Earth than normal at a perigee, but it's an utterly insignificant event."

Professor George Helffrich, a seismologist at the University of Bristol was equally dismissive.

"Complete nonsense. The moon has no significant effect on earthquake triggering. If the moon triggers "big" earthquakes, it would trigger the many of millions of times more "small" earthquakes that happen daily. There is no time dependence of those; hence no moon effect," he said.

According to Dr Roger Musson, of the British Geological Survey (BGS), the devastating earthquake occurred because the Pacific Plate is plunging underneath Japan.

However, while hoping for a non-disastrous ‘moon giant’, point your eyes and camera lenses toward the night sky on 19th. If the sky is clear, you’re gonna get an exceptional celestial treat.

**********

நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கட்டும்...

ஆயினும், எந்த பேரழிவையும் எதிர் நோக்கும் தைரியமான மனம் நமக்கு கண்டிப்பாக வேண்டும்...

அப்படி பார்த்தால் இனி, இந்த பூமியில் எதையும் தாங்கும் இதயம் கொண்டால் மட்டுமே வாழ முடியும் போலிருக்கிறது...

நல்லவர்கள் குறைந்து, தீயவர்கள் மிகும் போது, இது போன்ற இயற்கை பேரழிவுகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும்...

இறை தொழுவோம்... அவனிடம் நம் இன்னல் குறைக்க சொல்லி இறைஞ்சுவோம்.

Thursday, March 10, 2011

உலகே மாயம்...வாழ்வே மாயம்...


உலகே மாயம்.... வாழ்வே மாயம்...

இந்த மாதிரி சோகப்பாட்டெல்லாம் பாடாம, இந்த விஷயத்த படிங்க... உலகின் தற்போதைய டாப்-10 பணக்காரர்கள் லிஸ்ட் இது...

2011-ம் ஆண்டிற்கான உலக பணக்கார பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இதில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு:-


*
கார்லஸ் ஸ்லிம் ஹெல்லு (மெக்ஸிக்கோ)- 74 பில்லியன் டாலர்

* பில்கேட்ஸ் (அமெரிக்கா)- 56 பில்லியன் டாலர்

* வாரண் பப்பெட் (அமெரிக்கா) - 50 பில்லியன் டாலர்

* பெர்ட்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்) - 41 பில்லியன் டாலர்

* லாறி எல்லிசன் ( அமெரிக்கா) -39.5 பில்லியன் டாலர்

* லட்சுமி மிட்டல் ( இந்தியா) - 31.1 பில்லியன் டாலர்

* அமின்ஸியோ (ஸ்பெயின்) - 31 பில்லியன் டாலர்

* எய்க் படிஸ்டா (பிரேசில்) - 30 பில்லியன் டாலர்

* முகேஷ் அம்பானி (இந்தியா) - 27 பில்லியன் டாலர்

* கிறிஸ்டி வால்டன் குடும்பம் (அமெரிக்கா) - 26.5 பில்லியன் டாலர்

இந்த டாப்-10 பட்டியலில் இந்தியாவின் லட்சுமி மிட்டல் 6வது இடத்தையும், முகேஷ் அம்பானி 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்...

இந்த லிஸ்ட்ல “தல” பேர் இல்லைன்னு வருத்தப்பட வேண்டாம்... வெகு வேகமாக முன்னேறி வருகிறார்... சீக்கிரமே இந்த டாப்-10 லிஸ்ட்ல வந்து விடுவார்...

Monday, February 28, 2011

மஹா சிவராத்திரி விரதம் - ஓம் நமசிவாய

ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,

மஹா சிவராத்திரி விரதம்

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 02.03.2011 புதன்கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.

தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை ந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆக

மங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என்று பொருள்படும்.

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. மற்ற எல்லா சிவராத்திரிகளையும் விட இதுவே சிறப்புடையதும். பல்வேறு வகையான பெரிய நலன்களை வழங்குவதாலும், மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் ஒருசேர வழங்குவதாலும், இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறும் விரதங்களின் விளக்கங்கள்.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். நித்திய சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை இருக்க வேண்டும். பெண்கள் 24 முறை விரதம் இருக்கலாம்.


பட்ச சிவராத்திரி:


தை மாதம் தேய்பிறை பிரதமை முத
ல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை அணிவித்து சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.


மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.


யோக சிவராத்திரி:


ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பக
லிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். இந்த யோகா சிவராத்திரி ‌மிகவு‌ம் அரிதாக வரும்.

மகா சிவராத்திரி :

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.


சிவராத்திரி விரத முறைகள் :

சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி,அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.


திருச்சிற்றம்பலம்