Sunday, August 9, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-8)










கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில், தெலுங்கில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார். இது, ரஜினிக்கு முதல் தெலுங்கு படம்...... பெயர் "அந்துலேனி கதா".
*******************
"BLOODSTONE' என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நிறுவனம் அவருக்கு 1988-ம் ஆண்டின் "சாதனையாளர்" (BEST ACHIEVER AWARD) விருது அளித்தது... அந்த விருதை வாங்கி கொண்டு, ரஜினி அவர்கள் விழா மேடையில் தன்னடக்கத்துடன் சொன்னது..

"IT IS NOT AN ACHIEVEMENT, BUT AN OPPORTUNITY".
*****************

"புன்னகை மன்னன்" படத்தின் 100-வது நாள் விழா, ஆனந்த் தியேட்டர் வளாகத்தில், கே.பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது... அந்த விழாவின், முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார் :

HE IS AN INSTITUTION BY HIMSELF
*********************

சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட "ப்ரியா" படம்தான் தமிழின் முதல் "ஸ்டீரியோபோனிக்" இசை கொண்ட படம் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த "ஸ்டீரியோபோனிக்" இசையை "ப்ரியா" படத்திற்கு அமைக்க பெரும் அளவில் உதவி புரிந்த பின்னணி பாடகர் "ஜேசுதாஸ்" அவர்களுக்கு நன்றி செய்யும் விதமாக, இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்களையே பின்னணி பாட வைத்தார்.
*********************

கதாசிரியர், வசனகர்த்தா போன்ற பலமுகங்களை கொண்டவரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பெண்ணின் திருமண விழாவில் எத்தனையோ நண்பர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், பாலகுமாரன் அவர்கள், ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டதை சிலாகித்து சொன்னதை பாருங்களேன்....

கேள்வி : ரஜினிகாந்த், உங்கள் இல்ல திருமணத்திற்கு வந்திருந்து, உங்கள் செல்ல மகளை வாழ்த்தினாராமே?

பாலகுமாரன் பதில் : ஆமாம்....அது என் பாக்கியம்....எங்கள் மூத்தோர் செய்த புண்ணியம்...என் குழந்தையின் நல்வாழ்க்கைக்கு கிடைத்த நல்ல சகுனம்.... வாழ்நாளின் இறுதிவரை நான் சந்தோஷப்பட்டு, நன்றியோடு நினைத்து கொண்டிருக்கிற விஷயம். திருமண வரவேற்பின் போது, வந்து ஏழு நிமிடங்கள் நின்று கவுரப்படுத்திய அவரின் வருகைக்கு பிறகு மனசெல்லாம் நிறைந்து போயிற்று...

ரஜினி அந்த திருமண வரவேற்பிற்கு வந்த அந்த தருணத்தை எழுத்தாளர் பாலகுமாரன் இவ்வாறு விவரிக்கிறார்..

"குண்டலினி சக்தி எழும்போது ஒரு மனிதருக்கு எத்தனை பரபரப்பு உள்ளத்திலும், உடம்பிலும் ஏற்படுமோ, அப்படியொரு பரபரப்பு திருமண வரவேற்பில் திரு.ரஜினிகாந்தின் வருகையின்போதும் எல்லோருக்கும் ஏற்பட்டது...பாதுகாப்பின் காரணமாக எங்கேயும் அதிகம் போகாத அவர் என் மீது அன்பு வைத்து, என் குழந்தையை நேரடியாக ஆசீர்வதித்தது, நாங்கள் செய்த பாக்கியம்....அவருக்கு எங்கள் வீடு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.....
******************

அமிதாப் பச்சன் "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த போது, ஒருமுறை கலந்து கொள்ள வந்திருந்த போட்டியாளரின் பெயர் "ரஜினிகாந்த்". அவர் பெயரை கேட்டவுடன், அமிதாப் பச்சன், அந்த போட்டியாளரிடம் :

ரஜினிகாந்த் என்றொரு மாபெரும் தென்னிந்திய நடிகர் உள்ளார்...... அவர் என் சிறந்த நண்பர் என்று கூறினார்...... பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பியது என் நினைவுக்கு வருகிறது......
*********************

"சிவாஜி தி பாஸ்" திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்கள் முன்பு வந்த ஆனந்த விகடன் இதழில் படத்தின் வசனகர்த்தா "சுஜாதா" அவர்க கூறியது....

"நான் சில நகை வாங்க வேண்டும் என்று பிரின்ஸ் ஜுவல்லரி சென்றிருந்தேன்..... அங்கு இருந்த சேல்ஸ்மேன் எனக்கு பலவேறுபட்ட நகைகளை எடுத்து காண்பித்தார்.... அதில், நான் சிலவற்றை செலக்ட் செய்தவுடன், என்னிடம் வந்து, சிவாஜி படத்தின் கதை என்ன என்று கூறினால், பில் அமௌன்டில் சில ஆயிரங்கள் குறைப்பதாக சொன்னார்........ என்னால், சிறிதும் நம்ப முடியவில்லை.... சிவாஜி படத்தின் இந்த அளவு தாக்கத்தை....."
**********************

கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "வேலைக்காரன்" என்ற படம் வெளிவந்தது.... இது, அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்த "நமக் ஹலால்" என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

இளையராஜா இசை.... கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் மிக நன்றாக இசைக்கப்பட்டு இருந்தது...

அதில் வரும் ஒரு சூப்பர் ஹிட் டூயட் பாடல் "வா வா வா கண்ணா வா". இது காஷ்மீரில் படமாக்கப்பட்டது..... இந்த பாடலின் இடையில் வரும் வரிகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்..... இது என்ன புதுமை...... காதல் பாடலின் வரிகள் "மத நல்லிணக்கத்தை" சொல்கிறது என்று....

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே
பேச தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே...

இப்படி வந்து கொண்டிருக்கும் பாடலின் இடையே வரும் அந்த அற்புதமான வரிகளை இங்கே பாருங்களேன்....

"தாஜ்மகாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில், மதங்கள் ஒன்று சேரலாம்".....

எப்படி.......சும்மா அதிருதுல்ல..........
(தொடரும்......)

11 comments:

MUTHU said...

super continue

நட்புடன் ஜமால் said...

கிரஃப்த்தார் படம் பற்றி சென்ற வார இறுதியில் யோசித்து கொண்டிருந்தேன்



நல்ல தொகுப்புகள் ...

R.Gopi said...

//MUTHU said...
super continue//

Thanks for your maiden visit, comment and encouragement Mr.Muthu.


//நட்புடன் ஜமால் said...
கிரஃப்த்தார் படம் பற்றி சென்ற வார இறுதியில் யோசித்து கொண்டிருந்தேன்

நல்ல தொகுப்புகள் ...//

Jamal Bhai.... Thanks for your visit and comment... I have written about Geraftaar in Part-IV when writing exclusively about Super Star Rajni's Hindi Movies.

Still, more details to come...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எல்லாமே சூப்பர் தல. ஒட்டு போட்டாச்சி

Anonymous said...

Supero Super

கயல்விழி நடனம் said...

இதோ வந்துட்டேன்...

போய் விட்ட இடத்துல இருந்து படிச்சிட்டு வரேன்....

வெயிட்.....

கயல்விழி நடனம் said...

ம்...ம்...
(அப்படின்னா... waiting for next part nnu அர்த்தம்...)

R.Gopi said...

//krishna said...
எல்லாமே சூப்பர் தல. ஒட்டு போட்டாச்சி//

வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும், த‌ங்க‌ள் மேலான‌ வாக்குக்கும் என் ம‌ன‌மார்ந்த ந‌ன்றி கிருஷ்ணா..... (ம‌ன்ன‌ன் ப‌ட‌த்துல‌ த‌லைவ‌ர் பெய‌ர் கூட‌ கிருஷ்ணாதான்...)

//Anonymous said...
Supero Supeர்//

வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றியோ ந‌ன்றி....

//கயல்விழி நடனம் said...
இதோ வந்துட்டேன்...

போய் விட்ட இடத்துல இருந்து படிச்சிட்டு வரேன்....

வெயிட்.....//

வாங்கோ...

ச‌ரிங்கோ...

ஓகேங்கோ...ப‌ண்றேங்கோ...

//கயல்விழி நடனம் said...
ம்...ம்...
(அப்படின்னா... waiting for next part nnu அர்த்தம்...)//

ம்...ம்... (அப்ப‌டின்னா... NEXT PART IS GETTING READY nu அர்த்த‌ம்...)

R.Gopi said...

எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

aammaappa
ktmjamal
elumalairam
kvadivelan
vilambi
Mahizh
ashok92
balak
tharun
mounakavi
jntube
puthumainew

பாசகி said...

சூப்பருங்க :)

R.Gopi said...

//பாசகி said...
சூப்பருங்க :)//

ந‌ன்றி பாச‌கி... ம‌ற்ற‌ ப‌குதிக‌ளையும் (9 & 10) ப‌டித்து ம‌கிழுங்க‌ள்...

வேறு ப‌ல ப‌திவுக‌ளும் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து... அதையும் ப‌டித்து க‌ருத்து தெரிவியுங்க‌ள்...