Monday, August 24, 2009

அட்ராட்ரா நாக்க‌ முக்க‌ நாக்க‌ மு.க‌., மு.க‌.






என் அருமை தமிழே, அருமை தமிழின் தம்பி கன்னடமே... மற்றொரு அருமை தம்பி எடியூரப்பாவே... என் அருமை உடன்பிறப்பே... நீ இன்று இந்த உலகில் வாங்க முடியாதது துவரம்பருப்பே..

இன்று இந்த மாபெரும், வரலாற்று சிறப்பு மிக்க "ஐயன் சிலை" திறப்பு விழா உலகெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை எதிரணியினர் பல கோடி கொள்ளி கண்களுடன் பார்ப்பதை அன்றே வள்ளுவர் என்னிடம் சொன்னார்.....
ஒரு கட்டு சுள்ளியில் ஒரு சுள்ளி நல்ல சுள்ளி
எதிரணியின் கண்களிலோ என்றென்றும் ஓராயிரம் கொள்ளி
நாம் இன்று இந்த மகத்தான உலக சாதனையை செய்துள்ளோம்... இதை காண அந்த வள்ளுவர் இல்லையே என்று என் மனம் கவலை கொண்டாலும், வாழும் வள்ளுவனான நான் கண்டுகளித்ததை கண்டு என் தமிழினம் உவகை கொண்டதே....

அவர் கண்டால் என்ன, நீங்கள் கண்டால் என்ன என்று காலை அருமை தம்பி ஆற்காட்டார் சொன்னாரே. அவரல்லவோ தீர்க்கதரிசி...
உங்களுக்கே தெரியும்... நான் புகழ்ச்சியை விரும்பாதவன் என்று.... ஆனாலும், வரும் வழியில் எனக்கு நிறைய அளவில் கட் அவுட்டுகள் வைக்கப்படவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்...

புகழை தேடி அலைபவனல்ல நான்... புகழ் என்னை தேடி வரும்... இதோ வந்துவிட்டதே... வாருங்கள் கவிஞர் புகழேந்தி அவர்களே.... இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்ற நேரத்தில், எங்களை வாழ்த்தி ஒரு வெண்பா பாடுங்கள் என்று நான் கேட்கமாட்டேன்... ஆனால், நீங்களாக பாடுவீர்கள் என்று எனக்கு தெரியும்...
ஒரு ரூபாய்க்கு அரிசியும், 50 ரூபாய்க்கு மளிகையும், மிக குறைந்த அளவே மின்சார கட்டணமும் செலுத்த வைத்தது என் அரசு...

மின்வெட்டு அமலில் இருந்ததால், மின்சார தேவையே இல்லை... அதுதான் மின்சார கட்டணமும் குறைவு என்று ஒருவர் சொன்னார்.. அவர் எதிர் கழக தொண்டராகத்தான் இருப்பார்... அடுத்தவரின் சாதனைகளை கூட சோதனையாக பார்க்கும் உயர்ந்த மனது அவருக்கு...

நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தம்பி எடியூரப்பா அவர்கள் என்னிடம் "மானாட மயிலாட" படப்பிடிப்பை மைசூர் பிருந்தாவன் தோட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்துள்ள பசுமை பிண்ணனியில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்...

தம்பிகள் ஆற்காட்டார், துரைமுருகன், பொன்முடி ஆகியோரிடம் கலந்தாலோசித்து, நல்ல முடிவு எடுப்பதாக கூறினேன்... அந்த நிகழ்ச்சி, இங்கு உதயா டி.வி.யிலும் ஒளிபரப்ப வழி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்..
அட்ராட்ரா நாக்க முக்க, நாக்க முக்க என்ற இனிய தமிழ் பாடல் உலகெங்கும் உலா வந்து, உலகத்தமிழர்கள் செவியை அடைந்து, அனைவராலும் நன்கு ரசிக்கப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது... அந்த பாடலை கழகத்தின் கொள்கைப்பாடலாக அறிவிக்கலாமா என்று இரவு அறிவாலயத்தில் கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும்....

இப்போது இந்த வயதில் இளையவனான எனக்கு "அண்ணா விருது" வழங்கி தமிழகம் உவகை காணுகிறது... அவர்களின் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய செய்யப்போகிறேன். இன்னும் என்னென்ன விருது பாக்கி உள்ளதோ, அவை அனைத்தையும் சீக்கிரம் எனக்கு தந்துவிடுங்கள்...

ஏனெனில் :

விருது வாங்கும் தகுதி உள்ள ஒரே உலக தமிழன் நானே...
உலகில் பிறர் யாரும் அதை வாங்க நினைப்பது வீணே..

வாழ்க அண்ணா நாமம்..
நானும் போடுவேன் உங்களுக்கு நாமம்...

(அடுத்த அதிரடி பதிவு : பட்டு மாமியும், பட்டு புடவையும்)

18 comments:

நட்புடன் ஜமால் said...

நாமும் நாமம் வாங்கி வாங்கி முக அடையாளமே தெரியலையே!


-----------------------’’

அட்ரா அட்ரா நா.மு.க ...

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
நாமும் நாமம் வாங்கி வாங்கி முக அடையாளமே தெரியலையே!

-----------------------’’

அட்ரா அட்ரா நா.மு.க ...//

வாங்க ஜமால் பாய்... நாமம் வாங்கறதுக்குன்னே பொறந்தவங்க நாமதான்னு சரியா சொன்னீங்க தலைவா... அவிய்ங்க திருந்த மாட்டாய்ங்க... நாமளும் அவிய்ங்களுக்கு ஓட்டு போடாம இருக்க மாட்டோம்...

கௌதமன் said...

Very excellent satire. Keep it up!

R.Gopi said...

//kggouthaman said...
Very excellent satire. Keep it up!//

Welcome kggouthaman sir..Yes sirrr. Thanks for your visit and comment... I will try to write more, in future...

Vidhoosh said...

ஜூப்பர் ... இப்படி திருவள்ளுவருக்கும் நாமத்த சாத்திருவாங்கன்னு எதிர்பார்கல...

-வித்யா

R.Gopi said...

//Vidhoosh said...
ஜூப்பர் ... இப்படி திருவள்ளுவருக்கும் நாமத்த சாத்திருவாங்கன்னு எதிர்பார்கல...

-வித்யா//

நாம‌ம் சாத்த‌ற‌துன்னு முடிவு ப‌ண்ணின‌ப்புற‌ம் திருவ‌ள்ளுவ‌ர் என்ன‌ விதிவில‌க்கா விதூஷ்?

அவ‌ரையும் / அவ‌ருக்கும் போட்டு சாத்து...

மணிஜி said...

அன்பு உடன்பருப்பே
ஆட்டோ வரும் அஞ்சாதே
அருகில் நானும் இருப்பேன்

R.Gopi said...

//தண்டோரா ...... said...
அன்பு உடன்பருப்பே
ஆட்டோ வரும் அஞ்சாதே
அருகில் நானும் இருப்பேன்//

தண்டோரா அருகில் இருக்கும்போது எனக்கென்ன பயம்??

இப்போ துபாய்க்கு நேரா ஆட்டோ விட்டாச்சா??

ஈ ரா said...

தூள் கோபிஜி ...

ஒரு ரேஞ்சாத்தான் பயிட்டு இருக்கீங்க.....

R.Gopi said...

//ஈ ரா said...
தூள் கோபிஜி ...

ஒரு ரேஞ்சாத்தான் பயிட்டு இருக்கீங்க.....//

வாங்க‌ ஈ.ரா...

என்ன‌ ப‌ண்ற‌து... இன்னிக்கு "த‌ல‌"தான் மாட்டினாரு... அதான்... அவ‌ர‌ போட்டு...சாத்தியாச்சு... ஏதோ ந‌ம்மால‌ முடிஞ்ச‌து...

Raju said...

\\விருது வாங்கும் தகுதி உள்ள ஒரே உலக தமிழன் நானே...
உலகில் பிறர் யாரும் அதை வாங்க நினைப்பது வீணே..\\

இதுதான் டாப்டக்கர்.
ஜி. "பொன்னை சங்கர்" " நீயின்றி நானில்லை"ய வுட்டுட்டீங்களே ஜி .

vasu balaji said...

நல்லாத்தான் சாத்துறீங்கப்பு. இனிமே தமிழக பஸ்ஸில் பாதிக்குப் பாதி சர்வக்ஞர் பாடல் இடம் பெறுமென்று எதிர்பார்க்கலாமா?

R.Gopi said...

//டக்ளஸ்... said...
\\விருது வாங்கும் தகுதி உள்ள ஒரே உலக தமிழன் நானே...
உலகில் பிறர் யாரும் அதை வாங்க நினைப்பது வீணே..\\

இதுதான் டாப்டக்கர்.
ஜி. "பொன்னை சங்கர்" " நீயின்றி நானில்லை"ய வுட்டுட்டீங்களே ஜி .//

வாங்க‌ ட‌க்ள‌ஸ்... இன்னும் இருக்கே... இது என்ன‌ இதோட‌ முடிய‌ போகுதா... அடுத்த‌ த‌ட‌வை வ‌ச்சு சாத்திடுவோம்...

R.Gopi said...

//வானம்பாடிகள் said...
நல்லாத்தான் சாத்துறீங்கப்பு. இனிமே தமிழக பஸ்ஸில் பாதிக்குப் பாதி சர்வக்ஞர் பாடல் இடம் பெறுமென்று எதிர்பார்க்கலாமா?//

வாங்க‌ வான‌ம்பாடிக‌ள்... ஏன் பாதிக்கு பாதி... "தல‌" சொன்னா, முழுசுக்கு முழுசா எதிர்பார்க்க‌லாம்...

Anonymous said...

நாமத்துக்கு திருவள்ளுவரும் விதிகல்ல என்பது புரிகிறது....

R.Gopi said...

//தமிழரசி said...
நாமத்துக்கு திருவள்ளுவரும் விதிகல்ல என்பது புரிகிறது....//

நம்ம ("தல") பேச்சு என்னிக்குமே ஒரே பேச்சுதான்...

நாமம் போடறதுன்னு முடிவு பண்ணினப்புறம் அந்த ஐயனும் விதிவிலக்கல்ல...

நாமம் உனக்கு போட வந்தேன் ஐயனே, என் ஐயனே....
நாமம் உனக்கு போட்டு விட்டேன் ஐயனே, என் ஐயனே....

இதுதான் "தல" ஸ்டைல்...

Prabhu said...

Naama thirundhavum mattom, thirundhavum vidamattom..

tholaikatchi kuduthal makkal prechanai theerum enbadhu avarudaya aarudam..

Adhe pol silai veithal ella prechanaiyum theerum enbadhu avarudaiya thandhiramaga kooda irukkalam...

R.Gopi said...

//Prabhu said...
Naama thirundhavum mattom, thirundhavum vidamattom..

tholaikatchi kuduthal makkal prechanai theerum enbadhu avarudaya aarudam..

Adhe pol silai veithal ella prechanaiyum theerum enbadhu avarudaiya thandhiramaga kooda irukkalam...//

வாங்க பிரபு... தங்கள் வருகைக்கும் நன்றி... நீங்கள் சொல்வது 100% சரி...

தொடர்ந்து வாருங்கள்...