Monday, March 2, 2009

டண்டனக்க டமாலு, உத்துப்பாரு நம்மாளு, கரடிக்கு சவாலு








தமிழ்நாட்டின், டெர்ரர் ஹீரோ (ஹீரோயினை தொடமாட்டார், ஆனால் சொம்பு சொம்பாக பால் எடுத்து ஊத்துவார், பால்தொட்டியில் ஹீரோயினை போட்டு குளிப்பாட்டுவார்), கேமராமேன், பாடலாசிரியர் (தட்டி பாத்தேன் கொட்டாங்கச்சி, தாளம் வந்தது பாட்ட வச்சி, தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சு உட்பட பல அதிரடி பாடல்கள் எழுதி உள்ளார்), இசையமைப்பாளர், பாடகர் (பொன்னான மனசே பூவான மனசே பாடல் புகழ்), டான்ஸ் மாஸ்டர் (சமீபத்திய அட்டகாச டான்ஸ் படம் வீராசாமி), ஸ்டண்ட் மாஸ்டர், காதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர், மேக்கப் கலைஞன் உள்ளிட்ட பல விஷயங்களையும் தன் படத்தில் செய்வார். செய்து நம் அனைவரையும் கொல்வார். அவர்தான் நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பல்கலை வேந்தன் கரடி டி.ராஜேந்தர்.

வாய் ஓயாமல் அடுக்குமொழி பேசி, அடுத்தவரை எப்போதும் குறை கூறி கொல்லும் இந்த கரடி, கொஞ்ச நாளாக வாய்மூடி இருக்கிறது. அவரை நம் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் நோக்கில் அவர் எழுதிய ஒரு சூப்பர் கவிதை, உங்கள் பார்வைக்கு.
********************************************
டேய் குகையில் இருந்தா புலி
வலையில் இருந்தால் எலி
கொழம்புல போட்டா புளி
ஜலிப்பு கட்டினா சளி
அடிபட்டா வரும் வலி
குழியில ஆடுனா கோலி
கழியில ஆடுனா கில்லி
கழுத்துல கட்டுனா தாலி
கொழந்த தூங்குனா தூளி
வேல செஞ்சா ஜோலி
ஊர் சுத்துனா ஜாலி
வீட்ட சுத்தி போட்டா வேலி
ஆனா, மவனே லாரி ஒன்மேல ஏறினா நீ காலி
தலைல வெச்சா கரகம்
நான் என்னிக்குமே கெரகம்
மலைன்னா சிகரம்
நான் வந்தா ஊரே நகரும்
துருப்பிடிச்சா தகரம்
இதே ரேஞ்சுல போனா எனக்கு நரகம்
என் பையன் பேரு சிம்பு
அவன்கிட்ட வேணாம் வம்பு
அவன் நல்லவன்டா நம்பு
நீ நம்பினா எனக்கு தெம்பு
எதுவுமே சாப்பிடலேன்னா நோம்பு
ரொம்ப பிகு பண்ணினா வீம்பு
பொந்துல இருந்து சீறினா பாம்பு
அடுப்புல வெடிச்சது கடுகு
தண்ணியில போனது படகு
மலைன்னாலே அது குடகு

நீ என்ன பாத்தா கண்ணு
நான் அப்போ துன்னது பன்னு
குத்தினா பின்னு
பிஸ்கட் வெச்சா டின்னு
நீ ஓரமா போய் நின்னு
நான் சொன்னத திங்க் பண்ணு
தாண்டினா ஜம்பு
தண்ணி வந்தா பம்பு
எனக்கு எல்லாரும் வச்சது ஆப்பு
கண்ணுல வந்தா கண்ணீரு
மண்ணுல வந்தா தண்ணீரு
வாசனையா இருந்தா பன்னீரு

ஏய் டண்டனக்கா, ஏய் டணக்குடக்கா

1 comment:

. said...

வயிறு புண்ணா போச்சு தலை. நல்ல நகைச்சுவை. (இந்த உட்டாலங்கடி கவிதை)

கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, எடிட்டிங் இயக்கம் என்று ஒரு தலையாய் செய்ததில் சாதனை உண்டு. ஒரே படத்தில் முடித்து கொண்ட இரவல் திறமை இல்லாது வெற்றியும பெற்ற மனிதர் இவர்.

அசைக்கமுடியாத தன்னம்பிகைக்கு இன்றும் நான் இவரை சொல்லுவேன். (எது வேணா செய்ய தயார் என்று கட்சை கட்டி நிற்பவர் )
முந்திய கால பங்களிப்பை (முதல் சில படங்கள் வரை - ந.மு நடிப்பதற்கு முன் நடிப்பதற்கு பின் ) மறந்தது ராஜேந்தருக்கு மட்டும் அல்ல எடக்கு மடக்கும் சறுக்கல்.