Saturday, March 7, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே - "தல" ஸ்பெஷல்



தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் "தல" தன் கேள்வி பதிலுடன் தயாராகி விட்டார். மிகுந்த பணிகளுக்கிடையில் அவர் அளித்த இன்றைய ஓரிரு வார்த்தை, "கேள்வியும் நானே பதிலும் நானே".

கேள்வி : அரசியல் என்பது?
பதில் : அனுபவசாலிகள் விளையாடும் மைதானம்

கேள்வி : தி.மு.க?
பதில் : திறமைசாலிகள் முழுதும் கலந்தது.

கேள்வி : திருமா??
பதில் : கருஞ்சிறுத்தை.

கேள்வி : வை.கோ?
பதில் : புலியல்ல, பூனைக்குட்டி.

கேள்வி : ராமதாஸ்?
பதில் : மருத்துவராக தகுதி பெற்ற மருத்துவர்.

கேள்வி : காடு வெட்டி குரு?
பதில் : என் அன்புத்தம்பி

கேள்வி : ஜெ.ஜெ.?
பதில் : பகட்டு சீமாட்டி.

கேள்வி : மு.க.முத்து?
பதில் : நடிப்பு சுரங்கம், பல்கலை வித்தகன்.

கேள்வி : மு.க.அழகிரி?
பதில் : அரசியல் அனுபவசாலி.

கேள்வி : மு.க.ஸ்டாலின்?
பதில் : தமிழ்நாட்டின் தளபதி.

கேள்வி : தங்கபாலு??
பதில் : என் ஆருயிர் நண்பர்.

கேள்வி : இளங்கோவன்??
பதில் : எல்லோருக்கும் இனியவர்.

கேள்வி : கேப்டன் விஜயகாந்த்?
பதில் : அவர் எந்த டீமுக்கு கேப்டன்? அவரை பழுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழையுங்கள்.

கேள்வி : ரஜினிகாந்த்??
பதில் : கருப்பு வைரம், இந்தியாவின் சூப்பர் ஸ்டார், விரைவில் அகில உலகும் கொண்டாடப்படும் நிலைக்கு வருவார்.

கேள்வி : கமலஹாசன்?
பதில் : சகலகலா வல்லவன்.......கலைத்தாயின் முதல் மகன்.

கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓட்டை பாத்திரத்தில் ஓராயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க நினைப்பவர்.

கேள்வி : நடிகர் விவேக்?
பதில் : நகைச்சுவை வித்தகன்.

கேள்வி : வடிவேலு?
பதில் : வைகை மண்ணில் வந்த கரும்சிரிப்பு.

கேள்வி : வாலி?
பதில் : வார்த்தை ஜால கவி.

கேள்வி : வைரமுத்து?
பதில் : வைர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கேள்வி : இளையராஜா?
பதில் : இசைத்தாயின் மூத்த மகன்.

கேள்வி : ஏ.ஆர்.ரஹ்மான்?
பதில் : இசையை சுவாசிக்கும் இளம்புயல்.
கேள்வி : பாராளுமன்ற தேர்தல்??
பதில் : நாளை நமதே, நாளை நாற்பதும் நமதே!!!!

6 comments:

. said...

தி மு கா
திருட்டுத்தனம் முழுதும் கலந்தது என்பதே நாசுக்காய் சொன்னாரோ

டி ஆர் பற்றிய மெட்டப்பெர் மிகவும் அருமை. 'பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' என்ற பாடல் காதில் ஒலிப்பதை தவிர்க்க முடியவில்லை.

ரமேஷ் கார்த்திகேயன் said...

திருக்குவளை முத்துவேல் கருணாநிதி
என்பதே மிக சரியான பதில்

R.Gopi said...

வருகைக்கு நன்றி படுக்காளி மற்றும் ரமேஷ்கர் அவர்களே.

தி.மு.க.விற்கு ரமேஷ்கரின் விளக்கமும், டி.ஆர்.பற்றி படுக்காளி சிலாகித்து சொன்னதும் ரசிக்கத்தக்க விதத்தில் இருந்தது.

தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தாருங்கள். கருத்தை பகிருங்கள்.

Abu said...
This comment has been removed by the author.
Abu said...

திரு .கோபி அவர்களுக்கு,

கேள்விகளுக்கு , தகுந்த பதில் அளித்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்களின் இந்த கேள்வி பதில் பகுதி மிகவும் சுவாரசியம் மிகுந்ததாக உள்ளது.அடுத்த கேள்வி பதில் பதிப்புக்காக மிகவும் ஆவலோடு உள்ளேன்.

குறிப்பு : மு. க வை இந்த தாக்கு தாக்குரீர்களே , பாவம் மு.க . ஜெ அதிர்ஷ்ட சாலி தான்.

அன்புடன்
அபு

R.Gopi said...

Welcome Mr.Abu

Thanks for your visit and comment. Keep visiting for updated articles and share yoru comments.