எங்கள் “சித்தம்” குறும்படத்திற்கு தோழமைகள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி...
சமீபத்தில் நான் கண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... அந்த விஷயம் பார்த்த நான் ஆடி போய் விட்டேன்...
உதாரணமாக, நம் உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை அளவு நம் அண்டை நாடான பாகிஸ்தானை விட அதிகம்...
நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை இங்கிலாந்து நாட்டை விட அதிகம்....
கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள தகவல்கள் உங்களையும் ஆச்சரியப்படுத்தும் என்று நினைக்கிறேன்...
நாம் மீண்டும் மீண்டும் இந்த மக்கள்தொகை பெருக்கத்தில் நிகழ்த்தும் சாதனைகளை சற்றே திசைதிருப்பி வேறு பல வழிகளிலும் முயற்சித்தால், உலகளவில் அனைத்து துறைகளிலும் சாதனை முத்திரை பதிக்க இயலும்...
முடிந்தால் முடியாதது எதுவுமில்லை... அனைத்து துறைகளிலும் சாதனை செய்ய முயற்சிப்போம்... சாதனை செய்வோம்...
(ஆர்.கோபி)
15 comments:
சிந்திக்க வேண்டிய விஷயம்தான். நல்ல பகிர்வு. நன்றி.
//நாம் மீண்டும் மீண்டும் இந்த மக்கள்தொகை பெருக்கத்தில் நிகழ்த்தும் சாதனைகளை சற்றே திசைதிருப்பி வேறு பல வழிகளிலும் முயற்சித்தால், உலகளவில் அனைத்து துறைகளிலும் சாதனை முத்திரை பதிக்க இயலும்...
// அருமையாக சொல்லி இருக்கீங்க.சிந்தித்து செயல் பட வேண்டியது இந்தியர்களின் கடமை.
.......ஆஆஆஆஆஆ..... அப்படியே ஷாக் ஆயிட்டேன்!
பதிவை படித்து பின்னூட்டம் இட்ட தோழமைகள் :
திருமதி கிருஷ்ணன்
ஸாதிகா
ஆகியோர்க்கு என் மனம் கனிந்த நன்றி..
பல துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டால், நிச்சயமாக நம்மால் பல துறைகளிலும் சாதனை படைக்க இயலும்...
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ஹா..ஹா...ஹா....
வாங்க சித்ரா, மகராஜன்...
நிஜமாகவே நான் ஆடி தான் போய் விட்டேன்...
அது என்ன மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டும் சாதனை? மற்ற விஷயங்கள்?
இதுல சீக்கிரமா சீனாக்காரன முந்தனும்...
//சங்கவி said...
இதுல சீக்கிரமா சீனாக்காரன முந்தனும்...//
*********
ஹா...ஹா...ஹா...
டெர்ரர் ஐடியாஸ் கொடுப்போர் சங்கத்தின் தலைவரே வருக... வருக....
அப்படியே இந்தியாவின் சாதனைகளையும் பட்டியலிட்டிருக்கலாமே!!
சிந்திக்கவேண்டிய விஷயம். ம்..
என்னத்த சொல்ல - மக்கள் சக்தி மனித வளம் -அபரிமிதமாக நம்மிடம் உள்ளது ,சீனா இந்த மனித வளத்தை செம்மையான முறையில் பயன் படுத்துவதால் வளர்ச்சி அடைகிறது ,நாம் அதை பயன்படுத்த தயங்குவதால் தளர்ச்சி அடைகிறோம்
ஊழலிலும் பெருசு
சரியாதான் சொல்லி இருக்கீங்க.
உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகை அதிகமா, ஆனால் இன்னும் பழமை நாடா தான் இருக்கு அங்கு.
// இராஜராஜேஸ்வரி said...
அப்படியே இந்தியாவின் சாதனைகளையும் பட்டியலிட்டிருக்கலாமே!!//
********
வாங்க இராஜராஜேஸ்வரி...
இன்றைய சுதந்திர இந்தியாவின் சாதனைகளாக வெளியுலகம் அறிவது பல லட்சகணக்கான கோடிகள் அளவிலான ஊழல்களே...
அதை தான் அனைத்து ஊடகங்களும் செய்தி ஆக்கி விட்டனவே...
தங்களின் மேலான வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி..
வெங்கட் நாகராஜ்
சுனீல் கிருஷ்ணன்
எல்.கே.
ஜலீலா கமல்
Post a Comment