Friday, August 7, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-7)





வேற்று மொழி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த தமிழ் திரைப்படங்கள்.
மோகன்பாபு : கர்ஜனை, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்.
விஷ்ணுவர்தன் : "விடுதலை" மற்றும் "ஸ்ரீ ராகவேந்திரர்" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
அம்பரீஷ் : "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.
சிரஞ்சீவி : "ராணுவ வீரன்", "மாப்பிள்ளை" படங்களில் உடன் நடித்து இருப்பார். மம்மூட்டி : "தளபதி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
மது : "தர்மதுரை" படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து இருப்பார்.
அம்ரீஷ் பூரி : "தளபதி" மற்றும் "பாபா" படங்களில் வில்லனாக நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ஒருவர் ரஜினியின் தம்பியாக "பாட்சா" படத்தில் நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ரவிச்சந்திரன் "நாட்டுக்கு ஒரு நல்லவன்" என்ற படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் நடிகர் கன்னட பிரபாகர் அவர்கள் "தாய் மீது சத்தியம்", "அண்ணாமலை", "முத்து" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஷீலா அவர்கள் ரஜினியுடன் "சந்திரமுகி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
ஜெயபாரதி அவர்கள் ரஜினியுடன் "முத்து" படத்தில் நடித்து இருப்பார்....
மேலும் சில தகவல்கள்.

கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "நிழல் நிஜமாகிறது" தமிழ் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, தமிழில் கமலஹாசன் ஏற்று நடித்த வேடத்தை ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார்.

நான்கு மொழிகளில் எடுக்கப்பட்ட படமான "நாட்டுக்கு ஒரு நல்லவன்" தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசானது. ஆனால், அதன் ஹிந்தி பதிப்பான "ஷாந்தி கிராந்தி" இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

ரஜினி அவர்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடன் தமிழிலிருந்து இருவருக்கு ஹிந்தி படங்களில் பணிபுரிய வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

1. ஜூடோ ரத்னம் - ரஜினி நடித்த "ஜான் ஜானி ஜனார்தன்", "கங்குவா" போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

2.காமெடி நடிகர் செந்தில் ரஜினி நடித்த "பூல் பனே அங்காரே" படத்தில் நடித்து இருப்பார். கரகாட்டக்காரன் படத்தில் செய்த "வாழைப்பழ" காமெடியை இதில் மாற்றி "பான் பீடா" காமெடி செய்து இருப்பார்.

1987-88 வருடத்தில் அமிதாப் பச்சன் தலைமையில் ஒரு குழு ஸ்டார்நைட் நிகழ்ச்சிக்காக "இங்கிலாந்து" சென்றது. அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கேர், கோவிந்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த சமயத்தில்தான், ரஜினியின் ஹேர்ஸ்டைல் மாறியது. சூப்பர் ஸ்டாரின் அந்த புதிய ஹேர்ஸ்டைல் அனில்கபூரின் ஹேர்ஸ்டைலை போலிருந்தது. இந்த புதிய ஹேர்ஸ்டைல்தான் "குருசிஷ்யன்" படத்தில் தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து அடிதடி படங்களிலேயே நடித்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த மிக முக்கியமான படம், மறைந்த முன்னாள் டைரக்டர் ராஜசேகர் டைரக்ஷனில் வெளிவந்த "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படம்தான், ரஜினியின் காமெடி / நகைச்சுவை நடிப்பை முழுதுமாக வெளிகொணர்ந்தது என்றால், அது மிகையாகாது.

இந்த படம் வெளியீட்டின் போது, படத்தின் போஸ்டர்களில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரை மோதலில் தூள் கிளப்பி வந்த ரஜினிகாந்த், இப்போது, காதலிலும் தூள் கிளப்புகிறார்.

இதுவரை கைகலப்பில் தூள் பரத்தி வந்த ரஜினிகாந்த், இப்போது கலகலப்பிலும் தூள் பரத்துகிறார்.

1977-ம் வருடத்தில் 15 படங்களிலும், 1978-ம் வருடத்தில் 20௦ படங்களிலும் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

(இன்னும் வரும்....)

9 comments:

நட்புடன் ஜமால் said...

கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "நிழல் நிஜமாகிறது" தமிழ் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, தமிழில் கமலஹாசன் ஏற்று நடித்த வேடத்தை ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார்.]]


இந்த தகவல் எனக்கு புதுசு ...

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "நிழல் நிஜமாகிறது" தமிழ் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, தமிழில் கமலஹாசன் ஏற்று நடித்த வேடத்தை ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார்.]]

இந்த தகவல் எனக்கு புதுசு ...//
---------------------
வாங்க ஜமால் பாய்

புதிய மற்றும் சற்றேனும் சுவாரசியமும் கலந்ததுதானே என் இந்த தொடரின் நோக்கம்...

வருகைக்கும், கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி....

கயல்விழி நடனம் said...

தம்பிக்கு எந்த ஊரு படத்துல தானே அந்த பாம்பு காமெடி செண்டிமெண்ட் ஆரமிச்சது???? :)

R.Gopi said...

கயல்விழி நடனம் said...
தம்பிக்கு எந்த ஊரு படத்துல தானே அந்த பாம்பு காமெடி செண்டிமெண்ட் ஆரமிச்சது???? :)//

அதே அதே.....பா....பா.....பா....பாம்பு....... ய‌ப்பா!!!

Unknown said...

Nizhal Nijamaagiradhu is made as Chilakamma Cheppindhi in Telugu. A small correction Thalaivar did Sarathbabu's role in that movie and not Kamal's.

But Thalaivar did Kamal's rold in Moondru Mudichu. Yes Moondru Mudichu's original is Matroru Seetha or Mattoru Seetha from Malayalam and Kamal did villain role in that movie and Thalaivar did that same role in Tamil.

Unknown said...

How to write in tamil here? Please let me know.

R.Gopi said...

//PREMANAND said...
Nizhal Nijamaagiradhu is made as Chilakamma Cheppindhi in Telugu. A small correction Thalaivar did Sarathbabu's role in that movie and not Kamal's.

But Thalaivar did Kamal's rold in Moondru Mudichu. Yes Moondru Mudichu's original is Matroru Seetha or Mattoru Seetha from Malayalam and Kamal did villain role in that movie and Thalaivar did that same role in Tamil.//

Welcome Premanand... Let me check both the details, mentioned by you.

//PREMANAND said...
How to write in tamil here? Please let me know.//

Try this to write in Tamil...

http://www.higopi.com/ucedit/Tamil.html

R.Gopi said...

தொடரின் இந்த பகுதிக்கு வாக்களித்து பிரபலமாக்கிய‌ உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

Kummachi
muthu04
ecanadatamil
MVRS
Mahizh
jntube
VGopi
chuttiyaar
easylife
subam
Srivathsan
dgdg12

Mrs. Krishnan said...

Ariya thagavalgal. Nanri