Wednesday, August 12, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி - 9)


நீங்கள் ரசித்து வாசித்து வந்த இந்த தகவல்கள் சிலவற்றை, வானொலி மூலமாய் அமீரகத்தில் சில பேர் கேட்டு இருக்க கூடும்.
நானும் நண்பர் லாரன்ஸ் அவர்களும் இணைந்து மற்ற பல நண்பர்களின் (அபுதாகீர் உட்பட) உதவியுடன், அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலியான SHAKTHI FM ரேடியோ ஊடாக, 2006, 2007, 2008 (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஆடியோ லின்க் இதோ..http://www.rajinifans.com/detailview.php?title=960) ஆகிய‌ வருடங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் செய்தோம். கடவுள் அருள் இருப்பின் இந்த வருடமும் அந்த நிகழ்ச்சி நடைபெறும்.....

2007 மற்றும் 2008 வருடங்களில் நாங்கள் துபாயிலிருந்து தொலைபேசி / அலைபேசி வழியாக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தொடர்பு கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சியை பற்றி விளக்கி கூறி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்....

வெகுநேரம் ரஜினியை பற்றியும், ரஜினியின் உயர்ந்த பண்பு, நேர்மை, உழைப்பு, உதவும் குணம் (வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில்) போன்ற விஷயங்களை எல்லாம் பற்றி பேசிய அவர், மேலும் கூறிய ஒரு சுவாரசியமான விஷயம் இதோ :

"நான் சமீபத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி எழுதிய புத்தகம் "பிருந்தாவனம்". அந்த புத்தகத்தின் முன்னுரையில் தமிழகத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை அறிமுகம் செய்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம் என்று எழுதியுள்ளேன் என்று கூறினர்....

********************
ரஜினிகாந்த் அவர்களின் பெரும்பாலான தமிழ் படங்கள் (தற்போதெல்லாம்) தெலுங்கில் உடனுக்குடன் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் பதிப்புடனேயே வெளியிடப்படுகிறது.... ஆனால், முன்பு அப்படி இல்லை.... எப்போதிலிருந்து இப்படி?
மெகா ஹிட் படம் "பாட்சா" வரை தெலுங்கில் ரஜினிக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.... ஆனால், எல்லா படங்களும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்....பாட்சா தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக் உரிமையுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோது, அவர் "பாட்சா" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை...

ஆக‌வே..."பாட்சா" படத்தை எப்போதும் போலவே டப்பிங் செய்து வெளியிட்டார்கள்... பின்னணி பாடகர் மனோ டப்பிங் குரல் கொடுத்தார் (கடைசியாக வெளிவந்த "சிவாஜி தி பாஸ்" வரை மனோ தான் ரஜினிக்கு தெலுங்கில் டப்பிங், கமலுக்கு எஸ்.பி.பி) .... படம் வெளியாகி பட்டையை கிளப்பியது... சிரஞ்சீவி கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருந்தினார்...

அதிலிருந்து ரஜினியின் எல்லா படங்களும் தெலுங்கில் உடனுக்குடனாக வெளியாகும்... சிவாஜி தி பாஸ் அதிகபட்சமாக 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தூள் கிளப்பியதைதான் நாம் அனைவரும் அறிவோமே !! 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தெலுங்கு பதிப்பு, ரூ.27 முதல் ரூ.30 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று செய்தி வந்தது....

சென்னை, ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் ஒரே நேரத்தில் வெளியானது கூட ஒரு சாதனைதான்....

சென்னையில் கேஸினோ திரையரங்கில் தெலுங்கு பதிப்பு வெளியானது....

********************
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த "நான் மகான் அல்ல" என்ற படம் முதலில் "நான் காந்தி அல்ல" என்ற பெயரில் தான் தயாரிக்கப்பட்டது.. சென்சார் போர்டு ஆட்சேபத்தின் பேரில் "நான் மகான் அல்ல" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... இது, ஹிந்தியில் சத்ருகன் சின்ஹா நடித்த "விஸ்வநாத்" என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது தெரியுமா?

********************
மறைந்த முன்னாள் இயக்குனர் ராஜசேகர் அவர்களின் டைரக்ஷனில் வெளிவந்த "தர்மதுரை" முதலில் "காலம் மாறிப்போச்சு" என்ற பெயரில்தான் தயாரிக்கப்பட்டது..... பின்புதான் "தர்மதுரை" என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்தது..

*********************
இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய படம்தான் "ராஜாதி ராஜா"....

இதில், ரஜினியின் இளமையான தோற்றமும், ரஜினியின் உடைகளும், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையும், பாடல்களும் ஒன்றாக கை கோர்த்து படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிந்தது....

இந்த படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்.... "மீனம்மா, மீனம்மா கண்கள் மீனம்மா, "மாமா ஒன் பொண்ண கொடு ஆமா சொல்லி கொடு", "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதிராஜனடா" "மலையாள் கரையோரம் கவி பாடும் குருவி" "என் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசையில்லயா" மற்றும் இசைஞானி இளையராஜா இயற்றி, (இதுவே பலருக்கு நியூஸ்தானே?!).இசையமைத்த ஒரு பாடல் "வா வா மஞ்சள் மலரே.

படம் வெளிவந்தது... திரைவிமர்சனத்தில், வழக்கம் போலவே வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம் ரஜினியை பற்றி வாருவதற்கு ஏதாவது செய்தி படத்தில் உள்ளதா என்று விளக்கெண்ணை ஊற்றி பார்த்தன.... அதிலும் "குமுதம்" படத்தை பார்த்து விட்டு பின்வருமாறு எழுதியது....

வா வா மஞ்சள் மலரே என்ற டூயட் பாடலில் ஒரு வரி வருகிறது.... வாச கருவேப்பிலையே உன் நேசம் வந்து சேர்ந்தம்மா என்று..... டூயட் பாடலில் கருவேப்பிலைக்கு என்ன வேலை??

அதே குமுதம் இன்று அதன் திரை விமர்சனத்தில், இந்த‌ பாட‌ல்க‌ளை எல்லாம் ப‌ற்றி ஒன்றுமே எழுதுவ‌தில்லையே...ஏன்??

நாக்க‌ முக்க‌ நாக்க‌ முக்க‌
க‌ட்டு க‌ட்டு கீர‌க்க‌ட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு
டேய்...கைய‌ வ‌ச்சுக்கிட்டு சும்மா இருடா!!!
குருவியோட‌ பாட்டு, கொளுத்துங்க‌டா வேட்டு, என் வீட்டு செங்க‌ல் நீ, என் சாப்பாட்டுல‌ உப்பு க‌ல்லு நீ....

இந்த பாடல்கள் எல்லாம் என்ன கவித்துவம் நிறைந்த பாடல்களா? நீங்களே சொல்லுங்க மக்களே.......

***************
ஜி.வி.பிலிம்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் டைரக்ஷனில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தளபதி" படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பதை நாம் அனைவரும் அறிவோம்... குறிப்பாக இங்கு நான் சொல்ல வந்த விஷயம், அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது, அட ஆமாம் என்று சொல்லக்கூடிய‌ விஷயம்.. அதாவது :

"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே" என்ற முழு பாடலும் ஸ்லோ மோஷனில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.....

(இன்னும் கொஞ்சமே வரும் ........)

17 comments:

நட்புடன் ஜமால் said...

நான் மகான் அல்ல

தர்மதுரை

இது இரண்டுமே தெரியாது.

கயல்விழி நடனம் said...

//நாக்க‌ முக்க‌ நாக்க‌ முக்க‌
க‌ட்டு க‌ட்டு கீர‌க்க‌ட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு
டேய்...கைய‌ வ‌ச்சுக்கிட்டு சும்மா இருடா!!!
குருவியோட‌ பாட்டு, கொளுத்துங்க‌டா வேட்டு, என் வீட்டு செங்க‌ல் நீ, என் சாப்பாட்டுல‌ உப்பு க‌ல்லு நீ....



ippadi thaththuva paatta pathi thappu thappa sonna appuram naan director perarasu kitta solli dialogue solla vaippen....

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
நான் மகான் அல்ல

தர்மதுரை

இது இரண்டுமே தெரியாது.//

வ‌ண‌க்க‌ம் ஜ‌மால் பாய்.... நிறைய‌ பேருக்கு தெரியாத சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌ற்றி எழுதும் போது, இவற்றை சொல்லலாம் என்று நினைத்தது சரிதானோ!!...

//கயல்விழி நடனம் said...
//நாக்க‌ முக்க‌ நாக்க‌ முக்க‌
க‌ட்டு க‌ட்டு கீர‌க்க‌ட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு
டேய்...கைய‌ வ‌ச்சுக்கிட்டு சும்மா இருடா!!!
குருவியோட‌ பாட்டு, கொளுத்துங்க‌டா வேட்டு, என் வீட்டு செங்க‌ல் நீ, என் சாப்பாட்டுல‌ உப்பு க‌ல்லு நீ....

ippadi thaththuva paatta pathi thappu thappa sonna appuram naan director perarasu kitta solli dialogue solla vaippen....//

வாங்க கயல்விழி.... அய்யோ.... பேரரசு பேர கேட்டாலே எனக்கு ஒதறுதுல்ல....

ஈ ரா said...

நல்ல செய்திகள் கோபிஜி ,

எழுத்தாளர் பாலகுமாரன், ஏற்கனவே 1993 வாக்கில் தான் எழுதிய " கற்றுக்கொண்டால் குற்றமில்லை" என்ற நூலையும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே சமர்ப்பித்து இருந்தார்...

முற்றிலும் தியானம், மன ஒருமுகம் போன்றவற்றைக் கொண்ட அந்த நூலை சமர்ப்பணம் செய்யும் போது அவர் எழுதியிருந்த வாக்கியம் இது :

"தமிழக மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தரும் எனது நண்பர் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்நூல் சமர்ப்பணம் "

R.Gopi said...

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈ.ரா.

தங்களின் வலைத்தளத்தில் எழுதி கொண்டு இருக்கும் சுதந்திர தின ஸ்பெஷல் தொடரை ரசித்து படித்தேன்... வாழ்த்துக்கள் ஈ.ரா...

நல்லா எழுதி இருக்கீங்க....

பாலகுமாரன் ரஜினி மேல் மிக உயர்ந்த அபிப்ராயம் வைத்துள்ளார்... இது, அவருடன் நடந்த டெலிஃபோன் உரையாடலில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டது....

சத்ரியன் said...

//பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...//

உண்மையாவே என் கணினியில ஆர்.கோபி என்ற பேர பார்த்தாலே என்னோட மேசைக்கூட அதிருது கோபி.

தகவல்கள் எல்லாம் (எனக்கு) புதுசா இருக்கு. நான் அதிகம் சினிமா சம்மந்தமான செய்திகளைக் கண்டுக்கொள்வ‌தில்லை.

அதென்ன நம்ம சூப்பர் மேல அவ்வளவு ஈடுபாடு?

R.Gopi said...

//சத்ரியன் said...
//பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...//

உண்மையாவே என் கணினியில ஆர்.கோபி என்ற பேர பார்த்தாலே என்னோட மேசைக்கூட அதிருது கோபி.//

வருகைக்கும், கருத்துக்கும் கூடவே உங்கள் பாராட்டுக்கும் என் மனமார்ந்த‌ நன்றி சத்ரியன்...ஆ...ஹா... எவ்வ‌ள‌வோ பழைய விஷ‌ய‌ங்களை / தகவல்களை இங்கு பதிவு செய்யும் என‌க்கே இந்த‌ த‌க‌வ‌ல் புதுசு க‌ண்ணா புதுசு...

//தகவல்கள் எல்லாம் (எனக்கு) புதுசா இருக்கு. நான் அதிகம் சினிமா சம்மந்தமான செய்திகளைக் கண்டுக்கொள்வ‌தில்லை.//

எல்லாமே ப‌ழைய‌ த‌க‌வ‌ல்க‌ள்தான்... என்ன‌, இவ்ளோ உன்னிப்பா பார்த்து இருக்க‌ மாட்டோம்...

//அதென்ன நம்ம சூப்பர் மேல அவ்வளவு ஈடுபாடு?//

சூப்ப‌ர்னு சொன்னாலே ஒரு ஸ்பெஷ‌ல் தானே ச‌த்ரிய‌ன்.... அதான்.... அவ‌ர் மேல் சிறிது கூட‌...

Sundari said...

//"நான் மகான் அல்ல" என்ற படம் முதலில் "நான் காந்தி அல்ல"//

New News...Din know before..

ஒரு போஸ்ட்ல எவ்வளவு நியூஸ் :)

Nice to know..

R.Gopi said...

// Sundari said...
//"நான் மகான் அல்ல" என்ற படம் முதலில் "நான் காந்தி அல்ல"//

New News...Din know before..

ஒரு போஸ்ட்ல எவ்வளவு நியூஸ் :)

Nice to know..//

வ‌ண‌க்க‌ம் சுந்த‌ரி... த‌ங்க‌ள் முத‌ல் வ‌ருகைக்கும், க‌ருத்து ப‌கிர்வுக்கும் ந‌ன்றி... ஒரு நியூஸ்கே இப்ப‌டின்னா, முழுசா 9 ப‌குதியையும் ப‌டிச்சா....

ப‌டிச்சு பாருங்க‌.... நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்கும்.... பிடித்தாலும் பிடிக்க‌லாம்....

அப்ப‌டியே என்னோட‌ இன்னொரு ப்ளாக் (www.edakumadaku.blogspot.com) போய் பாருங்க‌.... அதுல‌ ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ள் ப‌ற்றிய‌ ஒரு தொட‌ர் இருக்கு... அதுவும் உங்க‌ளுக்கு பிடிக்கும்...

ந‌ன்றி .....

கலகலப்ரியா said...

//அலைபேசி வழியாக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தொடர்பு கொண்டு//

ஆஹா.. அவங்க கூட ரெண்டு வார்த்த பேசணும்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ஆசை இருந்தது.. ! அவர் எப்படிப் பேசினார்னு ஒரு இடுகை போடுங்களேன்.. !

அப்புறம்.. எனக்குச் சினிமா அவ்ளோ பரிச்சயமில்ல.. அதனால என்ன சொல்றதுன்னு திகைப்பா இருக்கு.. ! சினிமா ஆவலர்களுக்கு உங்க இடுகை ஒரு விருந்து..! ஹிஹி..

R.Gopi said...

// கலகலப்ரியா said...
//அலைபேசி வழியாக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தொடர்பு கொண்டு//

ஆஹா.. அவங்க கூட ரெண்டு வார்த்த பேசணும்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ஆசை இருந்தது.. ! அவர் எப்படிப் பேசினார்னு ஒரு இடுகை போடுங்களேன்.. ! //

வாங்க‌ ப்ரியா.... உங்கள் முதல் வருகைக்கு நன்றி... நீங்க‌ளும் பால‌குமார‌ன் ரசிகையா.... அவ‌ர் மிக‌ தெளிவாக‌, க‌ணீரென‌, ர‌ஜினியை ப‌ற்றி மிக‌ உய‌ர்வாக‌ பேசினார்... ரஜினியின் பிற‌ரை ம‌திக்கும் குண‌ம், ஈகை குண‌ம், நேர்மை, திரையில் ம‌ட்டுமே ந‌டிக்கும் அந்த‌ ந‌ல்ல‌ ம‌ன‌ம்,க‌டின‌ உழைப்பு போன்ற‌வ‌ற்றை ப‌ற்றி சிலாகித்து பேசினார்.... அந்த‌ பேச்சின் ஆடியோ வேண்டுமெனின் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.. அனுப்ப‌ முய‌ற்சிப்பேன்...

//அப்புறம்.. எனக்குச் சினிமா அவ்ளோ பரிச்சயமில்ல.. அதனால என்ன சொல்றதுன்னு திகைப்பா இருக்கு.. ! சினிமா ஆவலர்களுக்கு உங்க இடுகை ஒரு விருந்து..! ஹிஹி..//

உங்கள் பாராட்டுக்கு நன்றி... அப்படியே என் மற்றொரு வலையையும் சென்று பாருங்கள்...
(www.edakumadaku.blogspot.com).
அங்கேயும் முழு விருந்து தயாராக உள்ளது..

ஈ ரா said...

//அந்த‌ பேச்சின் ஆடியோ வேண்டுமெனின் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.. அனுப்ப‌ முய‌ற்சிப்பேன்...//

நேக்கும் ஒண்ணு தரேளா?

e.ramsrams@gmail.com

R.Gopi said...

ஈ ரா said...
//அந்த‌ பேச்சின் ஆடியோ வேண்டுமெனின் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.. அனுப்ப‌ முய‌ற்சிப்பேன்...//

நேக்கும் ஒண்ணு தரேளா?

e.ramsrams@gmail.coம்//

க‌ண்டிப்பாக ஈ.ரா... உங்க‌ளுக்கு கொடுக்காத‌ ஒன்று என்னிட‌த்தில் இருந்து என்ன‌ ப‌ய‌ன்?

பாசகி said...

சும்மா கலக்கல் சூப்பரு-னு சொல்லி சொல்லி என்னோட கீ-போர்டே என்னை ஒரு மாதிரி பாக்குது. இருந்தாலும் பரவால்ல, சூப்பர்-ஜி!

//அந்த‌ பேச்சின் ஆடியோ வேண்டுமெனின் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.. அனுப்ப‌ முய‌ற்சிப்பேன்...//

ஜி அப்ப எனக்கு

R.Gopi said...

//பாசகி said...
சும்மா கலக்கல் சூப்பரு-னு சொல்லி சொல்லி என்னோட கீ-போர்டே என்னை ஒரு மாதிரி பாக்குது. இருந்தாலும் பரவால்ல, சூப்பர்-ஜி!//

வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும் ந‌ன்றி பாச‌கி...

//அந்த‌ பேச்சின் ஆடியோ வேண்டுமெனின் என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.. அனுப்ப‌ முய‌ற்சிப்பேன்...//அந்த ஆடியோ லிங்க் இந்த பதிவிலேயே உள்ளது... பாருங்கள் பாசகி...//

//ஜி அப்ப எனக்கு//

எதற்கும் இருக்கட்டும் என்று மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இங்கு தருகிறேன்...

http://www.rajinifans.com/detailview.php?title=960)

ARASIAL said...

//படம் வெளிவந்தது... திரைவிமர்சனத்தில், வழக்கம் போலவே வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம் ரஜினியை பற்றி வாருவதற்கு ஏதாவது செய்தி படத்தில் உள்ளதா என்று விளக்கெண்ணை ஊற்றி பார்த்தன.... அதிலும் "குமுதம்" படத்தை பார்த்து விட்டு பின்வருமாறு எழுதியது....

வா வா மஞ்சள் மலரே என்ற டூயட் பாடலில் ஒரு வரி வருகிறது.... வாச கருவேப்பிலையே உன் நேசம் வந்து சேர்ந்தம்மா என்று..... டூயட் பாடலில் கருவேப்பிலைக்கு என்ன வேலை??///

-நானே எழுத நினைத்திருந்த விஷயம்... சரியா சொல்லிட்டீங்க கோபி.

சரீ.... அதுக்குள்ள என்ன அவசரம்... அப்படியே தொடர்ந்து எழுதுங்க... தலைவர் பேரை எப்பக் கேட்டாலும், படிச்சாலும் மனதுக்குள்ள இன்ப அதிர்வுதான்!

-வினோ
என்வழி.காம்

R.Gopi said...

// ARASIAL said...
//படம் வெளிவந்தது... திரைவிமர்சனத்தில், வழக்கம் போலவே வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம் ரஜினியை பற்றி வாருவதற்கு ஏதாவது செய்தி படத்தில் உள்ளதா என்று விளக்கெண்ணை ஊற்றி பார்த்தன.... அதிலும் "குமுதம்" படத்தை பார்த்து விட்டு பின்வருமாறு எழுதியது....

வா வா மஞ்சள் மலரே என்ற டூயட் பாடலில் ஒரு வரி வருகிறது.... வாச கருவேப்பிலையே உன் நேசம் வந்து சேர்ந்தம்மா என்று..... டூயட் பாடலில் கருவேப்பிலைக்கு என்ன வேலை??///

-நானே எழுத நினைத்திருந்த விஷயம்... சரியா சொல்லிட்டீங்க கோபி.

சரீ.... அதுக்குள்ள என்ன அவசரம்... அப்படியே தொடர்ந்து எழுதுங்க... தலைவர் பேரை எப்பக் கேட்டாலும், படிச்சாலும் மனதுக்குள்ள இன்ப அதிர்வுதான்!

-வினோ
என்வழி.காம்//

******************

வாங்க வினோ... வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி...

இதை தவிர நான் என்ன எழுதினாலும், அனைவருக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும்... அதுவுமின்றி, உங்களை போன்ற பத்திரிக்கை தொடர்புடைய ஜாம்பவான்கள், அவரை பற்றி நிறைய எழுதி வருகிறீர்கள்... அதனால் தான்... இந்த தற்காலிக இடைவெளி...